Sunday, 18 November 2012

ஒரு குடும்பத்தில் யாருடைய ஜாதகத்திற்கு வலிமை அதிகம்?

ஒரு தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பாக கணவரின் ஜாதகத்திற்கே வலிமை அதிகம். ஆனால் குழந்தைகள் பிறந்த பின்னர் அந்தக் குழந்தைகளின் ஜாதகமே பிரதானமாக வேலை செய்யும். இதில் ஆண்/பெண் என்ற பேதம் இல்லை. 

பிள்ளைகள் பிறந்த பின்னர் தாய், தந்தையர் ஜாதகத்தை பார்த்துக் பலன் கூறினால் சரியாக வராது. மாறாக பிள்ளைகளின் ஜாதகத்தை வைத்தே அந்த குடும்பத்தின் நலனைப் பற்றி கணிக்க வேண்டும்.

ஒரு சில வீடுகளில் தந்தைக்கு மிகப்பெரிய யோக தசை நடக்கும், ஆனால் அவர் மகனுக்கு மிக மோசமான தசை நடந்து கொண்டிருக்கும். தந்தையின் ஜாதகத்தை கணித்துப் பார்த்தால், அவருக்கு வீடு வாங்கும் யோகம் இருக்கும். ஆனால் மகனின் ஜாதக அமைப்பு காரணமாக அவர் இருக்கும் வீட்டை விற்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி இருப்பார். 

எனவே, ஒரு குடும்பத்தில் குழந்தைகள் பிறக்கும் வரை அந்தக் குடும்பத் தலைவரின் ஜாதகத்திற்கு வலிமை அதிகம். வாரிசுகள் வந்து விட்டால் அவர்களின் ஜாதகம்தான் குடும்பத்தின் ஏற்றத் தாழ்வுகளை முடிவு செய்யும். குறிப்பாக தலைப்பிள்ளையின் (முதல் வாரிசு) ஜாதகத்திற்கு வலிமை அதிகம்.

1 comment: