Tuesday, 18 December 2012

தெருகுத்து


தெருகுத்து


உச்ச ஸ்தானத்தில் ஏற்படக் கூடிய தெருகுத்து நன்மையை தரும். நீச்ச ஸ்தானத்தில் மீது ஏற்படும் தெரு குத்து கெடுதியை தரும். அதாவது

     



வடக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கு திசையின் மீது ஏற்பட கூடிய தெரு குத்து நன்மையை செய்யும். அதுவே வடமேற்கு திசையில் தெருக்குத்து ஏற்பட்டால் அது கெடுதியை தரும்.


 
கிழக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கு பகுதியில் தெரு குத்து ஏற்பட்டால் அது கெடுதியை செய்யாது. அதுவே தென் கிழக்கு பகுதியில் தெரு குத்து ஏற்பட்டால் அதனால் கெடுபலன்கள் ஏற்படும்.


   
தெற்கு பார்த்த வீட்டிற்கு தென்கிழக்கு பகுதியில் ஏற்பட கூடி தெரு குத்து கெடுதியை செய்யாது. அதுவே தென்மேற்கு பகுதியில் தெரு குத்து ஏற்பட்டால் கடுமையான பாதிப்பை தரும்.


      மேற்கு பார்த்த வீட்டிற்கு வடமேற்கு பகுதியில் ஏற்பட கூடிய தெரு குத்து கெடுதியை செய்யாது அதுவே தென்மேற்கு பகுதியில் ஏற்பட கூடிய தெரு குத்து கெடுபலனை உண்டாக்கும்.

1 comment: