Monday, 31 December 2012

ஹெல்மெட் (தலைக்கவசம்) வாங்குமுன் கவனிக்க வேண்டியவை என்ன?


ஹெல்மெட் (தலைக்கவசம்) வாங்குமுன் கவனிக்க வேண்டியவை என்ன?

தலைக்கவசம் (ஹெல்மெட்) என்றால் நமக்கு தலைவலிதான். மற்றவர்களின் கட்டாயத்திற்க்காகவோ அல்லது அபராதத்திற்க்கு பயந்து அணிபவர்கள் பலர். விருப்ப த்துடன் அணிபவர்கள் சிலர். நீங்க ள் இந்த வகையில் எதுவாயினும் ஹெல்மெட் வாங்குமுன் மிக முக் கியமாக கவனிக்கவேண்டிய கார ணிகளை ஜிக்வீல்ஸ் முன் வைத்த வை தமிழாக்கமாக இங்கு  தலைக் கவசம் வாங்குமுன் கவனிக்க வேண்டியவை என்ன?
பைக் வாங்குமுன் பல விடயங்களை கவனிக்கும் நாம் ஹெல்மெட் வாங்க சாலையோர கடைகளை கூட பலரும் பயன்படுத்துகிறோம். இதற்க்கு காரணம் ஹெல்மெட் பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லை என்பது நிதர்சனமான உண் மை.
 
பொருந்துதல் மற்றும் வசதிகரமான காரனிகள்:
 
1.உங்கள் தலையினை முழுமை யாக மூடும் தலைக்கவசத்தை மட்டு ம் வாங்குங்கள்.
 
2. கண்டிப்பாக ஹெல்மெட் (Helmet ) சரியாக பொருந்தியிருக்க (அதாவ து உங்கள் தலை மற்றும் தாடையில் சரியாக பொருந்த வேண்டும்) வேண்டும்.எக்காரணம் கொண்டும் சரியாக பொருந்தாத மற்றும் சிற ப்பான வசதிகள் இல்லாத தலைக்கவசத்தினை பயன்படுத்தக்கூடா து.
 
3. உங்கள் காது, கன்னங்கள் மற்றும் கழுத்தின் பின்புறம் போன்றவ ற்றில் எவ்விதமான உறுத் தல்களும் இல்லாமல் உங்களுக்கு இதமான சூழ்நிலை தந்தால்தான். உங்கள் பயணத்தின் பொழுது எவ்வித மான சிரமங்கள் இல்லாமல் இயலுபாக இருக்கும்.
 
4. எக்காரணம் கொண்டும் ஸ்ட்ராப் இல்லாத தலைக்கவசத்தினை பயன்படுத்தக் கூடாது.
 
5. உங்கள் ஸ்ட்ராப்யில் ஒரு விரல் நுழையும் அளவு இடைவெளி இருந்தால் போதுமானது.
 
6. உங்கள் ஸ்ட்ராப் உங்களுக்கான பாதுகாப்பினை உறுதிசெய்வதி ல் முக்கிய பங்கு வகிக்கின்றது. சட்டென்று ஏற்படும் நிகழ்வுகளின் பொழுது உங்கள் தலைக்கவசம் தலையை விட்டு வெளியேறாது.
 
7. முன்புற கண்ணாடியில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் பல உள்ளன அவற்றில் பூச்சுசெய்யப்பட்ட கண் ணாடிகள் அழகை கூட்டினாலும் அவை இரவு மற்றும் வெளிச்சம் குறைந்தவேளைகளில் சிறப்பான கா ட்சியினை காட்டுவதில் தடுமாறும்.
 
8. முன்புற கண்ணாடியில் கீறல்கள் மற்றும் அழுக்குகள் சேராமல் கவனித்துக்கொள்ளுங்கள். அதிகப்படியான கீறல்கள் மற்றும் உடை ந்தாலும் கண்ணாடியினை மாற்றுங்கள்.
 
9. உங்கள் தலைக்கவசம் பாது காப்பினை உறுதிப்படுத்தக் கூடி யதாக இருத்தல் அவசியம். மேலும் மிக கடிணமான மேற் புற ஓடு அமைந்திருத்தல் அவசி யம்.
 
தர முத்திரை அவசியம்
 
இந்தியாவின் ஐஎஸ்ஐ(ISI) அல்லது DOT(U.S. Department of Transportation) முத்திரை இருக்க வேண்டும்.
 
தோற்றம் மற்றும் வடிவம்
 
உங்கள் விருப்பமான மற்றும் அழகான வடிவத்தினை தேர்ந்தேடு ங்கள்.

No comments:

Post a Comment