Friday 21 December 2012

யாருக்கு என்ஜினியர் படிப்பு யோகம் ?


யாருக்கு என்ஜினியர் படிப்பு யோகம் ?


" செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் 
அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை "  


ஒருவரின் ஜாதகத்தில் நான்காம் வீட்டை கல்வி ஸ்தானம் என்றும் , இரண்டாம் வீட்டை வாக்கு ஸ்தானம் என்றும் , ஐந்தாம் வீட்டை அறிவு ஸ்தானம் என்றும்  கூறுவார்கள்.

மேலே கூறப்பட்ட வீடுகள் கெட்டு காண பட்டாலும் அந்த வீடுகளில் பாவிகளான சனி ராகு கேது செவ்வாய்  அமைய பெற்றாலும் புதன் பகவான் வக்ரமோ அஷ்தங்கமோ நீச்சமோ பெற்று இருந்தாலும் உயர் கல்வி பெற தடை உண்டாகிறது.

௧. ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீடு வலு பெற்று இருந்தாலும் வாக்கு ஸ்தானாதிபதி உச்சம் பெற்று காண பட்டாலும் உயர் கல்வியும் பட்ட கல்வியும் அமைய பெறுகிறது.


௨. ஒருவருடைய ஜாதகத்தில் இரண்டாம் வீடு என்று சொல்லப்படும் வாக்கு ஸ்தானத்தில் புதன் பகவான் பலம் பெற்று காணப்பட்டால் பட்டபடிப்பு மட்டும் இன்றி மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெரும் அமைப்பு ஏற்படுகிறது.

௩. இரண்டில் புதன் பலம் பெற்று இருந்தாலும் அதனுடன் சனி ராகு சேர்க்கை உண்டானால் படிப்பில் தடை கொடுக்கும்.

௪. ஒருவருடைய ஜாதகத்தில் 2,4,5,9 போன்ற ஸ்தானங்களில் குரு சுக்கிரன் புதன் போன்ற சுப கிரகம் இருந்தாலும் அல்லது பார்வை செய்தாலும் உயர் கல்வி பட்ட கல்வி மேற்பட்ட கல்வி உண்டாகிறது.

௫. நாலாம் வீட்டிற்கு அதிபதி புதனுக்கு கேந்திரத்தில் சுபர் அமைய பெற்றாலும் உயர்கல்வி உண்டாகிறது.

௬. ஒருவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு நாலாம் வீட்டில் செவ்வாய் பகவான் அமைய பெற்று இருப்பதோடு அவரே ஆட்சி உச்சம் பெற்று காணப்பட்டால் பெரியியல் கல்வி கற்கும் அமைப்பு உண்டாகிறது.

௭. செவ்வாய் புதன் சேர்க்கை இருப்பதோடு குருவின் பார்வையும் இருந்தால் பொறியியல் கல்வி உண்டாகிறது. அதில் சாதனை செய்கின்ற அமைப்பு உண்டாகிறது.

௮. செவ்வாய் புதன் பரிவர்த்தனை பெற்றாலும் எஞ்சினியர் கல்வி யோகம் உண்டாகிறது.

௯. புதன் சாரத்தில் செவ்வாயும் செவ்வாய் சாரத்தில் புதனும் இருந்தால் பொறியியல் கல்வி கற்கும் அமைப்பு உண்டாகிறது.

௰. தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் செவ்வாய் அமையபெற்று நாலாம் வீட்டை பார்வை செய்தால் பொறியியல் கல்வி கற்கும் யோகம் அமைய பெரும்.

                *********** ஹரி ஓம் நமோ நாராயணாய  **************

No comments:

Post a Comment