Saturday, 26 January 2013

ருது

ருது
கேட்டை நட்சத்திரத்தில் ருதுவான பெண் மகாலட்சுமி போன்ற தெய்வீக அழகுடையவளாக இருப்பாள். அதிக கல்வி ஞானம் அமையாது. ஆனால் நல்ல சாதுரியமான புத்தி உடையவளாக இருப்பாள். பருவம் அடைந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகே திருமணம் ஆகும். பிறந்த வீடும், புகுந்த வீடும் வறுமையான சூழ்நிலையில் தான் இருக்கும். புகுந்த வீட்டில் அடி எடுத்து வைத்த்தும் வறுமை நிலை மாறி செல்வச் செழுமை ஏற்படும். அனுஷ நட்சத்திரத்தில் ருதுவான பெண் நல்ல நட்த்தையுள்ள உத்தமியாகவும், கணவரின் உறவினர்களால் பாராட்டப் படுபவளாகவும், கணவருக்கு இன்பமளிக்கும் ஆரோக்கியமான உடலமைப்பு உடையவளாகவும் இருப்பாள். அழகு, கவர்ச்சியும், பரிவுணர்ச்சியும், பிரியமான குழந்தைகளும் உள்ளவளாக இருப்பா.. விசாக நட்சத்திரத்தில் ருதுவான பெண் நல்ல அழகும், குணமும் மிக்கவராக இருப்பாள். விரைவிலேயே இவளுக்கு திருமணம் ஆகும். புகுந்த வீட்டில் செல்வம் புரளும். குடும்பத்தில் அனைவரையும் அடக்கி ஒரு அரசி போல் வாழ்கை நட்த்துவா... சுவாதி நட்சத்திரத்தில் ருதுவான பெண் நல்ல உயரமும், கொடி போன்ற உடலமைப்பும், பேரழகும் நிறைந்தவராக இருப்பாள். திருமணம் சற்று காலம் தாழ்த்தித்தான் நடக்கும். கணவரிடன் பாசமும், பற்றும் கொண்டு அவர் இட்ட கட்டளைகளை மீறாமல் வாழ்கை நட்த்துவாள். தெய்வ பக்தியும், நல்ல குணமும், சலிக்காமல் உழைக்கும் குணமும் கொண்டவளாக இருப்பாள். மாமனார், மாமியார் மெச்சும் அளவுக்கு நல்ல மருமகளாக விளங்குவா... சித்திரை நட்சத்திரத்தில் ருதுவான பெண் கடின உழைப்பாளியாகவும், வீட்டை திறமையாக நிர்வாகம் செய்யவும் தெரிந்தவராக இருப்பாள். வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து கஷ்ட நஷ்டங்களையும் மலர்ந்த முகத்துடன் ஏற்றுக் கொள்வாள். இனிய சுபாவம் உடையவள் ஆதலால் அனைவராலும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படுவாள். இவளுக்கு விரைவிலேயே திருமணம் ஆகிவிடும். கணவர் இவளிடம் ஆழ்ந்த பாசமும், பற்றும் கொண்டவராக இருப்பார். . அஸ்த நட்சத்திரத்தில் ருதுவான பெண் அன்பும், அழகும், உயர்ந்த மதிப்பும், பெருமையும், செல்வமும், நல்ல அனுபவங்களும் கொண்டவள். அவளிடம் எப்போதும் பணம் இருக்கும். நல்ல ஆடை ஆபரணங்களில் இச்சை உடையவளாகவும், எதையும் சேமித்து வைக்கும் குணமும், தாராள மனப்பான்மையும், தரும் சிந்தையும் உடையவளாக இருப்பாள். அவள் கணவன் வீட்டில் சிறிது காலம் வறுமையும், புத்திர தோஷத்தையும் அனுபவிக்க நேரும். ஆயினும் அஸ்த நடசத்திரத்தில் ருதுவான் பெண்ணுக்கு அநேக குழந்தை பிறக்கும்... உத்திர நட்சத்திரத்தில் ருதுவான பெண் பலமான உடல்கட்டுடையவள். பிறந்த வீட்டின் மீது பற்றுதலும், கௌரவத்திற்காக செயல்களும் இருக்கும். அதிக குழந்தை பேறும், வெறுப்புணர்ச்சி இன்றி எல்லோராலும் விரும்பபடுதலும், சினேகிதிகளிடையே மதிப்பும் இவளுக்கு ஏற்படும். இவள் செல்வம் மிகுந்த நல்ல குடும்பத்தில் பிறந்தவளாவாள். அவளால் அவள் கணவருக்கு செல்வமும், புகழும் உண்டாகும். பக்தி சிரத்தையும், நற்குணமும் உடையவளாக் இருப்பாள். அவள் மாத விலக்கின் போது வயிற்று... பூரம் நட்சத்திரதில் ருதுவான பெண் நல்ல உயரமும், மெலிந்த உடலுமாக இருப்பாள். சிவந்த நிறமும் உடையவள். நல்ல மன உறுதி படைதவளாக இருந்தாலும், பணிவான் இயல்பு கொண்டவளாக இருப்பாள். எதற்கும் யாருக்கும் அஞ்சமாட்டாள். காலம் கடந்து திருமணம் ஆகும். திருமணத்திலும் சிக்கல்கள் ஏற்படும். பரிகாரம் செய்வது சிறந்த்... மகம் நட்சத்திரத்தில் ருதுவான பெண் பிறந்த வீட்டில் தொடக்க காலத்தில் இருந்தே பலவிதமான சங்கடங்களுக்கு இலக்காக நேரிடும். இவள் உடல் திடமும், கண்ணியமும், மரியாதையும், மன உறுதியும், தாராள குணமும் படைத்தவளாக இருப்பாள். யாருக்கும் அஞ்ச மாட்டாள். இவளுக்கு சிறிது காலம் கழித்தே திருமணம் நடைபெறும். வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் கஷ்ட நஷ்டங்களையும் அடைய கூடியவளும் ஆவாள்... ஆயில்யம் நட்சத்திரத்தில் ருதுவான பலன்: இந்த பெண் உள்ளத்தில் சிறந்த குணங்களை பெற்று இருந்தாலும், வெளிப்படையான பேச்சு, செயற்பாடு காரணமாக எளிதாக மற்றவருடைய விரோதத்தை சம்பாதித்துக் கொள்வாள். இவளுக்கு சீக்கிரமாகவே திருமணம் ஆகும். கணவரிடன் உள்ளுற அன்பும் பாசமும் இருந்தாலும் அவளுடைய படபடப்பான உரையாடல் காரணமாக கணவருடைய கோபத்திற்க்கு இலக்காவாள். உண்மையிலேயே சிறந்த குணம் படைத்த இவள் சற்று நிதானமாகவும், அடக்கமாகவும் பேசி செயல்பட்டால் எல்லோரிடமும்... புனர்பூச நட்சத்திரத்தில் ருதுவான பெண் முதல் மூன்று பாதங்கள் மட்டும்: தன் கணவன் வீட்டில் தானே முதன்மையானவளாக இருப்பாள். மாமனார், மாமியாருக்கு பிடித்தவளாகவும் இருப்பாள். இவளாள் அவள் கணவருக்கு பொருள் வருவாய் உண்டாகும். இவள் தன் கணவனுக்கு விசுவாசமாகவும், சமய நெறியுணர்வு மிகுந்தவளாகவும் இருப்பாள். வெண்மையான பொருட்களில் அதிக விருப்பம் உள்ளவளாக இருப்பாள். அவளால் அவள் புகுந்த வீட்டிற்கே சிறப்பு உண்டாகும். ஆனால் பிறந்த வீடு நலிவடையும். பல குழந்தைகள் பிறந்து மகிழும் வாய்ப்பு உண்டாகும், என்றாலும் புத்திர தோஷம் உண்டு. (பரிகாரம் செய்வது நல்லது) திருவாதிரை நட்சத்திரத்தில் பருவம் அடைந்த பெண் பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் பலவிதமான கஷ்டங்களையும், நஷ்டங்களையும் சமாளிக்க வேண்டி இருக்கும். இவளுடைய திருமணமும் பலவித காரணங்களினால் தள்ளிப் போய் கொண்டு இருக்கும். முதிர்ந்த வயதில் தான் இவளுக்கு திருமணம் முடியும். (பரிகாரம் செய்தால் கஷ்டங்கள் குறைந்து விரைவில் திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கிறது). கணவன் கொடுமைக்காரனாக இருந்தாலும், தன் முயற்சியினால் சற்றும் மனகலக்கம அடையாமல், தொல்லை தொந்தரவுகளை எதிர்த்து சமாளித்து தன்னுடைய சுய முயற்சியினால் குடும்பத்தில் மகிழ்ச்சியையும், இன்பத்தையும் உண்டாக்குவாள். மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் முதல் பாதத்தில் ருதுவான பலன்: நல்ல குண இயல்பு பெற்றவளாகவும் நல்ல கல்வி ஞானம் உடையவளாகவும், குடும்பத்தை சிறப்பாக நடத்தி செல்பவளாகவும் இருப்பாள். இரண்டாம் பாதம்: சுமாரான அழகுடையவள். அதிக வேகமாக பேசுபவள். காதலித்து திருமணம் செய்து கொள்வாள். மூன்றாம் பாதம்: மெல்லிய உடல் அமைப்பு பெற்றவள். அச்ச உணர்வை கொண்டவளாகவும், கணவனுக்கு அடங்கி நடப்பவளாகவும் இருப்பாள். நான்காம் பாதம்: புத்திசாலியாகவும், தர்ம சிந்தனை உடையவளாகவும் இருப்பாள். புகுந்த இடத்தில் வெகு சீக்கிரத்தில் நல்ல பெயர் எடுப்பாள். கணவனுக்கு அடங்கி வாழ்கை நடத்துவாள். ரோகிணி நட்சத்திரத்தில் ருதுவான பெண், பலவகையான சிறப்பான பலன்களை பெற்றவளாக இருப்பாள். விரைவிலேயே இவளுக்கு திருமணம் நடந்து விடும். பொன் போல் பிரகாசிக்கும் உடல் நிறம் கொண்டவளாக இருப்பாள். சுருண்ட கூந்தலும், அழகிய கண்களும் உடையவளாகவும் பார்பதற்க்கு மிகவும் அழகானவளாக இருப்பாள். கண்ணீயமும், நல்ல நடத்தையும் இயல்பாகவே இவளுக்கு இருக்கும். பருவம் அடைந்த உடன் பிறந்த வீடு செழிப்படையும். புகுந்த வீட்டில் அன்பான கணவரும், நல்ல குழந்தைகளும் உடையவளாகி, மாமனார், மாமியார் மற்றும் பலரும் மெச்சும்படி சௌபாக்கிய வாழ்கை வாழ்வாள். வாழ்கையில் கொள்கைகளும், தெய்வ பக்தியும் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். வாகனம், மாடு கன்றுகள், எடுபிடி ஆட்கள் போன்ற சகல வசதிகளுடன் வாழ்கை அமையும். அதே போல் அவள் விரும்பிய வாறு சகல் ஆடை அணிகளல்ன்கள் நிரம்பி இருக்கும். பாலும், பாயசமும் இவளுக்கு மிகவும் விருப்பமானதொன்றாகும். கார்த்திகை நட்சத்திரதில் ருதுவான பெண் சற்று முன் கோபமும் எதிலும் கண்டிப்பாக இருக்கும் மனோபாவமும் கொண்டவளாக இருப்பாள். இவளுக்கு அமையும் திருமணம் காதல் திருமணமாக இருக்கும். கணவர் கல்வித் துறையில் நல்ல பதவியில் இருப்பார். குடும்பத்தில் மாமனார், நாத்தனார் போன்றவர்கள் இவளுடைய கட்டுப்பாட்டுக்கு அடங்கியவர்களாக இருப்பார்கள். இவளுக்கு தொடக்க காலத்தில் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படக்கூடும். வாழ்க்கையின் மத்திய பகுதியில் பிறக்கும் குழந்தைகள்தான் நிலைக்கும். பரணி நட்சத்திரத்தில் ருதுவான பெண் சற்று பருமனான உடலை பெற்றவளாக இருப்பாள். கல்வியறிவு அதிகமாக ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால் நுண் அறிவு பெற்றவளாக இருப்பதால் கல்விக்கு அவசியமே இல்லாமலே வாழ்கையைச் சிறப்பாக நடத்துவாள். புகுந்த இடத்தில் எல்லோரிடமும் இணக்கமாக நடந்து அனைவருடைய மதிப்பையும் பெறுவாள். கணவன் வியாபாரத் தொடர்புடையவராக இருப்பார் என்றாலும் குடும்பத்தில் செல்வச் செழுமை இருப்பதாக கூறமுடியாது. கணவன் மனைவிக்கு அடங்கி அவன் சொற்படி நடப்பவராக இருப்பார். சற்று தாமதமாக திருமணமாகும் இந்தப் பெண்ணுக்கு மிகவும் குறைவான குழந்தைகளே பிறக்கும். அசுவின் நட்சத்திரத்தில் ருதுவான பெண்ணுக்கு உடலில் லேசான குறைப்பாடுகள் இருக்ககூடும். இவளுக்கு சிறு வயதிலேயே திருமணம் ஆகிவிடும். தொடக்கத்தில் புகுந்தவீட்டில் வேதனையான அனுபவங்களுக்கு இலக்காக வேண்டி வரும். மாமியார் வீட்டில் உள்ள பெண்களின் கடுமையான எதிர்ப்பை சமாளிக்க வேண்டிவரும். ஆனால் கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்குமாதலால் பொதுவாக மகிழ்ச்சியுடனேயே இருப்பாள். குறிப்பாக அசுவினி முதல் பாதத்தில் பருவம் அடைந்த பெண்ணுக்கு சிறப்பான பலன்களை கூறலாம். ரேவதி நட்சத்திரத்தில் ருதுவான பெண் மிகுந்த பாக்கியமுடையவள். அதிகமான சீதனத்தோடு கணவன் வீடு சென்று சேர்வாள். அழகான ருப சௌந்தரியமும், மிதமான இன்ப வேட்கையும் உடையவள். தீர்மானமான உணர்வு திடவுள்ளமும் கொண்டவள். தேர்ந்த அறிவாளி. தன் கணவனுக்கு மேன்மையான யோகத்தை உண்டாக்க கூடியவள் உத்திரட்டாதி நட்சத்திரதில் ருதுவான பெண் அளவான உயரமும் அதற்கேற்ப பருமனும் உடையவள். அழகான நிறமும் ரூப லாவண்யமும் வாய்த்தவள். கண்ணியமும், கணவரிடம் அதிகப் பிரியமும் உள்ளவள். சகல வசதிகளும் நிறைந்த சுகவாழ்க்கை நட்த்துவாள். எல்லோராலும் மதிக்கப்பட்டுப் பெருமையோடு விளங்குபவள். நன்மக்களை பெறுவாள்... பூரட்டாதி நட்சத்திரம் முதல் பாத்த்தில் ருதுவான பெண் தன் கணவனிடம் அதிகமான பிரியமுடையவள். இரண்டாம் பாதத்தில் ருதுவான பெண் பணிந்து போகும் சுபாவம் உடையவள். மூன்றாம் பாதத்தில் ருதுவான பெண் எல்லோருக்கும் நன்மையே செய்யும் நல்ல மனம் உடையவள். நான்காம் பாதத்தில் ருதுவான பெண் சொன்ன சொல் தவறாதவள...

No comments:

Post a Comment