Friday, 21 December 2012

ஒருவருக்கொருவர் சந்திக்கும் பொழுது வணக்கம் தெரிவிப்பது ஏன்?


ஒருவருக்கொருவர் சந்திக்கும் பொழுது வணக்கம் தெரிவிப்பது ஏன்?
Temple images
இந்தியர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் பொழுது நமஸ்தே அல்லது நமஸ்காரம் என்று கூறி வணக்கம் தெரிவிப்பது மரபு. இரண்டு உள்ளங்கைகளையும் நெஞ்சின் முன் ஒன்று சேர்த்தவாறு வைத்துக் கொண்டு, தலையைத் தாழ்த்தி நமஸ்காரம் என்று கூறுகிறோம்.
சம வயது உடையவர், நம்மைவிட, சிறியவர்கள், வயது முதிர்ந்தவர்கள், நண்பர்கள் ஆகிய அனைவரையும் வணக்கம் கூறித்தான் வரவேற்கிறோம். சாஸ்திரங்களில் ஐந்து வகையான மரபு வழிவரவேற்பு முறைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் நமஸ்காரம் என்பது ஒன்று. பொதுவாக நமஸ்காரம் என்றால் நெடுஞ்சான் கிடையாகக் கீழே விழுந்து வணங்குதல் என்று பொருள் கொள்ளப்படும் ஆயினும் இச்சொல் தற்காலத்தில் நாம் ஒருவரை ஒருவர் நமஸ்காரம் என்று கூறி வரவேற்பதையும் குறிக்கிறது.
ஏன் கூறுகிறோம்?: நமஸ்காரம் என்பது நமது பண்பாட்டின் அடையாளமான ஓர் வரவேற்புச் சொல். அது வழிபாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆயினும் அச்சொல்லின் பின்னே ஓர் உயர்ந்த தத்துவம் அடங்கியுள்ளது. சமஸ்கிருதத்தில் நமஸ்தே என்பது நமஹ+தே என்று பிரிக்கப்படுகிறது. இதன் பொருள் நான் உங்களைத் தலை தாழ்த்தி வணங்குகிறேன் அல்லது எனது வணக்கங்கள் அல்லது நான் நெடுஞ்சாண் கிடையாகக் கீழே விழுந்து வணங்குகிறேன் என்பதாகும். நமஹ என்ற சொல்லிற்கு நமம (என்னுடையது அல்ல) என்று பொருள் கொள்ளலாம். இவ்வாறு வணங்கும்போது மற்றவர் முன்பாக நமது அகங்காரம் வெகுவாகக் குறைந்து மறைந்தொழிகிறது.
இருவர் சந்திக்கும்போது அவர்களது மனங்கள் ஒன்றோடொன்று உறவாடுவதுதான் உண்மையான சந்திப்பாகும். நாம் ஒருவரை வணங்கி வரவேற்கும்போது நமஸ்காரம் என்கிறோம். இதன் பொருள் நம் இருவரின் மனங்கும் வகையில்தான் உள்ளங்கைகளை நெஞ்சின்முன் ஒன்றாகச் சேர்க்கின்றனர்.
சிரம் தாழ்த்தி வணங்குவது அன்பும் பணிவும் கலந்த நட்பை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தும் ஒரு செய்கை. இதன் பின் ஒரு ஆழ்ந்த ஆன்மிக உட்பொருளும் பொதிந்துள்ளது. என்னுள் உறைந்துள்ள உயிர்த் தத்துவமான, தெய்வத்தன்மையுடைய ஆன்மா அல்லது இறைவன்தான்ல, அனைத்திலும் நிறைந்து நிற்கிறான் என்ற உண்மையை உணர்ந்திருப்பதைக் காட்டவே, நாம் சந்திக்கும் மனிதரிடமும் எங்கும் நிறைந்த இறைவனை நாம் காண்பதைத் தெரிவிக்கும் வகையில் சிரசினைத் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம்.
இந்த உண்மைகளை நாம் உணரும், பொழுது நமது வரவேற்பு ஒரு சடங்காகவோ, கருத்தாழ மற்ற ஒரு சொல்லாகவோ இராது. மாறாக, ஒருவரை வரவேற்கையில், நமது வணக்கம் இருவருக்குமிடையே அன்பும், மரியாதையும் கலந்த ஒரு சூழ்நிலையை உருவாக்கி, அதன் பலனாக ஒருவருக்கொருவர் உணர்ச்சி பூர்வமாக உண்மையான உணர்வோடு ஒன்றிட வழிவகுக்கும்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. எது எப்படியோ அய்யா! இந்த மாதிரி கைகூப்பி வணங்கினாலே, அவர்கள் மீது தனி ஒரு மரியாதை தோன்றும். மட்டுமின்றி, ஒரு நாகரீகமான பண்பாடு+ பழக்கம் அவர்களிடம் இருக்கும்.

    ReplyDelete