பிறந்த வருடத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதைக் கூட்டுங்கள். அதை நீங்கள் பிறந்த வருட எண்ணோடு கூட்டுங்கள். கூட்டி வரும் எண்ணைக் கொண்ட வருடம்தான் திருப்பு முனையைக் கொடுக்கும் வருடமாகும். மறுபடியும் அடுத்த திருப்பு முனை எப்போது என்று தெரிய, கிடைத்த அந்த வருட எண்ணையே மீண்டும் கூட்டி முதல் வரியில் சொல்லிய மாதிரியே செய்தீர்களானால் மீண்டும் ஒரு புதிய வருடத்தின் எண் கிடைக்கும் அந்த வருடம்தான் அதற்கு அடுத்த Turning Point. இப்படி கணக்கிட்டுக்கொண்டே போகலாம் உதாரணம் வேண்டாமா? இரண்டு உதாரணங்களைத் தருகிறேன். நமது உள்ளங்களைக் கொள்ளை கொண்ட இசைஞானி இளையராஜா அவர்களின் பிறந்த வருடத்தை எடுத்துக் கொள்வோம் அவர் பிறந்தது 1943ம் வருடம் 1943 - கூட்டல் தொகை 17 17 ---------- 1960 - கூட்டல் தொகை 16 16 ---------- 1976 - கூட்டல் தொகை 23 23 ---------- 1999 --------- இளைய ராஜாவின் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படுத்திய வருடங்கள்:- 1960, 1976 & 1999 ---------------------------------------------- 1960 - 1975 17 வயது வரை கிராமத்தில் இருந்த ராஜா அவர்கள் ஊரை விட்டுப் புறப்பட்டு, தன் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன்அவர்களுடன் சேர்ந்து முதலில் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளிலும், பிறகு பல இயக்கங்களின் மேடைகளிலும் பாட ஆரம்பித்ததும், பல இசைக் கருவிகளைக் கற்றுக் கொண்டு வாசிக்க ஆரம்பித்ததும் இதற்குப் பிறகுதான், திரு,.தன்ராஜ் மாஸ்டரிடம் இசையை நன்கு கற்று பாண்டித்யம் பெற்றதும் இந்தக் காலகட்டத்தில் தான்.பல இசை அமைப்பாளர்களிடம் பணிபுரிந்து திரை இசையின் நுட்பங்களை முழுதாகத் தன் மனதில் உள் வாங்கிக் கொண்டதும் இந்தப் பீரியடில்தான் 1976 - 1998 1976ம் ஆண்டு திரு.பஞ்சு அருணாசலம் அவர்கள் தயாரித்த "அன்னக்கிளி" படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்புக் கிடைத்ததுதான் பெரிய திருப்புமுனை. பட்டி தொட்டிகளிலெல்லாம் " மச்சானைப் பாத்தீங்களா, மலை வாழைத் தோப்புக்குள்ளே" பாட்டு ஒலித்து ஒரே மாதத்தில் இவர் பிரபலமாகியதோடு, மொத்த தமிழ்த்திரை உலகத்தையும் தன்னைத் திரும்பிப் பார்க்கவைத்தார் என்பது நமக்குத் தெரிந்ததுதானே! அதற்குப் பிறகு திரையுலக ராஜாவாக, ஒருவருடமல்ல இரண்டு வருடங்களல்ல சுமார் 23 ஆண்டுகள் கோலோச்சினார் என்று சொன்னால் அது மிகையல்ல 1999 முதம் இன்று வரை AR.ரெஹ்மான், பரத்வாஜ், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் என்று இளம் ரத்தங்களெல்லாம் திரையிசையில் நுழைய, இவரும் தன் பங்கிற்குத் தன் மகன்கள் - கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரையும் திரைக்கப்பலில் ஏற்றி விட்டு விட்டுத்தான் சற்று ஒதுங்கி, ஆன்மீகம், தியானம், Symphony என்று களம் இறங்கி விட்டார். |
No comments:
Post a Comment