வண்டி வாகன யோகம்
இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் வண்டி வாகனங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை. ஏனென்றால் வண்டி, வாகன நெரிசல்களில் நடப்பதற்கு பாதைகளும் இல்லை, நடந்து செல்வதை யாரும் விரும்புவதும் இல்லை. எங்கு சென்றாலும் காரிலோ, இரு சக்கர வாகனங்களிலோ சென்று இறங்குவதைத்தான் கௌரவமாக நினைக்கிறார்கள். அதிலும் சொந்தமான வாகனங்கள் இல்லை என்றாலும் கால் டாக்ஸி, ஆட்டோ என கட்டண வாகனங்களும் தாராளமாகவே கிடைக்கிறது. பஸ்ஸில் செல்பவர்களும் ரயிலில் பயணம் செய்பவர்களும் ஒரு புறம் ஷேர் ஆட்டோக்களும் பெருகிவிட்டதால், ஏதாவது ஒரு வாகனங்களில் பயணம் செய்யாதவர்களே இல்லை என கூறலாம். பள்ளிகளில் கூட இன்று இலவச சைக்கிள்கள் வழங்கப்படுவதால் எல்லோருக்குமே வாகன யோகமானது இருக்கத்தான் செய்கிறது என்றாலும் சொந்தமாக சம்பாதித்து அந்த வருமானத்தில் வண்டி வாகனம் வாங்க கூடியயோகம் இருந்தால்தானே மகிழ்ச்சி அந்த யோகம் யாருக்கு அமையும் என பார்ப்போமா?
ஒருவரின் ஜாதகத்தில் 4ம் வீடு வண்டி வாகன யோகத்தைப் பற்றி குறிப்பிடுவதாகும். வண்டி வாகனங்களுக்கு காரகன் சுக்கிரனாவார். 4ம் அதிபதியும் சுக்கிரனும் பலமாக இருந்து விட்டால் வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும். அதை அனுபவிக்கும் அதிர்ஷ்டமும் உண்டாகும். சுக்கிரனும் 4ம் அதிபதியும் சுபகிரக பார்வை, சுபகிரக சேர்க்கையுடன் இருந்து கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றால் சொகுசான ஆடம்பரமிக்க வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும்.
சந்திரன் பயணங்களுக்கு காரகன் என்பதால், சந்திரன் சுக்கிரன் 10ம் அதிபதியுடன் இருந்தால் வண்டி வாகனங்களை வாங்கி அனுபவிக்கும் யோகம், உடன் சனியின் சம்மந்தமும் இருந்தால் டிராவல்ஸ் மூலம் சம்பாதிக்கும் யோகம், பயண தொடர்புடையவைகளுக்காக சொகுசு வாகனங்களை வாங்கும் யோகம் உண்டாகும்.
சனி இரும்புக்கு காரகன் என்பதால் சனி சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 4ம் வீட்டதிபதியுடன் சம்மந்தம் ஏற்பட்டிருந்தால் பழைய வாகனங்களை வாங்கி அனுபவிக்கும் யோகம், கனரக வாகனங்கள் வாங்கக் கூடிய அதிர்ஷ்டம் உண்டாகும்.
No comments:
Post a Comment