Wednesday, 19 December 2012

மருமகளால் அதிர்ஷ்டமா?


 மருமகளால் அதிர்ஷ்டமா?


வணக்கம் நண்பர்களே இப்பதிவில் உங்கள் வீட்டிற்க்கு வந்த மருமகளால் அதிர்ஷ்டமா என்று பார்க்கலாம். இதை படித்துவிட்டு வீட்டுக்கு வந்தவள் சரியில்லை என்று அடித்து துரத்திவிட்டு விடாதீர்கள். இன்றைக்கு பெண்களுக்கு எதிரி பெண்களாக தான் இருக்கிறார்கள். 
அடுத்த வீட்டு பெண்ணையும் தன் பெண்ணாக தான் பார்க்க வேண்டும். உங்கள் மகனின் வாழ்வில் பங்கு எடுத்துக்கொள்ள வந்தவள். உங்களின் மகனின் இரத்த உறவாக ஆகபோகிறவள் அவள். அவளை நீங்கள் மதிக்கும் போது உங்களை அவள் மிகுந்த பாசத்துடன் பார்த்துக்கொள்வாள். நீங்கள் முதுமையில் தனிமையில் இல்லாமல் இருக்க அவளை நீங்கள் பாசத்துடன் பார்த்துக்கொள்வது நல்லது. 
பதினோராவது வீட்டு அதிபதி முதல் வீட்டில் அல்லது ஐந்தாவது வீட்டில் இருந்தால் உங்கள் மருமகள் வந்த நேரம் உங்கள் வீடு செல்வ செழிப்பில் திளைக்கும். பணமழையாக கொட்ட ஆரம்பிக்கும்.தொட்டது அனைத்தும் தங்கமாக மாறும்.
அவள் அதிர்ஷ்டம் இல்லாமல் இருந்தால் கூட அவளை அதிர்ஷ்ட தேவதையாக மாற்றுவதற்க்கு வழி இருக்கிறது. அவளை வெள்ளிக்கிழமை அன்று லட்சுமியை மனதார பிராத்தணை செய்ய சொல்லுங்கள். ஏதாவது ஒரு வெள்ளி அன்று லட்சுமி கோவிலுக்கு அழைத்து செல்லுங்கள். ஒன்பது வாரம் இப்படி செய்யும் போது உங்கள் மருமகள் அதிர்ஷ்ட தேவதையாக மாறுவாள்.
ஒரு சில ஊர்களில் லட்சுமி கோவில் இருக்காது. பெருமாள் கோவில் மட்டும் இருக்கும் அப்படி பட்ட ஊர்களில் இருக்கும் பெருமாள் கோவிலில் லட்சுமி இருக்கும் அதை வணங்கலாம். அதே பலனை கொடுக்க ஆரம்பிக்கும்.
இவ்வாறு செய்தால் உங்கள் மருமகள் அதிர்ஷ்ட தேவதையாக மாறுவாள்.செய்து விட்டு பலனை சொல்லுங்கள். 

No comments:

Post a Comment