Wednesday, 19 December 2012

பதினோராம் வீடு

பதினோராம் வீடு







பதினோராம் வீடு லாப ஸ்தானம் எனப்படும். ஒருவருடைய லாபம் மூத்த சகோதர சகோதரிகள் ஆகியவற்றைப் பற்றி கூறுவது பதினோராம் வீடு.

பதினோராம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று இப்பொழுது பார்க்கலாம்.

1 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல லாபம் வரும் நல்ல படிப்பு வரும் எந்த தொழிலில் ஈடுபட்டாலும் நல்ல லாபங்களை பெறுவார்கள். நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்

2 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். நல்ல வருமானம், செல்வாக்கு, அதிகாரம் கிடைக்கும்.

3 ஆம் வீட்டில் இருந்தால் மூத்த சகோதர சகோதரிகளில் நல்ல நிலையில் இருப்பார்கள் . சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.

4 ஆம் வீட்டில் இருந்தால் தெய்வீக வழியில் செல்பவராக இருப்பார்கள் நல்ல பணி ஆட்கள் கிடைப்பார்கள். வீடு வாகனத்துடன் சந்தோஷமாக குடும்ப வாழ்க்கை அனுபவிப்பார்கள்.

ஆம் வீட்டில் இருந்தால் இவர்களின் புத்திரர்களால் நல்ல வருமானம் கிடைக்கும். இவர்கள் செய்யும் தொழில்களை இவர்களின் பிள்ளைகளும் செய்வார்கள். அரசாங்க ஆதரவு கிடைக்கும்.

ஆம் வீட்டில் இருந்தால் செய்கின்ற தொழிலில் எதிரிகள் இருப்பார்கள் வரும் லாபம் எல்லாம் கடன் கட்டவே போய்விடும்.

ஆம் வீட்டில் இருந்தால் மனைவியின் மூலம் லாபங்கள் வரும். திருமணத்திற்க்கு முன்பு ஏழையாக இருந்தவர்கள் திருமணத்திற்க்கு பின்பு நல்ல நிலையில் இருப்பார்கள். நல்ல யோகங்கள் அமையும். வண்டி வாகனம் அமையும்.

ஆம் வீட்டில் இருந்தால் பல தொழில்கள் செய்ய மணம் ஈடுபடும். பல வழியில் பணம் செலவு செய்ய நேரிடும். கஷ்டத்துடனே வாழ்க்கை ஓடும்.

ஆம் வீட்டில் இருந்தால் வண்டி வாகனம் வரும். அரசாங்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தந்தை செய்யும் தொழிலே இவர்களுக்கு கிடைக்கும் . பெரிய தொழில்கள் செய்து நல்ல லாபங்களை பெறுவார்.

10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல வேலையில் இருப்பார்கள். அமைதியான குடும்ப வாழ்க்கை அமையும். தெய்வீக அருள் நிறைந்து காணப்படுவார்கள்.

11 ஆம் வீட்டில் இருந்தால் மூத்த சகோதர சகோதரிகளின் மூலம் லாபங்கள் வரும். மூத்த சகோதர்கள் நல்ல அந்தஸ்தோடு இருப்பார்கள்.

12 ஆம் வீட்டில் இருந்தால் கடன் தொல்லைகள் வியாதிகள் ஏற்படும். செய்யும் தொழிலில் லாபங்கள் குறைந்து காணப்படும்.

No comments:

Post a Comment