Friday, 21 December 2012

ஞான யோகி, கர்ம யோகி என்பவன் யார் ?


ஒரு மனிதன் முற்பிறவியின் கர்ம பலனை எப்படி தீர்க்க முடியும் ?
அமைதியாக ஒரு இடத்தில் இருந்து கொண்டு தியானம் மேற்கொண்டால் போதுமா ?
வேலைகளை செய்ய வேண்டாமா ?
 
முற்பிறவியின் கர்ம பலனுக்கு ஏற்ப அனைவருக்கும் பிறவி ஏற்படுகிறது. அந்த பிறவியில் தனது நிலையில் இருந்து கொண்டு தனக்கு கொடுக்க பட்ட கடமைகளை அனைவரும் செய்தால் மட்டுமே கர்ம பலன் தீரும். கர்ம பலன் தீர்ந்தால் மட்டுமே ஒரு ஜீவன் இறைவனை அடைய முடியும். ஆத்மா இறைவனை அடைந்தால் மட்டுமே மீண்டும் பிறக்காது. மீண்டும் பிறக்காமல் இருந்தால் மட்டுமே ஒருவன் நிரந்தர சுகத்தை அடைய முடியும். இந்த நிலையை எட்டும் வரை ஒருவன் தனக்கு கொடுக்க பட்ட கடமையை செய்ய வேண்டும். இந்த உலகத்தில் இரண்டு வகை ஜீவன்கள் பிறக்கின்றன.
 
ஒன்று கர்ம யோகி. மற்றொன்று ஞான யோகி. கர்ம யோகி என்றால் செயல்கள் செய்ய வேண்டியவன். அதாவது கடமைகள் இருக்கின்ற ஒருவன் கடமைகளை விட்டு விட கூடாது. அவனுக்கு விதிக்க பட்ட கடமையை செய்ய வேண்டும். ஒருவன் காவல் துறையில் பணி செய்கின்றான் என்று எடுத்து கொள்வோம்.
 
அவனுக்கு நிறைய பிரச்சனைகள் வரலாம். பிரச்சனைகளை கண்டு பயந்து ஓடி , நான் சாமியாரை போல் தியானம் செய்வேன் இறைவனை அடைவேன் என்று கூறினால் அது சரி இல்லை. அவன் அவனது கடமையை செய்யாமல் ஓடினால் பாவம் மேலும் சேரும். அவன் இறைவனை அடைய முடியாது.
 
கர்மங்கள் இருக்கும் வரை செய்து தான் ஆக வேண்டும். கர்மங்களை செய்து தான் தீர்க்க வேண்டுமே தவிர அதை கண்டு ஓடினால் பாவமே சேரும்.
 
கர்மங்கள் அணைத்து முடிக்க பட்ட உடன் அந்த மனிதன் மீண்டும் பிறவி எடுக்காத இறை நிலையை அடைய முடியும்.
 
ஞான யோகி. ஞான யோகி என்பவன் யார் ? எவன் ஒருவன் செய்வதற்கு கர்மங்கள் இல்லையோ அவனால் யாரும் பாதிக்க பட வில்லையோ, அவனை நம்பி யாரும் இல்லையோ, அப்படி பட்ட ஒருவன் பக்குவ பட்ட மனத்துடன் இறை பக்தியுடன் எப்போது தியான நிலையில் இருந்து கொண்டு பிரம்ம நிலையில் இருந்து தன் உள்ளே இருக்கின்ற ஆன்மா வை அனுபவித்து மகிழலாம் . இறுதியாக இறைவனை அடையலாம்.
                                     ஹரி ஓம் நமோ பகவத்தே வாசுதேவாய

No comments:

Post a Comment