Monday, 31 December 2012

கணவன் / மனைவி உறவு முக்கியமா? இல்லை அந்த நட்பு முக்கியமா?


கணவன் / மனைவி உறவு முக்கியமா? இல்லை அந்த நட்பு முக்கியமா?

சிறிய சிறிய தவறுகளான ஈர்ப்புத்தன்மை என்பது எல்லோருடைய வாழ்கையிலும் நேரிடும். அதை நாம் தவிர்ப்பது என்பது நம் கையி ல் தான் உள்ளது. அதற்கு நம்முள் ஏற்ப டும் தேவையற்ற சிந்தனைகளான தூண் டுதல்களை தவிர்ப்பது நல்லது. இல்லை யேல் அது நம்மை பெரும் பிரச்சனைக ளுக்கு உள்ளாக்கும்.
ஆனால் கல்யாண வாழ்கைக்குள் நுழை ந்தபின், கடந்த காதல் வாழ்க்கையை மற ப்பது மிகவும் நல்லது. இதனால் எத்தனை யோ பிரச்சனைகளில் இருந்து விடை பெறலாம். ஏனெனில் துரதிர்ஷ்ட வசமாக நம் காதல் நம்மை சிந்திக்க தூண்டும். அவர்களை தொடர்புகொள் ள செய்யும். ஆகவே அதை நமக்கு நாம் போட்டுகொள்ளும் வேலிகள் மூலம் தவிர்க்கலாம். மேலும் திரும ணமான ஆண், பெண் இருவரும் சில நிபந்தனைகளை அவரவர்களு க்கென கடைபிடித்தால், அது சுகமான மற்றும் சந்தோசமான வாழ் க்கையை வாழ வழி வகுக்கும். இப்போது எப்படிப்பட்ட நிபந்த னைகளை மேற்கொள்ள வே ண்டும் என்று பார்ப்போ மா!!!
1. அவரவர்களுக்கென சில விரு ப்பங்கள் இருக்கும். அதை சிலரி டம் பார்க்கும் போது ஈர்ப்பு ஏற்ப டும். அதை உங்கள் உணர்வுகள் தூண்ட செய்யும். இது எல்லோ ருக்கும் உள்ள ஒரு சாதாரண உணர்வு. ஆனால் அதை நாம் திருமண மான பின்னும் தொடர்ந்தால், அதை கள்ளக் காதல் என்று பெயரிடு வர். ஆகவே அந்த வாய்ப்பை நாம் கொடுக்காமல், “எத்தனை விபரித ங்கள் வரும்?” என்பதை நாம் உணர்ந்தால், அதில் இருந்து எளிதில் விடை பெறலாம்.
2. எண்ணங்கள் மட்டுமே நடவடிக்கை களுக்கு வழிவகுக்கும் என்பதால், மற்றொரு நபருடன் இருப்பது போன்ற சிந்தனைகளை தவிர்ப் பது நல்லது.
3. தன் மீது ஆண்கள் ஆசை கொள்ளும் படி நடந்து கொள்ளும் பெண் ணாகவோ அல்லது அவர்கள் மயங்கும்படி நடந்து கொள்வதையோ தவிர்க்க வேண்டும்.
4. அனைவருக்கும் காதல் ஈர்ப்பு மற்றும் ஆசை இருக்கும். அதனால், ஆபத்தை உருவாக்கும் சூழல்களில் இருந்து விலகி இருப்பது நல் லது. உதாரணமாக, எதிர் பாலின நண்பருடன் தனியாக மதிய உணவு என்று உணவகம் செல்வது, இல்லையேல் வீட்டில் தனி யாக இருக் கையில், உங்கள் கணவன் அல்லது மனைவி வேலைக்கு சென்றிரு க்கும் சமயம் அவர்களை வீட்டிற்கு ள் அனுமதிப்பது போன்ற செயல்களை அனுமதிக்க வேண்டாம்.
5. எதிர் பாலின நண்பர்களுடன் சொந்த மற்றும் முக்கியமான பிரச் சினைகளை பற்றி விவாதிக்க வேண்டாம். உதாரணமாக, கணவன் அல்லது மனைவியுடன் உள்ள பாலியல் பிரச்சனைகளை பற்றி பேசு வது பெரும் விபரீதங்களை உண்டாக்கும்.
6. எதிர் பாலின நண்பர்களுடன் நட்புறவு கொள்வது. உதாரணமா க, மனைவி கணவரிடமோ அல்ல து கணவன் மனைவியிடமோ, எதிர்பாலின நண்பர்களுடன் நட்பை வைத்திருப்பது பிடிக்கவில் லை என்று சொல்லும்போது, ” அவர் என் நண்பர்.” என்று சொல்லி அவருடன் நட்பை தொடர்வதா ல் வீட்டிற்குள் பிரச்சினைகள் தொடரும். இந்த மாதிரி பிரச்சனை வந்தால், அப்போது கணவன் /மனைவி உறவு முக்கியமா? இல்லை அந்த நட்பு முக்கியமா? என்று நன்கு யோசித்து செயல்பட்டால், ஒரு நல்ல தீர்வுக்கு வந்துவிடும்.
7. எப்போதும் வாழ்க்கை துணையிடம் பொறுப்புடன் நடந்து கொள் வதினாலும் மற்றும் உங்கள் நட்பை பற்றி மனம் திறந்து பேசுவதாலும், இல்வாழ்கையா னது சந்தோசமாக இருக்கும்.
8. ஆலோசனை கொடுக்கும் மற்றும் நலம் விரும்பியாக இருப்பவ ரிடம், குடும்ப வாழ்க்கையைப் பற்றி விவரிப்பதால், இல்வாழ்க்கை பலமடையும். மேலும் அவர்களின் ஆதரவு உங்களை ஊக்குவிக்கும். அதிலும், எதிர் பாலின நண்பர்களாக இருந்தால், அவர்களுடன் பழகும் போது, அவர்களுடைய நடவடிக்கை யானது மனதிற்கு பிடிக்கவரும்போது, அது காதலாக மாறும். அதனால் நட் பை கலங்க விடாமல் பார்த்துக் கொ ள்வது மிக முக்கியம்.
எனவே திருமண வாழ்க்கைக்கு எந்த வகையான ஆபத்தும் ஏற்படாமல் இரு க்க, “எப்பொழுதும் நம் கணவன், நம் குழந்தை” என்ற சிந்த னையை மனதில் கொண்டால், வாழ்க்கையா னது சந்தோ ஷத்துடன், சுகமாக இருக்கும். என்ன நண்பர்களே சரிதானே?

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. இறைவன் படைத்த அனைவருமே, அழகுதான். ஒவ்வொரிவரிடமும், ஒவ்வொருவிதமான அழகு இருக்கும். அந்த அழகுகளில், நாம் ஒன்றைத் திருமணம் என்ற பெயரில் தேர்ந்தெடுத்தபின், நெட்டையோ, குட்டையோ, அழகோ, அழகில்லையோ, நாம் தேர்ந்தெடுத்தபின், அவரோடு வாழ்வதுதான், வாழ்க்கை. குடும்பத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்வது தான் பெண்களுக்கு அழகு. ஒரு ஆண்மை குறைபாடு உள்ளவனாக இருந்தால், விதிவிலக்கு. இதுவும் கூட அந்த காலத்தில், கணவன் மனைவி இருவரும், அவர்களுக்குள்ளே, வேறுவிதமாக ஒருவருக்கொருவர் சந்தோஷமாக நடந்துகொள்வார்கள். அதை வெளியே சொல்லவும் மாட்டார்கள். கணவன், மனைவி உறவு பரம ரகசியம். தற்போதுள்ள உலகம், காம வெறி பிடித்த உலகம். கணவன் எவ்வளவு அருமையாக அழகாக மனைவியை நடத்தினாலும், யார் ஒருவர் இனிமையாக பேசுகிறார்களோ, யார் ஒருவர் அவள் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து, அவளை மயக்குகிறார்களோ, அதாவது, தன்னடக்கம் இல்லாமை, கண்டவர்களோடு ஊர் சுற்றியும், கணவன்மீது, மரியாதையும், பாசமும் அற்று வெறும் இச்சைக்காக மின்மினிப்பூச்சிபோல் வந்து விழுவதால், நல்ல கணவன் கிடைத்தும், அவர்களின் புலன் அடக்கம் இல்லாமையால், அவர்களுக்கு கிடைத்த நல்ல வாழ்க்கையையும் இழந்து, ஆண் துணையின்றி, பதவிகள் இருந்தும், தன்னைக் காத்துக்கொள்ள கணவன் என்ற துணை இல்லாமையால், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, என்ற சம்பவங்கள் தான் நடைபெறுகிறது. கணவனைத் தவிர, மற்றவர்கள் அனைவருமே, ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். அதன்பின்பு வாழ்வதெல்லாம், அவர்களிடம் இருக்கும் பணத்திற்காக மட்டுமே. ஒரு காலகட்டத்தில், இவர்கள் கைக்கு அனைத்து பணம், சொத்துக்கள் கைமாறியதும், இவர்கள் தூக்கி எரியப்படுவார்கள் என்பதுதான் உண்மை.
    தன் ஐம்புலன்களையும், ஒரு பெண் அடக்கி ஆளவில்லையேல், அவள் நிம்மதியற்ற வாழ்க்கையைதான் எதிர்கொள்ள வேண்டும். ஆணாக இருந்தாலும் அதுதான். முதலில் கணவன், மனைவி, அதன் பின்பு குழந்தைகள், நாள் செல்ல செல்ல உறவினர்கள் என்று, ஒரு குடும்ப கூட்டமாக இருப்பதுதான் அழகு.

    தனிமரம் ஒருபோதும் தோப்பாகாது. தோப்பாக வேண்டும் என்றால், பெண்கள் கையில்தான் இருக்கிறது. கணவன் என்பவன் மிருகத்துக்குச் சமம். அந்த கணவனை, நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது, ஒரு மனைவி குடும்பம் நடத்தும் திறமையில் உள்ளது. அப்போ, மனைவி என்பவள் சிந்திப்பது, நம் கணவருக்கு, எது பிடிக்கும், பிடிக்காது, நம் கணவரின் குணநலன்கள் எவ்வாறு, என்று தெரிந்து மனம்கோணாமல், அவர்போக்கில்போய், அவரை நம்முடையவராக்குவதில்தான், ஒரு மனைவியின் பெருமை அடங்கியிருக்கிறது. எந்த ஒரு பழக்கத்திற்குமே, உதவி என்று அடுத்தவர்களை, கணவன், மனைவி இருவருமே அணுகுவது சிறந்ததல்ல. ஏனென்றால், ஒன்றைப் பெற வேண்டும் எனில், ஒன்றை இழந்தே ஆக வேண்டும் என்பதை ஒருபோதும் அதுவும் மனைவி என்பவள் மிகவும் கவனமாக, ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்தால், உங்கள் குடும்பம் ஒரு அழகான பூந்தோட்டமாக, பூத்துக் குலுங்கும். வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்ந்து வெற்றி காணுங்கள். வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள். இழந்தவைகளை, திரும்பப் பெறுவது கடினம். வாய்ப்பிருக்கிறது. வாழ்க்கையை நழுவ விடாதீர்கள். கிடைத்த வாழ்க்கையை, சந்தோஷமாக ஏற்று நடத்துங்கள். வெற்றி நிச்சயம். நமக்காக இந்த உலகம் பரந்து இருக்கிறது. எங்கும்,"சிறகடித்துப் பறக்கலாம் வாழ்க்கையில் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்.

    வாழ்க வளமுடன், & நலமுடன்.

    உங்கள் நலம் விரும்பி Jansi kannan.

    ReplyDelete