Wednesday, 19 December 2012

பன்னிரண்டாம் வீடு

பன்னிரண்டாம் வீடு





பன்னிரண்டாம் வீடு விரய ஸ்தானம் எனப்படும். மோட்ஷம் தரும் வீடும் இதுதான். நமக்கு வரக்கூடிய செலவுகள், நஷ்டங்கள், துன்பங்கள், பாவங்கள் வறுமை, துரதிஷ்டம ஆகியவைகளை இந்த வீட்டை வைத்து சொல்ல வேண்டும். ஒருவருக்கு ஜெயில் வாழ்க்கை உள்ளதா என்று இந்த வீட்டை வைத்துதான் சொல்ல வேண்டும். அதைப்போல் ஒருவர் தன்னலம் இல்லாது பிறர் நலனுக்காக செய்யும் சேவையை குறிக்கும் வீடு தான் இந்த பன்னிரண்டாம் வீடு. நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளைக் குறிப்பதும் இந்த வீடுதான். நாம் வாங்கிய கடனை திருப்பி தருவதும் இந்த வீடுதான். நம் உடம்பில் இடது கண், பாதங்களை குறிப்பதும் இந்த வீடுதான். தனிமையான வாழ்க்கையை குறிக்கும் வீடு பன்னிரண்டாம் வீடுதான்.

பன்னிரண்டாம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று இப்பொழுது பார்க்கலாம்.

1 ம் வீட்டில் இருந்தால் நல்ல உணவுகளையும் நல்ல நித்திரையும் கொடுக்கும். நல்ல செலவு செய்து வசதி வாய்ப்புகளை பெறுவார்

ம் வீட்டில் இருந்தால் பேச்சிற்க்கு மதிப்பு இருக்காது தனம் ஸ்தானத்தில் இருப்பதால் தன விரையம் ஏற்படும். தேவையில்லாத பேச்சுகளை பேசுவார்கள்

ம் வீட்டில் இருந்தால் சொத்துகளை இழப்பார்கள் இளைய சகோதர சகோதரிகளால் செலவு ஏற்படும்.

ம் வீட்டில் இருந்தால் சொந்தங்களால் செலவு ஏற்படும். நண்பர்களாலும் செலவு ஏற்படும். குடும்ப செலவினங்கள் அதிகமாக இருக்கும்.

ம் வீட்டில் இருந்தால் மூத்த சகோதரர்களால் விரயம் ஏற்படும். ஆலய திருப்பணிகள், பெரிய மனிதர்கள் பிள்ளைகளால் செலவு வரும்.

ம் வீட்டில் இருந்தால் வியாதிகள் ஏற்படும். அதனால் மருத்துவனையில் சேர்ந்து செலவு செய்ய நேரிடும். பொருள் நஷ்டம் ஏற்படும்.

ம் வீட்டில் இருந்தால் மனைவி வழியில் அதிக செலவினங்கள் ஏற்படும், காமத்தால் செலவினங்கள் ஏற்படும்.

ம் வீட்டில் இருந்தால் சண்டைகள் ஏற்பட்டு அதனால் வழக்குகள் வந்து செலவு செய்ய நேரிடும். உடல் நோய் ஏற்பட்டு அதனால் செலவு ஏற்படும்.

ம் வீட்டில் இருந்தால் தகனப்பனாரின் சொத்துக்களை விற்க்க நேரிடும். சகோதரர்களால் நஷ்டமும் கஷ்டமும் ஏற்படும்.

10 ம் வீட்டில் இருந்தால் செய்கின்ற தொழிலில் முடக்கம் ஏற்படும். தொழிலில் வருமானம் இல்லாது போதும். தொழில் கை விட்டு போகும்.

11 ம் வீட்டில் இருந்தால் தான் தருமங்களில் செலவு ஏற்படும். மூத்த சகோதரர்களால் நஷ்டமும் செலவும் ஏற்படும்.

12 ம் வீட்டில் இருந்தால் உடல் நிலை சரியாக இருக்காது. நல்ல நித்திரை ஏற்படும். சொத்துக்கள் விரையமாகும்.

No comments:

Post a Comment