Sunday 18 November 2012

காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது?

மன்னர் காலத்திற்கு முன்பாகவே காலில் விழுந்து வணங்கும் முறை நடைமுறையில் இருந்ததாக பழங்கால நூல்கள் கூறுகின்றன. பெரியவர்களின் ஆசியை பெறுவதற்கும், இறைவன் அருளைப் பெறுவதற்கும் காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியதாகவும் கூறப்பட்டுள்ளது. 

வணங்கும் முறையில் பல வகை உண்டு. இரு கைகளையும் ஒன்று சேர்த்து தலைக்கு மேல் வைத்து இறைவனை வணங்குகிறோம். அதற்கு அடுத்தபடியாக மார்புக்கு நேராக கழுத்துக்கு கீழ் இரு கைகளையும் சேர்த்து சக மனிதர்களை வணங்குகிறோம். 

வயிற்றின் (நாபியில்) மேல் ஒரு கையை மட்டும் கைவைத்து குனிந்து வணங்குதல் என பல முறைகளில் வணங்குவதை கடைபிடிக்கிறோம். குரு, சித்தர்களை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். மண்ணோடு மண்ணாக தன்னை இணைத்துக் கொள்வதே இதன் பொருள். 

கோயில் கொடி மரத்திற்கு முன்பாக வணங்கும் போது அங்கம் அனைத்தும் தரையில்படும் விதமாக வணங்க வேண்டும். இவ்வாறு வணங்குவதில் கூட பல முறைகளை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.

1 comment:

  1. பகைவனாக இருந்தாலும், காலில் விழுந்து பணியும் போது, அத்தனை குரோதத்தையும் மறந்து, அவர்களை அறியாமலே, வாய் வாழ்த்த ஆரம்பிக்கும். அவர்களின் நல்லாசிகள் போலியாக இல்லாமல் உண்மையான மனதுடன் ஆசி கிடைக்கும். காலில் விழுந்தவரும் நல்லாயிருப்பர், ஆசி வழங்கியவரும் நலமுடன் இருப்பர். பகவானைத் துதிக்கும் போதும் அப்படிதான். தரையோடு விழுந்து பணிவுடன்(தன்னைத் தாழ்த்திக் கொள்வதாக அர்த்தம்) வணங்கி பகவானிடம் ஆசி கேட்டால், நாம் செய்த தவறுகளை மன்னித்து, பகவானின் ஆசி கிடைக்கும். பகவானின் உள்ளமும் குளிரும் என்பதே!.

    ReplyDelete