Monday, 12 November 2012

செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷம்
திருமணப்பேச்சு எடுத்ததும் பெற்றோர்கள் தங்கள்மகன்/மகளுக்கு செவ்வாய் தோசம் இருக்குமோ என்ற கவலையோடுதான் ஜோதிடர்களை அணுகுவர். மேலும் சிலர் இப்போது நடைபாதைக்கடைகளில் கிடைக்கும் ஜோதிடபுத்தகங்களைப்படித்து விட்டு செவ்வாய் இரண்டில் இருக்கிறது எட்டில் இருக்கிறது எனக்கவலைப்படுகிறார்கள், இளையதலைமுறையினரும் தங்களுக்கு செவ்வாய் தோசம் இருக்கிறதா நல்ல கணவன், மனைவி அமைவார்களா, குழந்தை பாக்கியம் எப்படி என அவர்களாகவே ஒரு விதியைப்படித்துவிட்டு கவலை உறுகின்றனர். செவ்வாய் தோசத்தின் விதிகள் விதிவிலக்குகள் பற்றி பார்ப்போம்.

ஜென்ம லக்கினத்திலிருந்து எண்ணும் போது செவ்வாய் (அங்காரகன்,குஜன்) 2,4,7,8,12 ஆம் இடத்தில் இருப்பின் செவ்வாய்தோஷம். செவ்வாய் தன் ஆட்சி, உச்ச நீச்சவீடுகளில் (மேஷம், விருச்சிகம், கடகம், மகரம்) இருந்தாலும், ,குரு, சனி,ராகு,கேது இவர்களுடன் சேர்ந்திருந்தாலும், இவர்களால் பார்க்கப்பட்டா
லும் தோஷ நிவர்த்தியாம். கடகம்,சிம்ம லக்கினமாயின் செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை. செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்திற்கு தோஷம் உள்ள ஜாதகத்துடன் பொருத்தலாம், ஜென்ம லக்கினத்திற்குப் பார்ப்பதைப் போன்றே சந்திரன்,சுக்கிரனுக்கும் செவ்வாய் பார்க்கப்படும்.இருதார தோஷம் தரும் செவ்வாய் தோஷத்திற்கு "கதலி விவாஹ" பரிகாரம் செய்யவும் (சூரியனுடன் சேர்ந்த செவ்வாய்). கீழ்வரும் அட்டவணைப்படி செவ்வாய் இருப்பினும் தோஷம் இல்லை.

செவ்வாய்இருக்கும் இடம் லக்கினம்
2ஆம் இடம் மிதுனம், கன்னி
4ஆம் இடம் மேசம்,விருச்சிகம்
7ஆம் இடம் கடகம், மகரம்
8ஆம் இடம் தனுசு, மீனம்
12 ஆம் இடம் ரிஷபம் துலாம்.

மேலும் பரிகாரங்கள் வழிபாடுகள் செய்தபின்னும் சிலர் செவ்வாய்தோச முள்ள வரனாகத் தேடிக்களைத்துப் போகிறார்கள்

No comments:

Post a Comment