Wednesday, 19 December 2012

முக்தி கிடைக்க ரிசர்வ் செய்யலாம்!


இங்கு வந்தால் இப்போதே முக்தி கிடைக்க ரிசர்வ் செய்யலாம்!
Temple images
திருவாரூரில் பிறந்தால் முக்தி. காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி. உயிர் போகும் நேரத்தில் நினைக்க அருள்புரிவாய் அருணாச்சலா என அப்பர் கூறியுள்ளார். சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. வாழ்நாளில் ஒரு தடவையேனும் நடராஜரைத் தரிசித்தால் முக்தி கிடைத்து விடும். அதிலும், மார்கழி திருவாதிரையன்று தரிசித்தால், நமது பிறப்பற்ற நிலையை ரிசர்வ் செய்துவிட்டு வந்து விடலாம். நந்தனார் என்னும் சிவபக்தர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அக்காலத்தில், இப்பிரிவினர் கோயிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கியிருந்தனர். ஆனால், சிவன்மீது கொண்ட பக்தியால், நடராஜருடன் ஐக்கியமானார். நீங்களும், ஒருமுறையாவது சிதம்பரம் சென்று, பிறவிக்கடனை தீர்த்து விடுங்கள்.

No comments:

Post a Comment