Wednesday, 19 December 2012

திருமணத்திற்க்கு ஏற்ற நாட்கள்


 திருமணத்திற்க்கு ஏற்ற நாட்கள்



வணக்கம் நண்பர்களே ஏழாம் வீட்டு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். ஏழாம் வீட்டு தசாவில் முக்கியமான ஒன்றாக திருமணம் இருக்கிறது. திருமணத்தை எந்த நாட்களில் நடத்தலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம்.
மாதம்
மாதங்கள் வைகாசி,ஆனி,ஆவணி,கார்த்திகை,தை,பங்குனி ஆகிய மாதங்களில் திருமணத்தை நடத்தலாம்.
திதி
வளர்பிறையில் தான் திருமணம் நடத்த வேண்டும்.
திதி : வளர்பிறை துதியை, திருதியை,பஞ்சமி,சப்தமி,ஏகாதசி,திரயோதசி ஆகிய திதிகளில் நடத்தலாம்.
கிழமை
கிழமைகள் திங்கள், புதன், வியாழன், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் திருமணம் செய்யலாம்.
லக்கினங்கள் 
ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,துலாம்,தனுசு,கும்பம்,மீனம் இந்த லக்கினங்களில் நடத்தினால் நன்மை தரும். லக்கினத்திற்க்கு 7 ல் , 8 ல் கிரகங்கள் இல்லாமல் இருந்தால் கூடுதல் சிறப்பு.
நட்சத்திரங்கள்
ரோகினி, மிருகசீரிஷம்,மகம்,உத்திரம், அஸ்தம், சுவாதி,அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் திருமணம் செய்தால் நல்லது.
இந்த நட்சத்திரங்களில் ஆண் ,பெண் இருவருக்கும் அவரவர் நட்சத்திரம் வரும் போது திருமணம் நடத்தகூடாது. மனநிலை நன்றாக இருக்காது அதனால் திருமணம் நடத்தகூடாது.

No comments:

Post a Comment