Monday, 31 December 2012

நவ(9) வாசல் கொண்ட நம் உடம்பில் உள்ள 96 தத்துவங்கள்


நவ(9) வாசல் கொண்ட நம் உடம்பில் உள்ள 96 தத்துவங்கள்

இறைவனின் படைப்பு துருவ வேற்றுமை ஒற்று மைகளாக, வினையும் எதிர்வினையும் கொண்ட வைகளாக, இது வரையிலும் அவிழ்க்க முடியாத புதிராகவும் உள்ளது. அவைகளில் சிலவற்றை ஞான, விஞ்ஞான, அஞ்ஞான, வேதாந்த விளக்க ங்களின் மூலம் ஆன்றோர்கள், சான்றோர்கள் விளக்கி உள்ளனர். அறிந்து கொள்வோமா!!!!
அறிவு …………………………………..1 புத்தி
வினைகள் …………………………..2 நல்வினை, தீவினை
ஆசைகள் …………………………….3 மண், பொன், பெண்
அந்த கரணங்கள்…………………4 மனம், புத்தி, அகங்காரம், சித்தம்
பஞ்சபூதங்கள்…………………5 (பிருதிவி/பூமி/நிலம்/மண்),(அப்பு/ஜலம்/ நீ​ர் / புனல்) , (தேயு / அக்னி / நெருப்பு / அனல்), (வா​யு / கால் / கற்று / கனல்), (ஆகாயம் / வெளி / வானம் / விசும்பு)
பஞ்ச ஞானேந்திரியங்கள்….5 மெய், ,கண், மூக்கு, செவி
பஞ்ச கன்மேந்திரியங்கள்….5 (வாக்கு-வாய், பாணி-கை, பாதம்-கால், பாயுரு-மலவாய், உபஸ்தம்-கருவாய்)
பஞ்ச தன்மாத்திரைகள்.…….5 (சுவை-ரசம், ஒளி-ரூபம், ஊறு- ஸ்பரிசம்,  ஓசை-சப்தம், நாற்றம்-கந்தம்)
பஞ்சகோசங்கள்………………….5 (அன்னமய கோசம், பிராமணய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்)
மூன்று மண்டலங்கள………..3 ( அக்னி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் )
குணங்கள்…………………….​……..3 ராஜசம், தாமசம், சாத்வீகம்.
மலங்கள்……………………..​………3 ஆணவம், கன்மம், மாயை
பிணிகள்……………………..​……….3 வாதம், பித்தம், சிலேத்துமம்.
ஏட…………………………………​……..3 லோக ஏடணை, அர்த்த ஏடணை, புத்திர ஏடணை.
ஆதாரங்கள்…………………..​…….6 மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா
அவஸ்தைகள்…………………….​5 சாக்கரம்-நனவு, சொப்பனம்-கனவு, கழுத்தி-உறக்கம், துரியம்-நிஷ்டை, துரியாதீதம்-உயிர்ப்படக்கம்
தாதுக்கள்……………………​……….7 இரசம், இரத்தம், மாமிசம், மேதஸ், அஸ்தி, மச்சை, சுக்கிலம்/சுரோனிதம்
ராகங்கள்.……………………​……….8 காமம், குரோதம், லோபம், மோகம், மதம்,  மாச்சர்யம்,  இடம்பம், அகங்காரம்.
தசநாடிகள்…………………….​ …..10 இடகலை/இடபக்க நரம்பு, பிங்கலை /வலபக்க நரம்பு, சுழுமுனை/நாடு நரம்பு, சிகுவை/உள்நாக்கு நரம்பு, புருடன்/வலக்கண் நரம்பு, காந்தாரி/இடக்கண் நரம்பு, அத்தி/வலச்செவி நரம்பு, அலம்புடை/இடச்செவி நரம்பு, சங்கினி/கருவாய் நரம்பு, குகு/மலவாய் நரம்பு.
தசவாயுக்கள்……………………..10பிராணன்/உயிர்க்காற்று, அபாணன்/ மலக்கற்று, வியானன்/தொழிற்காற்று,உதானன்/ஒலிக்காற்று, சமானன் /நிரவுக்காற்று, நாகன்/விழிக்காற்று,கூர்மன்/இமைக்காற்று, கிருகரன்/ தும்மல்காற்று,தேவதத்தன்/கொட்டாவிக்காற்று, தனஞ்செயன்/வீங்கல் காற்று.
ஆக கூடுதல் 96 தத்துவங்கள்.ஆகும்

12 comments:

  1. அய்யா வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். தங்கள் பதிவை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து கவனிக்கப் போகிறேன்.

    ReplyDelete
  2. எனவே...

    *மும்மலம் அழிந்த இடம் திருவதிகை.*


    திருச்சிற்றம்பலம்

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  3. திருக்கோவலூர் வீரட்டம்....!

    கோவலூர் என்பது.... ஊரின் பெயர்.
    வீரட்டம் என்பது... கோயிலின் பெயர்.
    *வீரட்டம் என்றால்... வீரத்தைக் காட்டிய இடம்.*

    திருஞானசம்பந்தரால்.... "கோவலூர்தனுள் வீரட்டானஞ் சேர்துமே என்னும் தேவாரப் பகுதியால் அறியலாம்.

    இறைவரது திருப்பெயர் −வீரட்டநாதர்

    இறைவியாரது திருப்பெயர் −சிவானந்தவல்லி

    தீர்த்தம் − பெண்ணையாறு

    இது பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ளது.

    *இது நடுநாட்டுத் தலங்கள் இருபத்திரண்டில், பதினொன்றாவ தாகும்.*

    மலாடர் கோமானாகிய மெய்ப்பொருள் நாயனார், தம்மோடு பலமுறை போர் புரிந்து தோற்ற முத்தநாதனால், வஞ்சனையால் உயிருக்கு இறுதி நேர்ந்த இடத்தும்...*மெய்ப்பொருள் வேடமே மெய்ப்பொருள்* எனும் உறுதியால், அவனைக் காத்து கூத்தப்பெருமான் திருவடி நீழல் அடைந்த பதி இதுவாகும்.

    இத்திருக்கோவிலுக்கு... சம்பந்தர் பதிகம் ஒன்றும், அப்பர் பதிகம் ஒன்றுமாக இரு பதிகங்கள் இருக்கின்றன.


    *பண்ருட்டியில் இருந்தும், திருவண்ணாமலையில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.*

    *அடியேன்.. விழுப்புரத்தில் வசிக்கும்போது.. சென்று வந்த தலம்.*


    Mon. 27, Mar. 2023 at 8.28 pm.

    அட்ட வீரட்டம் :

    அஷ்ட (அட்ட) = எட்டு.
    அட்டம் = அழித்த இடம்.

    வீரட்டம் = இறைவன் அரக்கனைத் தன் வீரத்தால், மறக் கருணையால் அழித்த இடங்கள்.

    இவை... வீரட்டானம் அதாவது அட்ட வீரட்டத் தலம் எனப்படும்.

    அவை....

    1) திருவதிகை
    2) திருக்கடவூர்
    3) திருக்கொறுக்கை
    4) வழுவூர்
    5) திருக்கோவலூர்
    6) திருப்பறியலூர்
    7) திருக்கண்டியூர்
    8) திருவிற்குடி.


    பாடல்....!

    கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
    வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
    வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
    குருத்துயர் சூலம்கைக் கொண்டுகொன் றானே.


    கருத்துறை அந்தகன் = விழிப்பார்வை அற்றவன்.
    அதாவது.... அறிவிலே இருக்கிற பார்வையற்ற தன்மை, அறியாமை, அறிவுக் கண் கொண்டு நோக்காமை என்ற பொருள்.

    குருத்துயர் சூலம் = திரிசூலம்.
    நீண்டு சுடர் விடும் மூன்று பிரிவாக இருக்கிற சூலாயுதம்.

    கதை...

    குருடனைப் போன்ற ஒரு அசுரன் "அந்தகாசுரன்".

    இவன் தான் பெற்ற " வரத்தின் " வலிமையால்... உலகத்து உயிர்களை எல்லாம் துன்புறுத்துகிறான் என்று...
    தேவர்கள் எல்லாம் சென்று ஈசனிடம் முறையிட.. அதாவது வானவர் வேண்டப் பெருமானும் தன் "மூவிலைச் சூலத்தால்" அசுரனை அழித்தான்.

    இக்கதையின் கருத்து யாதெனில்....

    அறியாமையை... அசுரனாகவும்; அதை அழிக்க வல்லது...ஞானமாகிய சூலாயுத மாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த அறியாமை என்னும் அரக்கன் அழிய... இறைவனருள் வேண்டும் என்பதைச் சுட்ட... "வானவர் வேண்ட" எனக் கூறப்பட்டது.

    அந்தகாசுரனை அழித்த இடம்.... திருக்கோவலூர். (அதாவது அறியாமையை அழித்த இடம்).

    திருச்சிற்றம்பலம்

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  4. Wed. 22, Mar. 2023 at 8.55 pm.

    தட்டச்சுப்பொறி ஒர் அறிமுகம்....!


    தட்டச்சுப்பொறி முதன் முதலில் இங்கிலாந்து தேசத்தைச் சேர்ந்த... ஜான் ஹென்றி மில் என்னும் ஆங்கிலேயரால்...1714−ஆம் ஆண்டுக் கண்டு பிடிக்கப்பட்
    டது.

    அவருக்குப் பின்...1829−ஆம் ஆண்டு வில்லியம் ஆஸ்டின் பர்ட் என்பவர் கண்டு பிடித்தார்.

    இவர்கள் இருவரும் கண்டுபிடித்த பொறிகள்... திருத்தம் பெறாததாகவும்..
    அமைப்பில் குறைபாடுடையனவாகவும் இருந்தன.

    1843−ஆம் ஆண்டில், சார்லஸ் தர்பெர் என்னும் அமெரிக்கர்... எழுத்தச்சுகள் ஒன்றன்பின் ஒன்றாக விழும்படியும், பக்கவாட்டு நகர்தலுடனும், உருளையுடனும்கூடிய பொறியைத் தயாரித்தார்.

    இந்தப் பொறியானது, பேனாவினால் எழுதுவதைக் காட்டிலும்... மிக மெதுவாகவே தட்டச்சு செய்யும் நிலையில் இருந்தது.

    அமெரிக்காவில், 1867−ஆம் ஆண்டு சார்லஸ் லிதம் ஷோல்ஸ், கிளைடன்,
    S. W சோலஸ் ஆகிய மூவரும் கூட்டாகச் சேர்ந்து.. செப்பமுறாத பொறியை உருவாக்கினார்.

    அதன்பின் மேற்கண்ட மூவருள்... கிளைடன், S.W சோலஸ் ஆகிய இருவரும் பணியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டனர்.

    பின்னர்... சார்லஸ் லிதம் ஷோல்ஸ்.. இயந்திர அமைப்பு வல்லுநரான...
    யோட்ஸ் என்பவரோடு கூட்டுச் சேர்ந்து...
    டென்சினர் என்பவர் அளித்த பண உதவி யால், நன்முறையில் செம்மைப் படுத்திய
    அதாவது யாதொரு குறைபாடும் இல்லாத எழுத்துகளும், எண்களும் கூடிய ஒரு பொறியைக் கண்டுபிடித்து, அதற்குத் *தட்டச்சுப்பொறி" என்னும் பெயர் சூட்டினார்.

    இத்தட்டச்சுப் பொறியை உற்பத்தி செய்யும் உரிமையை நியூயார்க்கில் துப்பாக்கிகளைத் தயாரிக்கும் நிறுவன மான தி. ள். ரெமிங்டன் என்னும் நிறுவனத்தார் பெற்று, அதற்கு "ரெமிங்டன்" என்று தங்களது நிறுவனத் தின் பெயரையே வைத்து, 1873− ஆம் ஆண்டு சந்தைக்குக் கொண்டு வந்தனர்.

    சார்லஸ் லிதம் ஷோல்ஸ் , அவர்களுக் குப் பிறகு பலர் நன்முறையில் இயங்கக் கூடிய, பலவித மாறுதல்களுடன் கூடிய தட்டச்சுப் பொறிகளை உருவாக்கினர்.

    இத்தட்டச்சுப் பொறிகளை, மற்ற நிறுவனங்களும் உற்பத்தி செய்து, அதற்குத் தங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயல்களைச் சூட்டிச் சந்தையில் விற்றனர்.

    அவை... உலக மக்களின் பயன்பாட்டுக் குக் கிடைத்தன.

    அத் தட்டச்சுப்பொறிகள்....

    ரெமிங்டன், யோஸ்ட், நியூசெஞ்சுரி, டென்ஸ்மோர், எம்பயர், அண்டர்வுட், ஸ்மித் பிரிமியர், ஆலிவர், ஆர்ம்ஸ்ட்ராங், ஸ்டாண்டர்டு போல்டிங், ஸ்டெர்ன்ஸ் விசிபில், பாக்ஸ் விசிபில், சன், சால்டர், விக்டர், நாய்ஸ்லெஸ் எல்.சி.ஸ்மித், மானர்க், உட்ஸ்டாக், ஸ்டாண்டர்டு விசிபில், ராயல், ரெக்ஸ் விசிபில், மோலி, மெர்ஸிடீஸ், டிமெளன்டபள், எலைட், இம்பீரியல், பிரிட்டிஷ் எம்பயர், ஆல் பிரிட்டிஷ் பார்லாக், காப்பெல், மெர்ஸ், ஒர்கா, பிரைவேட், கரோனா, ஒலம்பியா, ஹெர்மெஸ், பிரிட்டிஷ் இம்பீரியல், டார்பெடோ, நாமானு ஐடியல்,ஆட்லர், ஆலிவெட்டி, ஹால்டா, பாசிட், காட்ரெஜ்.

    ReplyDelete
  5. இவற்றில் .... தமிழ் தட்டச்சு பொறிகள்...
    "உட்ஸ்டாக், நாமானு ஐடியல், பாக்ஸ், மெர்ஸிடீஸ், ரெமிங்டன், ஹால்டா,
    ஆர். சி அல்லென், பாசிட் காட்ரெஜ்.

    இந்தியாவிற்குத் தட்டச்சுப்பொறி வந்தது... 1876−ஆம் ஆண்டில் தான் இந்தியாவின் புழக்கத்திற்கு வந்தது.

    1896− ல் ஒருமைப்படுத்தப்பட்ட விசைப் பலகை அறிமுகப்படுத்தப்பட்டது.

    1915−ல் சத்தமில்லாத ரெமிங்டன் தட்டச்சுப்பொறி புழக்கத்திற்கு வந்தது.

    1920−ஆம் ஆண்டு, "ஜேம்ஸ் ஃபீல்டு −ஸ்மாத்தர்ஸ் " என்பவரால்.... "மின்தட்டச்சுப்பொறி" கண்டு பிடிக்கப் பட்டது.

    சென்னையில்.... மின்தட்டச்சுப் பொறியை " இந்துஸ்தான் டெலி பிரின்டர்ஸ் நிறுவனத்தார் உற்பத்தி செய்கின்றனர்.

    1928−ல் மாற்று விசையைக் கொண்ட ரெமிங்டன் தட்டச்சுப் பொறியும்....

    1931−ல் எடுத்துச் செல்லத்தக்கதான தட்டச்சு பொறியும் வெளி வந்தன.

    தமிழ் தட்டச்சுப் பொறியைப் பொறுத்த
    வரையில் முதன் முதலில்... 1932−ல் உட்ஸ்டாக் தட்டச்சுப் பொறிகள் சந்தைக்கு வந்தன.

    இப்பொறியின் விசைப்பலகை அமைப்பு 1935−ல் ஒரு மாறுதலையும்....

    1937−ல் மற்றொரு மாறுதலையும் அடைந்தது.

    1950−ஆவது ஆண்டில் இருந்து தான் "ரெமிங்டன் தமிழ்த் தட்டச்சுப் பொறிகள் வெளிவந்தன.

    ReplyDelete
  6. இவர்கள்... விசைப்பலகை அமைப்பை... இரண்டு மூன்று முறை மாற்றி அமைத்தனர்.

    இவ்வாறு... தமிழ்த் தட்டச்சுப் பொறிகள் பலவிதமான விசைப்பலகை அமைப்பு களைக் கொண்டிருந்ததால்... இவற்றை ஆங்கிலத் தட்டச்சுப் பொறியைப்போல் ஒருமைப்படுத்துவதற்காகத் தமிழக அரசு... 1955−ஆம் ஆண்டு, மார்ச்சு திங்கள்−17−ஆம் நாள், ஒரு குழுவை நிறுவியது.

    அக்குழுவினர் அளித்த அறிக்கையைத் தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்ட நிறைவேற் றக் குழுவினர்... மேலும் ஆய்வு செய்து, அவர்கள் பரிந்துரைத்த விசைப்பலகை யின் அமைப்பைக் கொண்ட , தமிழ் தட்டச்சுப் பொறியை நடைமுறையில் பரீட்சித்துப் பார்த்தும், ஒரு சில மாறுதலுடன் ஒருமைப்படுத்தப்பட்ட விசைப்பலகை அமைப்பை அரசுக்கு அளித்தார்கள்.

    இதைத் தமிழக அரசு.... 31−1−1958 நாளிட்ட எண் − 271 அரசு (பொதுத்துறை) ஆணையில் அங்கீகரித்தது.

    எனவே, ஆங்கிலத் தட்டச்சுப் பொறியைப்போல், தமிழ்த் தட்டச்சுப் பொறியும், இப்பொழுது விசைப்பலகை யின் அமைப்பில் ஒருமைப்பாட்டுடன் விளங்குகிறது.

    1983− ஆம் ஆண்டு, தமிழ்க் கம்ப்யூட்டர் தயாரிக்கப்பட்டது. ,இப்பொறிக்கு "திருவள்ளுவர்" என்று பெயரிடப்பட்டது.

    இந்தியாவில் தயாரிக்கப்படும் தட்டச்சுப் பொறிகள்.....
    ரெமிங்டன், காட்ரெஜ் , ஹால்டா, பாசிட் ஆகும்.

    ரெமிங்டன் தட்டச்சுப் பொறி... கல்கத்தா விலும்....

    காட்ரெஜ் − பமபாயிலும் (மும்பை)....

    ஹால்டாவும், பாசிட்டும் சென்னைக்கு அருகிலுள்ள கிண்டியிலும், பெருங்குடி யிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    ரெமிங்டன் தட்டச்சுப் பொறி − 12 இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், சின்ஹாலா,நேபாளி, திபெத்தன், தாய், பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்யன் போன்ற அயல் நாட்டு மொழிகளிலும் தயாரிக்கப்படுகின்றன.

    மீண்டும் அடுத்த பதிவில்....

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  7. Fri. 24, Mar. 2023 at 9.48 am.

    தட்டச்சுப் பொறி − தொடர்ச்சி.

    தட்டச்சுப் பொறிகள்....!

    தட்டச்சுப் பொறிகள்.... 2−வித வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.

    ஒன்று.... ஒருமைப்படுத்தப்பட்ட வடிவம்.

    இரண்டாவது.... எடுத்துச் செல்லத்தக்க வடிவம்.

    * ஒருமைப்படுத்தப்பட்ட வடிவத் தட்டச்சுப் பொறிகள்..அலுவலகங் களுக்குள்ளும், நிறுவனங்களுக்குள் ளும் பயன்படுத்தப்படுகின்றன.

    * எடுத்துச் செல்லத்தக்க வடிவத் தட்டச் சுப் பொறிகள்... ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் சுலபமாக எடுத்துச் செல்லும் வகையில் பயன்படுகின்றன..

    எடுத்துச் செல்லத்தக்க , ஆங்கிலத் தட்டச்சுப் பொறிகள்....

    பயணம் மேற்கொள்ளும் அலுவலர் கள், விற்பனையாளர்கள் போன்றோர் களுக்குப் பெரிதும் பயன்படுகின்றன.

    அவை....

    ரெமிங்டன், அண்டர்உட், கரோனா, ராயல், நியூ ஹெர்மஸ், டார்பெடோ,
    குட் கம்பெனியன், பிஜோ, எரிகா ஆகும்.

    எடுத்துச் செல்லத்தக்க தமிழ்த் தட்டச்சுப் பொறிகள்....

    உட்ஸ்டாக், பிஜோ, எரிகா, ரெமிங்டன் ஆகியன.

    ReplyDelete
  8. தட்டச்சுப் பொறிகள்... பலவித அளவுகளில் உற்பத்தி செய்யப்படு கின்றன.

    அவை : ஃபுல்ஸ்கேப் அளவு, டிராஃப்ட் அளவு, பிரீஃப் அளவு, பாலிஸி அளவு,
    எக்ஸ்மானி ஃபெஸ்ட் அளவு என்பன.

    பெரும்பாலும்.... யாவரும் ஃபுல்ஸ்கேப், டிராஃப்ட் அளவு தட்டச்சுப் பொறிகளை யேப் பயன்படுத்துவார்கள்.

    சாதாரணக் கடிதங்கள், சட்ட சம்பந்த மான விஷயங்கள், சிறிய அட்டவணை கள் போன்றவற்றைத் தட்டச்சு செய்வதற்குப் பயன்படுத்துகின்றனர்.

    மற்ற அளவு தட்டச்சுப் பொறிகள்....
    வழக்கறிஞர், பொறியாளர் ஆகியோர்.. அலுவலகங்களிலும், இரயில்வே அலுவலகங்களிலும், அகலமான அட்டவணைகள், பாரங்கள் போன்றவற்றைச் சிறப்பான முறைகளில் தட்டச்சுச் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.

    தட்டச்சுவின் பயன்கள்...

    தட்டச்சுப் பொறி சாதாரணக் கடிதங்கள், விலைப் பட்டியல்கள், வாணிகக் கணக்குகள், தணிக்கைக் கணக்குகள், அட்டவணைகள் போன்றவற்றிற்குத் தட்டச்சு பயன்படுகிறது.

    சாதாரணமாக... தட்டச்சுப் பொறியில். 1−நிமிடத்திற்கு 20 முதல் 50−வரை எழுத்தச்சுகளைத் தட்டச்சு செய்ய முடிகிறது.

    டெல்லியில் ... அகில இந்தியச் சுருக்கெழுத்தாளர் கழகத்தால் நடத்தப் பட்ட *தேசிய சேம்பியன் ஷிப்* போட்டியில்... *மஹாராஷ்டிராவைச் சேர்ந்த எஸ்.என். நிலாஹி* என்பவர்...
    1−நிமிடத்திற்கு 110− சொற்களைத் தட்டச்சு செய்து முதல் பரிசு பெற்றுள் ளார்.. என நாம் யாவரும் அறிந்ததே.

    * தட்டச்சுப் பொறியில் பயிற்சி பெறுபவர்கள் கவனிக்க வேண்டியவை...

    * தட்டச்சு நற்காலியில் இயல்பான முறையில், நிமிர்ந்து உட்கார வேண்டும்.

    * தட்டச்சுப்பொறி மேசையிலிருந்து, அதிக தூரம் தள்ளி உட்காரக் கூடாது.

    * பாதங்களை மேசையின் கீழ் தரையில் பதியும்படி, இயல்பான முறை யில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    * இரு கைகளின் விரல்கள், வழிகாட்டி வரிசையில் இருக்கும்பொழுது, விரல்களின் நுனி முழங்கைகளுக்கு சரிசமமாக இருக்க வேண்டும்.

    * இரு கைகளையும், இயல்பான முறையில் தொங்கவிட வேண்டும்.

    * விரல்களின் நுனிகளால், விசைகளை இயக்குவதற்கு வசதியாக விரல்களைச் சற்று வளைத்துக் கொள்ள வேண்டும்.

    * விரல்களை விறைப்பாக வைத்துக் கொண்டு விசைகளை அழுத்தக் கூடாது.

    ReplyDelete
  9. தட்டச்சுச் செய்யும் பொழுது, சுவடியைப் பார்க்க வேண்டுமேத் தவிர. விசைப்பலகையைப் பார்க்கக் கூடாது.

    இவற்றிலும் இரண்டு முறைகள் கையாளப்படுகிறது....!

    ஒன்று.... பார்த்துத் தட்டச்சுச் செய்யும் முறை.

    மற்றொன்று... தொடு உணர்ச்சியுடன் தட்டச்சு செய்யும் முறை.

    * பார்த்துத் தட்டச்சு செய்யும் முறை என்பது.... ஒவ்வொரு கையிலுள்ள ஒன்று அல்லது இரண்டு விரல்களை மட்டும் பயன்படுத்தி, விசைப்பலகை யில், எந்தெந்த எழுத்து விசைகள், எங்கெங்கு உள்ளன என்பதைப் பார்த்துத் தட்டச்சு செய்வதாகும். ஆனால்.... *விசைப்பலகையைக் கையாளுவதில் திறமையாளராக விளங்குவதற்கு இந்த முறை ஏற்றதன்று.* அதாவது... தொழில் முறைத் தட்டெழுத்தர்களுக்கு இந்த முறை ஏற்றதல்ல.

    தொடு உணர்ச்சியுடன் தட்டச்சு செய்யும் முறை என்பது....

    விசைப்பலகையைப் பாராமல்.... *மூளையின் கட்டளைப்படி,* சுவடியிலுள்ள எழுத்துகளுக்கு ஏற்றவாறு, எழுத்து விசைகளின் இருப்பிடத்தை உணர்ந்து விரல்களை இயக்குவதாகும்.

    * இம்முறையில்... இடப் பெருவிரல் தவிர.... ஏனைய எல்லா விரல்களும் பயன்படுத்தப் படுகின்றன..

    இம்முறை பார்த்துத் தட்டச்சு செய்யும் முறையைவிட... பன்மடங்கு சிறந்த முறையாகும்.

    காரணம்....

    *பிழைகள் அதிகம் ஏற்படுவதில்லை.*

    *கண்களுக்கு அதிக சோர்வு ஏற்படாது.*

    *விரல்கள் சீக்கிரத்தில் சோர்வு அடைவதில்லை.*

    *விரைவாகத் தட்டச்சு செய்யவும் முடிகிறது.*

    *ஒரே சீரான வேகத்துடனும், ஓசை ஒழுங்குடனும் தட்டச்சு செய்ய முடிகிறது.*

    *இம்முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்..."சார்லஸ் மக்குர்ன்" என்பவர்.

    மீண்டும் அடுத்தப் பதிவில்...!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  10. Mon. 27, Mar. 2023 at 1.33 pm.

    தட்டச்சு தட்டெழுத்தர்களுக்குப் பயன்படுவன....!

    தட்டச்சர்களுக்கு..... பொறிகளும்,துணைக் கருவிகளும், எழுது பொருள்களும் பயன்படுகின்றன.

    தட்டச்சுப் பொறி, தட்டச்சுப் பொறி மேசை, தட்டச்சு நாற்காலி, சுவடி தாங்கி, சாதாரணத் தாள், மைபடிதாள், தட்டச்சுப் பொறி நாடா, அழிப்பான், அளவுகோல்... மற்றும் தட்டச்சுப் பொறியை சுத்தம் செய்வதற்கும், எண்ணெய் இடுவதற்கும் தேவையான உபகரணங்கள், நகல்பெருக்கிப் பொறி, நகல்பெருக்கித் தாள், திருத்தும் மை எழுத்தாணி, நகல்பெருக்கி அட்டை. இவைகள் தட்டச்சு எழுத்தாளர்களுக்கு மிகவும் இன்றியமையாததாகும்.

    அடுத்து....

    தட்டச்சுப் பொறியிலுள்ள வெளி உறுப்புகளைத் தெரிந்து கொள்வோம்.

    இதைத் தங்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலுமாக அளிக்கிறேன். புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்கும்.

    ReplyDelete
  11. ரெமிங்டன் தட்டச்சுப் பொறி....!

    இத் தட்டச்சுப் பொறியை எடுத்துக் கொண்டால்.... இப்பொறியில் 30 உறுப்புகள் அடங்கியுள்ளன.

    அவை.....!

    1) இடம் விடும் சட்டம் (Space Bar).

    2) மாற்று விசைகள் (Shift keys).

    3) மாற்றுவிசைப் பூட்டுகள் (Shift Locks).

    4) பின்தள்ளும் விசை (Back space key).

    5) விசைகளை விடுவிக்கும் விசை (Keys Release key).

    6) அட்டவணைப் பிடிப்பை விடுவிக்கும் விசை (Tabular Release Key).

    7) அழுத்த நிலைக் குறிகாட்டி (Touch Position Indicator.)

    8) அட்டவணைச் சட்டம் (Tabular Bar).

    9) வரிவிட்டு உருளைத் தாங்கியை திருப்பும் நெம்புகோல் (Line Space and Carriage Return Lever).

    10) முன்புற மூடி (Cowl)

    மீண்டும் அடுத்த பதிவில்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete