Saturday, 26 January 2013

ராஜயோகம்

ராஜயோகம்
யோகா எனும் சொல் யுஜ் என்னும் வடமொழிச் சொல்லின் விரிவாக்கம். யுஜ் என்பதற்கு கூட்டு (unite) - கூட்டாக என்னும் பொருள் வரும். ராஜா என்பதற்கு அரசன் என்று பொருள். ராஜயோகம் என்றால் அரசனுக்கு நிகரான யோகம் என்று பொருள் ராஜயோகம் என்பதற்கு, ஜாதகனுக்கு அந்தஸ்தைத் தரக்கூடிய கிரகங்களின் கூட்டணி என்று எடுத்துக் கொள்ளலாம். அதற்கு எதிர் மாறாக அவ யோகம், அரிஷ்ட யோகம், தரித்திர யோகம் என்று மூன்று விதமான - ஜாதகனுக்கு தீமையைச் செய்யக்கூடிய யோகங்களும் உண்டு! அவ என்பது கெட்டது (Ava means bad) அரிஷ்டம் என்பது நோயைக் குறிப்பது (Arishta means one causing diseases) தரித்திரம் என்பது வறுமையைக் குறிப்பது (Daridra means poverty) ராஜயோகங்களிலும் மூன்று பிரிவுகள் உள்ளன 1. தன ராஜயோகம் (yogas for wealth) 2. கீர்த்தி ராஜயோகம் (yogas for name and fame) 3. சன்யாச ராஜயோகம் (reigning as a religious head) சன்யாசத்தில் ராஜயோகமா...ஹி.ஹி என்று சிரிக்க வேண்டாம். அரசர்கள் வந்து வணங்கி விட்டுப் போகும் அளவிற்கு சித்தியை பெற்ற சன்யாசிகள் உண்டு. இருந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ரமண மஹரிஷியைச் சொல்லலாம் அவரை, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் பலமுறை தமிழகத்திற்கு வந்து வணங்கிவிட்டுப்போயிருக்கிறார். அதை நினைவில் வையுங்கள் ------------------------------------------------------ 1. தன ராஜயோகம் (yogas for wealth) 2,6,10, & 11ம் வீட்டதிபதிகளின் சேர்க்கை அல்லது பரிவர்த்தனையால் இந்த யோகம் ஏற்படும் 2. கீர்த்தி ராஜயோகம் (yogas for name and fame) இது திரிகோண அதிபதிகளூம், கேந்திர அதிபதிகளும் சேர்வதால் உண்டாகும் 3. சன்யாச ராஜயோகம் (reigning as a religious head) 9, 12, 10 and 5ஆம் அதிபதிகள் சேர்க்கை அல்லது பார்வைகளால் இந்த யோகத்தைக் கொடுப்பார்கள் பணம், புகழ், மதிப்பு, மரியாதை & செல்வாக்கு போன்றவைகள் தடையில்லாமல் ஜாதகனுக்குக் கிடைக்க இந்த யோகங்கள் அவசியம். இந்த யோகம், ராசியிலும், நவாம்சத்திலும் இருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த யோகங்கள் உரிய பலனைத் தராது. அதை நினைவில் வையுங்கள். Navamsa is 1/9 th division of a Rasi Chart. In short it is the magnified version of the Rasi Chart! அவை எல்லாவற்றையும் விட முக்கியம். ஜாதகத்தில் லக்கின அதிபதி வலுவாக இருக்க வேண்டும். வலு என்பது சூப்பர் சுப்பராயன் போன்ற உடல் வலு அல்ல! லக்கின அதிபதி லக்கினத்தில் இருக்க வேண்டும். அல்லது தனது பார்வையால் லக்கினத்தைத் தன் கையில் வைத்திருக்க வேண்டும். குரு அல்லது புதன் லக்கினத்தில் இருக்க வேண்டும். அல்லது லக்கினம் அவர்களின் பார்வையைப் பெற்றிருக்க வேண்டும். Lagna is deemed to be strong only when it is aspected or occupied by its own lord, Jupiter or Mercury and not by other planets

No comments:

Post a Comment