Wednesday, 19 December 2012

சந்திரன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன்


சந்திரன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்

சந்திரன் முதல் வீட்டில் இருந்தால் லக்கினத்தில் இருப்பது நல்லது ஆனால் சந்திரனுக்கு அது சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருந்தால் நல்லது நட்பு வீடாக இருந்தாலும் நல்லது வாழ்க்கையில் உயர்வு பெறுவதற்க்கு நல்லது செய்வார். சிற்றின்ப சுகம் நன்றாக அமையும். பந்தயத்தில் வெற்றி பெறுவார் திடீர் பணவரவு இருக்கும்.

2-ல் சந்திரன் செல்வம் தருவார். நன்றாக பேச்சு வரும் அரசாங்கத்தில் நல்ல மதிப்பு இருக்கும் சொத்து சுகம் ஏற்படும். பெயரும் புகழும் உண்டாகக் காரணமாக இருப்பார். நல்ல கல்வி கிடைக்கும் சந்திரன் கெட்டால் செல்வத்தை இழக்க செய்யும். நல்ல பணவரவு இருக்காது. பொதுவாக வளர்பிறையில் நல்லது செய்வார்.

3-ல் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் உடல் வலிமையையும் ஆற்றலையும் தருவார். சகோதர சகோதரிகளை ஆதரிப்பார் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். மூன்றாவது வீடாக இருப்பதால் அடிக்கடி குறுகிய பயண செய்ய வைப்பார். வாகனம் வசதி கிடைக்கும் சந்திரன் கெட்டால் அனைத்தும் எதிர்மறையாக இருக்கும்.

4-ல் இருந்தால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும் 4 ஆம் வீடு வீட்டை குறிப்பதால் ஆறு குளம் கடலோரத்தில் வீடு அமையும். நண்பர்களுக்கு உதவி செய்வார். தாய்வழிச்சொத்து கிடைக்கும் கொடை குணம் இருக்கும்.

5-ல் சந்திரன் பலம் பெற்று இருந்தால் பணம் வந்து கொண்டே இருக்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். நல்ல அறிவாற்றலை தருவார் வாழ்க்கையில் உயர்ந்த நிலைய அடையவைப்பார். குழந்தைபாக்கியம் அமையும் ஆனால் பெண் குழந்தைகளே பிறக்கும். சந்திரன் கெட்டால் அனைத்தும் எதிர்மறையாக இருக்கும்.

6-ல் சந்திரன் இருந்தால் சுகபோக வாழ்வு வாழ்பவர். விரோதிகளை உண்டு பண்னுவார். இளம் வயதில் மகிழ்ச்சி குறையும். சந்திரன் அசுபபலன் பெற்று இருந்தால் அடுத்தவருக்கு அடங்கி நடக்கக்கூடிய தன்மையை தருவார்.
சந்திரன் 7 ல் இருந்தால் ஆணாக இருந்தால் பெண்களிடம் பற்று இருக்கும். பெண்ணாக இருந்தால் ஆண்களிடம் பற்று இருக்கும். ஆண்/பெண் இருவரும் மூலம் பணவு இருக்கும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை இருக்கும். ஆண் /பெண் அழகாக இருப்பார்கள். சந்திரன் பலம் இழந்தால் ஆண் / பெண் உடல் பலன் குறையும். நோய் வரும்.

சந்திரன் 8- ல் இருந்தால் அறிவாற்றல் நல்ல இருக்கும். ஆனால் ஆயுளை குறைக்கும். சுக்கிலபட்சமாக இருந்தால் ஆயுள் நன்றாக இருக்கும். மனம் நிம்மதி இழந்து காணப்படும். சந்திரன் நன்றாக இருந்தால் நல்ல செல்வந்தராக இருப்பார்கள். பெரிய குடும்பத்தை உண்டுபண்னுவார்.

இப்பொழுது சந்திரன் 8- ல் இருக்கும் ஜாதகத்தை பார்க்கலாம்


இந்த ஜாதகர் சுக்கிலபட்சத்தில் பிறந்துள்ளார். இப்பொழுது 30 வயது ஆகிறது இவரின் படிப்பு பள்ளிக்கல்வியை மட்டும் தான் படித்துள்ளார். இவரின் அம்மாவிற்க்கு இவர் பிறந்ததில் இருந்து உடல் நிலை மோசமாகத்தான் உள்ளது.ஏதாவது நோய் வந்து கொண்டு இருக்கிறது.

இவருக்கு அண்ணன் ஒருவர் இருப்பதால் இவரின் அம்மா உயிருடன் இருக்கிறார். ஏனென்றால் தாய்க்கு முதல் மகனின் ஜாதகத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அண்ணனின் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருப்பதால் அம்மா உயிருடன் இருக்கிறார்.

இவரின் ஜாதகத்தில் சந்திரன் 8-ல் அமர்ந்ததால் அஷ்டமச்சந்திரனாகிறது. சந்திரன் அமர்ந்த வீடு சனியின் வீடாக இருப்பதால் இவருக்கு சந்திரன் அதிக கெடுதல் செய்கிறார். இவருக்கு மனப்போராட்டம் அதிகமாக இருக்கிறது.

சந்திரன் தொடர்ச்சி 2



இன்று ஒரு ஜாதகத்தை பார்க்கலாம். இந்த ஜாதகத்திலும் சந்திரன் எட்டாம் பாவத்தில் தான் நிற்கிறது. இவர் வேலை செய்வது அரசாங்க பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இந்தஜாதகருடைய அம்மாவிற்க்கு 2 வருடம் முன்பு ஒரு ஆப்பிரேசன் நடைபெற்றது. இப்பொழுது நன்றாக உள்ளார் இவருக்கு 6 ஆம் வீட்டு அதிபதி சந்திரன் 8ல் அமர்ந்து உள்ளது. அடிக்கடி ஜலதோஷம் ஏற்படுகிறது. அம்மாவிற்க்கு இவர் மேல் நல்ல பாசமாக உள்ளார்.


9-ல் உள்ள சந்திரன் இருந்தால் நல்ல பாக்கியசாலியாக இருப்பார். புத்திரபாக்கியம் இருக்கும். உறவினர்கள் நல்ல உதவி செய்வார்கள். செல்வம் குவியும். சங்கீதம் நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகமாகும். அம்மாவின் அரவணைப்பு இருக்கும்.

10-ல் உள்ள சந்திரன் தன் மதத்தின் மீது பற்று ஏற்பட்டு மதம் பிரசாரம் செய்வார். நல்ல செல்வ வளம் சந்திரன் தருவார். வாழ்க்கையில் உன்னதமான பல நல்ல காரியங்களை செய்வார். செய்தொழில்களில் பகைவர்களை வெற்றிக்கொள்ளும் தைரியத்தை தருவார்.

வாழ்க்கையில் பற்றிய எண்ணத்தை இயற்கையாக உண்டுபண்னுவார். தாய்வழியில் நல்லது செய்வார். நண்பர்களிடத்தில் நல்ல நட்பு உண்டுபண்னுவார். தொழில் நுட்பத்துறையில் ஈடுபட வைக்கும். தொழில்நுட்பத்துறையில் நல்ல அறிவு வளர செய்வார். வாழ்க்கையில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். சிலபேருக்கு அரசாங்கத்தில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

11-ல் உள்ள சந்திரன் மூத்த சகோதர்களின் மூலம் லாபத்தை தருவார். எந்த வேலையை எடுத்தாலும் எளிதில் முடிக்க கூடிய திறமையை தருவார். நல்ல தீர்க்காயுள் ஏற்படும். வேலையாட்கள் மூலம் வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் மீது ஆர்வம் ஏற்படும். அரசாங்கத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும். நல்ல செல்வ வளம் சேரும்.

12-ல் உள்ள சந்திரன் பாதங்களில் வலி உண்டாக செய்வான். வாழ்க்கையில் மதிப்பு இழக்க செய்வான். கண் பார்வை மங்க செய்வான். அறிவாற்றல் குறையும். குறுகிய மனப்பான்மை இருக்கும். மனஉளைச்சல் இருக்கும். செலவு கூடும்.

2 comments:

  1. Sir
    My Elder daughter is 7 years old.
    Born in vrishaba lagnam. Moola nakshatram.
    D.o.b 17-02-2012 time : 1.25 pm.
    Chandran is in 8th house.please tell me about the effects and parihaarams.

    My younger daughter is 8 months old. She is vrichiga rasi and visaka nakshatram rishaba lagnam.

    my husband and my husband lagnams are mithuna lagnam. Iam arudra nakahatram. My husband is aselesha nakshatram.
    Kindly suggest me with parihaarams and predictions.

    ReplyDelete
  2. Sir
    My Elder daughter is 7 years old.
    Born in vrishaba lagnam. Moola nakshatram.
    D.o.b 17-02-2012 time : 1.25 pm.
    Chandran is in 8th house.please tell me about the effects and parihaarams.

    My younger daughter is 8 months old. She is vrichiga rasi and visaka nakshatram rishaba lagnam.

    my husband and my husband lagnams are mithuna lagnam. Iam arudra nakahatram. My husband is aselesha nakshatram.
    Kindly suggest me with parihaarams and predictions.

    ReplyDelete