Friday, 21 December 2012

நான் யார் ? -- ஆன்மீக விளக்கம்


நான் யார் ? -- ஆன்மீக விளக்கம்
 
நான் யார் என்று நீங்கள் உங்களையே கூப்பிட்டு பாருங்கள். நீங்கள் நினைப்பது என்ன ?
 
நான் என்றால் , எனது பெயர் தான் என்று நினைப்பீர்கள். அப்படி நீங்கள் நினைத்தால் அது தவறு. ஏனென்றால் யாராவது உங்களை கூப்பிட்டால் பெயரா போகிறது ? நீங்கள் தானே போகிறீர்கள். அதனால் நான் என்பது பெயர் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
 
நான் என்றால் உடல் . உடல் என்று வைத்து கொள்வோம். 
எடுத்துகாட்டாக கிருஷ்ணசாமி என்று ஒருவர் இருக்கிறார். அவர் கூப்பிட்ட போதெல்லாம் வந்தார். அவருக்கு உடல் நலம் சரி இல்லை. அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றார்கள். அவர் இறந்து விட்டார். அவர் இறந்த பிறகு நான் அவரை கிருஷ்ணசாமி என்று பல முறை அழைத்தேன் ஆனால் அவர் பேசவே இல்லை. அவர் உடல் எதுவுமே செய்யவில்லை. உடல் தான் நான் என்றால் அவர் இறந்த பிறகு கூட உடல் தான் இருக்கிறதே. ஏன் பேசவில்லை ஏன் நடக்க வில்லை.
 
உடலில் இருந்து ஏதோ ஒன்று வெளியே சென்று விட்டது அதனால் அந்த உடல் செயல்களில் ஈடு பட வில்லை. அந்த ஒன்று எது ? உடல் இல்லை என்பதும் உறுதியாகி விட்டது.
நான் என்றால் மூளை என்று சிலர் நினைப்பது உண்டு . அதுவும் தவறு.
 
ஒரு மனிதன் இறந்த பிறகு கூட மூளை இருக்கிறது. இறந்த மனிதனிடம் எதாவது கேளுங்கள் அவரால் சொல்ல முடியாது. உயிருடம் இருக்கும் போது அவரிடம் கேட்டால் அவர் பதில் சொல்கிறார். ஆனால் இறந்தால் மூளை அங்கே தான் இருக்கிறது ஆனால் அந்த மூளை வேலை செய்யவில்லை.
அப்படி என்றால் அந்த மூளைக்கு கூட சக்தி கொடுத்தது எது ?
 
சிலர் நினைப்பார்கள் நான் என்றால் மூச்சி காற்று . அதுவும் தவறு. 
 
மூச்சி காற்று தான் நான் என்றால் , நாம் மருத்துவரிடம் செல்லும் போது அவர் நம்மிடம் மூச்சை இழுத்து விடு என்று கூறுவார். நாம் மூச்சை இழுத்து விடுவோம். மூச்சை யார் இழுத்தது? மூச்சை கூட இழுத்து விட முடிகிறது. நம் இஷ்டம் போல இழுக்கிறோம் விடுகிறோம். யார் அந்த மூச்சை கூட இழுத்து விடுகிறார். அந்த நான் யார்?
 
மூச்சு காற்று அதுவாக செயல் பட வில்லை. யாரோ ஒருவர் நம்மில் இருந்து கொண்டு செயல் படுத்து கிறார்.
 
அது யார்.
 
 
மனம் தான் உயிர் என்று சிலர் நினைப்பது உண்டு. அதுவும் தவறு.
 
நாம் உறங்கும் போது நாம் எதையும் நினைப்பது இல்லை. அப்போது மனது இல்லையே , ஆனாலும் நாம் உறங்கி எழுகிறோம். எழுந்துடம் மனதில் அனைத்தையும் நினைக்கிறோம்.ஆகையால் மனது நான் இல்லை.
 
நான் யார்?
 
உடல் நான் இல்லை, பெயர் நான் இல்லை, மூச்சி காற்று நான் இல்லை, மனது நான் இல்லை,மூளை நான் இல்லை,
 
பிறகு நான் யார் ?
 
நான் ஆத்மா !!!!!
 
ஆத்மா உடலில் உள்ள இருதயத்தில் இருந்து கொண்டு அணைத்து உறுப்புகளையும் இயங்க செய்கிறது. 
இந்த ஆத்மா உடலை விட்டு வெளியே போய் விட்டால் அந்த உடல் இறந்ததாக கருதப்படும்.
 
ஆகவே நான் என்றால் "ஆன்மா "
ஹரி ஓம் நமோ பகவத்தே வாசுதேவாய

3 comments: