Wednesday, 19 December 2012

செவ்வாய் 1 to 6 வீட்டில் இருந்தால்


செவ்வாய் 1 ல் இருந்தால் தலையில் அடிபடும். செவ்வாய் ஒன்றாம் வீட்டில் இருந்து 7 ம் பார்வையாக 7 ம் வீட்டை பார்ப்பதால் திருமண வாழ்வில் சங்கடங்கள் ஏற்படும். செவ்வாய் முதல் வீட்டில் இருப்பதால் மூர்க்கதனமாக கோபம் வரும். தாயாருக்கு தீங்கு விளைவிக்கும். கோபம் அதிகரிக்கும். இளம்தோற்றமாக காணப்படும். உடம்பில் உஷ்ணம் காரணமாக கட்டி ஏற்படும். நல்ல தைரியசாலிகளாக இருப்பார்கள். தலையில் அடிப்படும். ஏதாவது விதத்தில் தலையில் அடிப்படும். செவ்வாய் தசையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செவ்வாக்கு சொந்த வீடாக அல்லது உச்ச வீடாக இருந்தால் நல்லது நடக்கும்.

செவ்வாய் 2 ம் வீட்டில் இருந்தால் வாக்கில் கடுமை இருக்கும். பேச்சில் சண்டை வரும். செவ்வாய்க்கு சொந்த வீடாகவோ உச்சவீடாக இல்லாவிட்டால் அவர் சொல்லே அவருக்கு விரோதமாக ஆகும். கையில் காசு தங்காது. செவ்வாய் இரண்டில் இருப்பதால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள். கண்ணில் தொந்தரவு இருக்கும். செவ்வாய் பலம் பெற்று இருந்தால் நல்லது நடக்கும். செவ்வாய் இரண்டில் இருப்பதால் தோஷம் ஏற்படும்.

செவ்வாய் 3 ம் வீட்டில் இருந்தால் நல்ல தைரியசாலியாக இருப்பார். காதில் தொந்தரவு இருக்கும். செல்வம் நிறைய கிடைக்கும். நல்ல அறிவாற்றல் கிடைக்கும். உடம்பு நல்ல உறுதியாக இருக்கும். இளைய சகோதரருக்கு கெடுதல் செய்யும். சிலபேருக்கு இளைய சகோதர,சகோதரிகள் இருக்க மாட்டார்கள். 3 ஆம் வீட்டில் செவ்வாய் பலம் பெற்றால் நல்ல வாழ்க்கை அமையும். 3 ஆம் வீட்டு செவ்வாய் மூலம் தாய்நலம் கெடும்.

செவ்வாய் 4 ம் வீட்டில் இருந்தால் தாய்வீட்டின் சொத்து கிடைக்கும். தாயின் உடல்நிலை மோசமாக இருக்கும். கணவன் மனைவி சண்டை சச்சரவு இருக்கும். நல்ல சொத்துக்கள் சேரும். 4 ஆம் வீட்டு செவ்வாய் பலம் குறைந்தால் வாழ்க்கையில் வசதி வாய்ப்பு குறையும். மார்பில் வலி ஏற்படும்.தென்னிந்திய மக்கள் செவ்வாய்கிழமையில் எந்த நல்ல காரியங்களும் தொடங்குவது இல்லை ஆனால் இந்தியாவின் வடமாநில மக்கள் இந்த கிழமைக்கு மங்களவார் என்று பெயர் வைத்து நல்ல காரியங்களை தொடங்குகிறார்கள் என்று தினமலர் நாளிதழில் படித்தேன். அதனால் தான் செவ்வாய்யைப் பற்றி எழுதலாம் என்று எண்ணினேன் அதனுடன் நமது பாடமும் செவ்வாய் பற்றி வந்துகொண்டுருப்பதால் எழுதுகிறேன்.

நமது வீட்டில் எல்லாம் திருமண காலங்களில் பெண் பார்க்கும் அல்லது மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் தவறாது அடிபடும் வார்த்தை செவ்வாய் தோஷம் இருக்கிறதா அல்லது இல்லையா என்றுதான். இந்த தோஷம் ஒவ்வொரு ஜோதிடரிடமும் வேறுபடும். ஒருவர் தோஷம் இருக்கும்பார் இன்னொருவர் தோஷம் இல்லை என்பார். செவ்வாய் உச்சவீட்டில் இருக்கிறது அதனால் தோஷம் கிடையாது என்பர் அல்லது செவ்வாய் நீசவீட்டில் இருக்கிறது அதனால் தோஷம் கிடையாது என்பார்கள். இதனைப்பற்றி ஆராய்வதற்கே பல வழிகள் இருக்கிறது.

நான் சொல்ல வந்தது. ஒன்பது கிரகங்களில் நீங்கள் கேட்டவுடன் அள்ளி வழங்குபவர் செவ்வாய் மட்டும் தான். ஏனென்றால் செவ்வாய்கிரகம் ஒரு அக்னி கிரகம் அது மிகவும் வீரியத் தன்மை வாய்ந்த கிரகம் இருக்கும்.

நெருப்பு உடனே பற்றிக்கொள்ளும் தன்மையினால் செவ்வாய் மட்டும் உடனே தருபவர். வேறு எந்த கிரகத்திடம் கேட்டாலும் பலன் உடனே நடக்காது. ஆனால் செவ்வாயிடம் மட்டும் கேட்டால் உடனே நிறைவேறும். நீங்கள் இதனை ஒரு ஆய்வாகவே எடுத்துக்கொள்ளலாம். செவ்வாயின் கடவுளாகிய முருகனிடம் ஏதோ ஒரு வேண்டுதலுடன் கேளுங்கள் அந்த காரியம் நிச்சயம் நடந்தேறும். உங்கள் வேலை உடனே நடக்க வேண்டும் என்றால் செவ்வாய்கிழமை பயன்படுத்துங்கள்.

உங்களுக்கு செவ்வாய்தோஷம் இருந்தால் ஒன்பது வாரம் செவ்வாய்கிழமை விரதம் இருந்து பாருங்கள். விரதத்தின் தன்மை பொறுத்து தோஷம் நீங்கி நல்லது நடக்கும். செவ்வாய் கிழமை நாம் பயன்படுத்தலாம். முருகனை முழு மனதுடன் வழிபட்டு அனைத்தையும் பெறுவோம்.


செவ்வாய் 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரதோஷம் ஏற்படும். புத்தி மங்கும். குழந்தைகளால் சண்டை சச்சரவுகள் ஏற்படும். வயிற்றுவலி ஏற்படும். எதிரிகளால் தொல்லை வரும். பணவரவு இருக்காது. 5 ஆம் வீடு செவ்வாய்க்கு சொந்த வீடாகவோ அல்லது உச்சவீடாகவோ இருந்தால் தடைகள் அனைத்தும் அகலும். 5 ஆம் வீடு நாம் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று காட்டும் இடம் ஆகையால் செவ்வாய் 5-ல் இருந்தால் சுப்பிரமணியரை வணங்க வேண்டும்.

செவ்வாய் 6 ஆம் வீட்டில் இருந்தால் எதிரிகளை வெற்றிகொள்ளும் தைரியும் இருக்கும். நல்ல சொத்துக்கள் சேரும். செவ்வாய் காமம் அதிகமாக இருக்கும். தாய்மாமனுக்கு தொல்லை தருவார். நல்ல செரிக்கும். இரத்தம் மாசுபடும் அதனால் உடலில் கட்டி ஏற்படும். நல்ல கற்றவர்களிடம் தொடர்பு ஏற்படும். புகழ் ஏற்படும். 6 ஆம் வீட்டு செவ்வாயினால் பெரும் பொருட்செலவு ஏற்படும்.

No comments:

Post a Comment