Wednesday, 19 December 2012

ஆறாம் வீடு


ஆறாம் வீடு

இப்பொழுது நாம் ஆறாம் வீட்டை பற்றி பார்க்கலாம். ஆறாம் வீடு சத்ருஸ்தானம் ரோக ஸ்தானம் ஆகும். கடன், வியாதி பகைவர்களின் தொல்லை, சிறைபடுதல், விரோதங்கள், விஷபீடைகள், திருட்டுப்போதல் ஆகியவற்றைப் பற்றி ஆறாம் வீட்டின் மூலம் நாம் அறியலாம்.

இப்பொழுது ஆறாம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

ஆறாம் வீட்டு அதிபதி 1 ஆம் வீட்டில் இருந்தால் சதா வியாதிகளும் நோய் நொடிகளும் இருக்கும் தைரியமில்லாதவராகவும் எதிரிகளால் தொல்லை இருந்துகொண்டே இருக்கும்.

ஆறாம் வீட்டு அதிபதி 2 ஆம் வீட்டில் இருந்தால் வாக்குவன்மை இருக்காது நல்ல பேச்சு இருக்காது. அதிகமாக கடன்களை வாங்கி செலவு செய்வார்கள். கல்வி வராது. கண் கோளாறு இருக்கும்.

ஆறாம் வீட்டு அதிபதி 3 ஆம் வீட்டில் இருந்தால் சகோதர சகோதரிகள் விரோதிகளாக இருப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது.

ஆறாம் வீட்டு அதிபதி 4 ஆம் வீட்டில் இருந்தால் தாயாருடைய உடல் நலம் பாதிக்கப்படும் நிலம் வீடுகள் இருந்தாலும் வருமானம் இருக்காது. கடன்களால் அந்த சொத்துக்களை விற்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபதி 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரதோஷம் ஏற்படும். கடன் தொல்லைகள் அதிகமாகும் எல்லோரும் சண்டை செய்பவராகவும் இருப்பார்கள் சிறைவாசம் வறுமை ஆகியவற்றை அனுபவகிக்க வேண்டும். பிறரை ஏமாற்றி பிழைப்பை நடத்துவார்கள்.

ஆறாம் வீட்டு அதிபதி 6 ஆம் வீட்டில் இருந்தால் கடன் தொல்லை படுத்தி எடுத்துவிடும். சுபகிரகங்கள் பார்வை ஏற்படின் எதிரி மூலம் சம்பாத்தியம் இருக்கும்.

ஆறாம் வீட்டு அதிபதி 7 ஆம் வீட்டில் இருந்தால் இல்லற வாழ்க்கை கசக்கும். இருவருக்கும் விவாகரத்துவரை கொண்டுவிடும். மனம் அமைதி இருக்காது.

ஆறாம் வீட்டு அதிபதி 8 ஆம் வீட்டில் இருந்தால் எட்டாம் வீட்டில் வறுமைகள் நிறைந்து காணப்படும். குடும்பத்தில் உள்ள பொருட்களை விற்று குடும்பம் நடத்தவேண்டி வரும்.

ஆறாம் வீட்டு அதிபதி 9 ஆம் வீட்டில் இருந்தால் தந்தை வழி சொத்து நாசமாகும். பிறர் ஏமாற்றி விடுவார்கள். பாபகாரியங்கள் செய்ய அஞ்சமாட்டார்கள். பெரியவர்களுடன் சண்டை ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபதி 10 ஆம் வீட்டில் இருந்தால் அவன் சம்பாதிக்கும் வழி திருட்டுதனமாக இருக்கும். பிறர் பொருளையே நம்பி இருப்பான். ஊர் சுற்றி திரிவான். மக்கள் மனதில் அயோக்கியன் என்று பெயர் எடுப்பான். சுபகிரகம் பார்வை ஏற்படின் அனைத்திலும் வெற்றி பெருவான்.

ஆறாம் வீட்டு அதிபதி 11 ஆம் வீட்டில் இருந்தால் மூத்த சகோதர்கள் வியாதியுடன் இருப்பார்கள் கடன் இருக்கும். சிலபேருக்கு விரோதிகள் மூலம் லாபம் இருக்கும்.

ஆறாம் வீட்டு அதிபதி 12 ஆம் வீட்டில் இருந்தால் எதிரிகளால் அடிக்கடி இடமாற்றம் ஏற்படும. அனாவசியமான செலவு இருக்கும. குறியில் நோய் ஏற்படும்.

No comments:

Post a Comment