Wednesday 19 December 2012

முதல் வீடு


முதல் வீடு

இதுவரை நாம் பொதுவானபலன்களை மட்டும் பார்த்தோம். இப்பொழுது ஜாதகத்தில் ஒவ்வொரு வீட்டையும் பார்க்கலாம். ஒவ்வொரு வீட்டுக்கும் என்ன என்ன குணங்கள் இருக்கின்றன என்று பார்ப்போம்.

முதலில் முதல் வீட்டுக்கு என்ன குணங்கள் என்று பார்ப்போம். முதல் வீட்டை எப்படி கண்டுபிடிப்பது. ஜாதகத்தில் ல என்று போட்டிருக்கும் அது தான் முதல் வீடு. அது தான் ஒருவரின் தலைபகுதி. அவர் முகம் எப்படி இருக்கும். குணம் எப்படி இருக்கும். உயரம் எவ்வளவு. அவர் வாழ்க்கையில் எந்தளவு முன்னேறுவார் என்று காட்டும். இதை மட்டும் வைத்து பலன் சொல்லகூடாது.

லக்கினத்தின் மீது எந்த கிரகத்தின் பார்வை விழுகிறது. லக்கினம் சென்று அமர்ந்த இடம் எல்லாத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பலன் சரியாக வரும்.

சிலபேருக்கு லக்கினம் கெட்டு இருந்தாலும் மற்ற வீட்டின் கிரகங்கள் மூலம் நல்ல வாழ்க்கை அமையும். அதனால் அனைத்து வீட்டின் தன்மைகளும் கணக்கில் கொண்டு பலன் சொல்ல வேண்டும். லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருந்தால் நல்லது. கெட்ட கிரகங்கள் இருந்தால் பல துன்பங்களை அனுபவிக்கவேண்டும்.

இப்பொழுது லக்கினாதிபதி சென்று அமரும் பலன்களைப்பற்றி பார்க்கலாம். லக்கினாதிபதி முதல் வீட்டில் இருந்தால் ஆட்சியில் இருக்கிறார் என்று அர்த்தம். அதனால் நல்ல ஆயுள் இருக்கும் கஷ்டம் இல்லாத வாழ்க்கை அமையும். நல்ல மரியாதையுடன் வாழ்க்கை நடத்தபவராகவும் இருப்பார்.

லக்கினாதிபதி 2 ஆம் வீட்டில் இருந்தால் சுயசம்பளத்தில் குடும்பத்தை நடத்துபவராகவும் நல்ல குடும்ப வாழ்க்கையும் அமையும். 2 ஆம் வீடு குடும்பம் ஸ்தானம் ஆகையால் குடும்பம் மூலம் வருமானத்தை பெறலாம்.

லக்கினாதிபதி 3 ஆம் வீட்டில் இருந்தால் மூன்றாம் வீடு தைரியம் ஸ்தானம் அதனால் மிகுந்த தைரியசாலியாக இருப்பார்கள். தம்பி மூலம் வருமானம் இருக்கும். அடிக்கடி சிறு பயணங்கள் ஏற்படும்.

லக்கினாதிபதி 4 ஆம் வீட்டில் இருந்தால் தாய் நன்றாக இருப்பார் தாய் மூலம் வருமானம் இருக்கும். கல்வி நன்றாக வரும். கல்வி என்றால் பள்ளி படிப்பு நன்றாக இருக்கும். உயர்கல்விக்கு வேறு வீட்டை பார்க்க வேண்டும். நல்ல வீடு அமையும். தாய்வழியில் நன்றாக உதவி இருக்கும்.

லக்கினாதிபதி 5 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல குழந்தை பாக்கியம் அமையும். குழந்தை மூலம் நல்ல பெயர் கிடைக்கும். தெய்வ ஆற்றல் கிடைக்கும். மத வழிபாடு சத்சங்கம் செய்தல் ஆகியவை கிடைக்க பெறும். குலதெய்வம் அருள் கிடைக்கும்.

லக்கினாதிபதி 6 ஆம் வீட்டில் இருந்தால் உடல் நோய் உடையதாக இருக்கும் அல்லது அடிக்கடி மருத்துவச் செலவு வைக்கும். 6 ஆம் வீடு சத்துரு ஸ்தானம் அதனால் விரோதிகள் மூலம் தொந்தரவு இருந்துக்கொண்டே இருக்கும். பொதுவாக 6 ஆம் வீட்டில் லக்கினாதிபதி இருப்பது நல்லதல்ல.

லக்கினாதிபதி 7 ஆம் வீட்டில் இருந்தால் மனைவியும் மூலம் சொத்துக்கள் கிடைக்கப்பெறும். மனைவியின் சம்பாதியத்தில் வாழ்பவராகும் இருப்பர். அடிக்கடி வெளியில் சுற்றபவராகவும் இருப்பார்கள்.

லக்கினாதிபதி 8 ஆம் வீட்டில் இருந்தால் நீண்ட ஆயுள் இருப்பார் ஆனால் மிகுந்த வறுமையுடன் குடும்பத்தை நடத்துபவராகவும் இருப்பார்கள். கடன் தொல்லை இருந்துகொண்டு இருக்கும். ஒரு சிலர்கள் உடல் நோய் இருக்கும்.

லக்கினாதிபதி 9 ஆம் வீட்டில் இருந்தால் தகப்பனாரின் ஆதரவை பெற்றவராவார். தந்தையார் நன்றாக இருப்பார் அதைபோல் முன்னோர்களின் ஆசி பெற்றவராவார். சிலர் வெளிநாடுகளில் சென்று வருவார்கள். தெய்வ அருள் கிடைக்கும்.

லக்கினாதிபதி 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தொழில் அமையும். தொழில்துறையில் வளர்ச்சி இருக்கும். அரசாங்க உதவி கிடைக்க பெறுவார்கள். உறவினர்கள் மூலம் மதிக்கப்படுவார்கள்.

லக்கினாதிபதி 11 ஆம் வீட்டில் இருந்தால் வாழ்க்கை முழுவதும் நல்ல நிலையில் இருப்பார்கள் . நல்ல தொழில் அமையும். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட ஆயுள் இருக்கும்.

லக்கினாதிபதி 12 ஆம் வீட்டில் இருந்தால் அவ்வளவு நல்லதல்ல எவ்வளவு வருமானம் கிடைத்தாலும் செலவு செய்துவிடுவார்கள். எந்த வேலையும் ஒழுங்காக செய்ய மாட்டார்கள். வேலையில் இருந்தால் ஒரு இடத்தில் நிரந்தரமாக இருக்கமாட்டார்கள். அடிக்கடி இடம் மாற்றல் ஆகும். சோம்பேறி என்று பெயர் எடுப்பார்கள்.

No comments:

Post a Comment