திருமணமும் இரண்டாம் வீடும்
வணக்கம் நண்பர்களே! ஒருவருக்கு களத்திர பாவகம் என்னும் ஏழாம் வீடும் குடும்ப பாவகம் என்னும் இரண்டாம் வீடும் நன்றாக அமைந்துவிட்டால் அவர்களுக்கு திருமண வாழ்வு நன்றாக அமைகிறது. இந்த இரண்டிலும் பிரச்சினை வந்துவிட்டால் அவர்களுக்கு திருமண வாழ்வு என்பது ஒரு போராட்டமாக இருக்கும். இப்பதிவில் குடும்ப ஸ்தானம் என்னும் இரண்டாம் வீட்டைப்பற்றி பார்க்கலாம்.
குடும்ப ஸ்தானம் என்னும் இரண்டாம் வீ்டு நன்றாக அமைந்துவிட்டால் இளம்வயதில் திருமணம் நடைபெற்றுவிடும். இளம்வயது என்றால் எப்படி 25 வயது என்று வைத்துக்கொள்ள வேண்டியது. இப்பொழுது ஒருவர் படித்து நல்ல வேலைக்கு போய் இருக்கும் கடன்களை அடைத்து அவர் திருமணம் செய்ய எப்படியும் 32 வயது ஆகிவிடுகிறது. அப்பொழுது 32 வயது இளம்வயது என்று வைத்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கோலம்.ஆண்களாக இருந்தால் இந்த வயதை வைத்துக்கொள்ள வேண்டியது பெண்களாக இருந்தால் அதிகபட்சம் 25 வயதுக்குள் திருமணம் முடித்துவிடுகிறது நன்மை பயக்கும். பொதுவாக 25 வயதுக்குள் திருமணம் நடைபெறவில்லை என்றால் இரண்டாம் வீட்டிலும் ஏழாம் வீட்டிலும் பிரச்சினை என்று நீங்களாகவே நினைத்துக்கொள்ளுங்கள்.
நாம் பார்ப்பது இரண்டாம் வீடு அதனால் இந்த வீட்டை மட்டும் பார்த்துவிடலாம். இரண்டாம் வீடு என்பது தனவீடு என்றும் அழைக்கப்படுகிறது உங்களுக்கு வரும் பணவரவைப்பற்றி காட்டும் இடம். இந்த வீடு கெட்டால் உங்களுக்கு பணம் வராது ஒரே பணப்பிரச்சினையாக இருக்கும் இன்றைக்கு இருக்கும் விலைவாசியில் ஒருவருக்கு நன்றாக பணம் இருந்தால் மட்டுமே அவனால் குடும்பத்தை நடத்தமுடியும். இந்த வீடு கெட்டால் பணம் இல்லை அதனால் திருமணத்தை தள்ளிவைத்திருக்கிறேன் என்று சொல்லுவார்கள்.
இரண்டாம் வீட்டு அதிபதி கெட்ட கிரகங்களோடு சேர்ந்துக்கொண்டு இருந்தாலும் இரண்டாம் வீடு கெட்டுவிடும் அல்லது இரண்டாம் வீட்டில் தீயகிரகங்கள் வந்து அமருவதும் இரண்டாம் வீடு கெட்டுவிட்டது என்றும் அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சில ஜாதகங்களில் ஏழாம் வீடு நன்றாக இருக்கும் ஆனால் இரண்டாவது வீடு அடிப்பட்டு இருக்கும் அப்பொழுது பார்த்தால் நிறைய வரன்களை ஏழாம் அதிபதி தந்துக்கொண்டு இருப்பார் ஆனால் இரண்டாம் அதிபதி அந்த வரன்களை தள்ளிக்கொண்டு இருப்பார். அமையவிடமாட்டார் ஏன் என்றால் இரண்டாவது வீடு உங்கள் குடும்ப உறுப்பினர்களை காட்டும் இடம் என்பதால் உங்களுக்கு திருமணம் என்றால் என்ன அர்த்தம் உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கூடுதலாக வருகிறார். ரேஷன்கார்டில் புதிய நபரை சேர்க்க வேண்டும். கூடுதல் நபரை சேர்க்க இரண்டாவது வீடு உங்களுக்கு அனுமதி தராது. இந்த விதத்திலும் பிரச்சினையை இரண்டாவது வீடு தந்துக்கொண்டு இருக்கும்.
குடும்பஸ்தானம் கெட்டால் வாக்கு கெட்டுவிடும். வாக்கு ஸ்தானம் என்பதும் இரண்டாம் வீட்டை தான் குறிக்கும். உங்களுக்கு நிறைய வரன்களை உங்களின் வீட்டில் உள்ளவர்கள் கொண்டுவருவார்கள் நீங்கள் என்ன செய்வீர்கள் இவர் சரியில்லை அவர் சரியில்லை அவருக்கு தகுதியில்லை என்று உங்கள் வாயால் அனைத்து வரனையும் தள்ளிவிடுவீர்கள். இதில் பெரிய சிக்கல் என்ன என்றால் அனைத்து பேரையும் குறைசொல்லுவது உங்கள் வேலையாக இருக்கும். ஒரு தகவல் சொல்லுகிறேன் பாருங்கள் இந்த இரண்டாவது வீடு கெட்டால் அவர்கள் திருமணத்திற்க்கு முன்பே வேறு ஒருவருடன் காதலில் ஈடுபட்டு இருப்பார்கள்.
இவர்கள் காதலிக்கும் நேரத்தில் என்ன செய்து இருப்பார்கள் என்றால் சும்மா காதல் மட்டும் பண்ணி என்ன செய்யபோறோம் வா ஒரு நாள் ரூம் போடலாம் என்று இவர்கள் வாயால் சொல்லி இவர்கள் கெட்டுவிடுவார்கள். எப்படியும் காதல் ஒன்று சேராது. இவர்கள் வாயால் இவர்களை அசிங்கபடுத்திக்கொள்வார்கள். கடைசியில் தான் தெரியும் இவன் சும்மா இருந்தான் டா நானா வாயை கொடுத்து கெடுத்துக்கொண்டேன் என்று புலம்ப வேண்டிய நிலையை இரண்டாவது வீடு ஏற்படுத்திவிடும். இரண்டாம் வீடு கெட்டால் அவர்களாகவே தங்கள் வாழ்க்கையை கெடுத்துகொள்கிறார்கள்.
இதற்கு பரிகாரம் சொல்ல வேண்டியது சோதிடரின் தலையான கடமை என்பதால் இதோ பரிகாரம்
திருமண பேச்சின் போது வாயை வைத்துக்கொண்டு சும்மா இருப்பது நன்மை பயக்கும்.
என்னிடம் பணம் இல்லை அதனால் நான் திருமணம் செய்யவில்லை என்று நீங்கள் நினைக்காதீர்கள் இந்தியாவில் பணத்தை வைத்துக்கொண்டு தான் திருமணம் செய்ய வேண்டும் என்றால் இந்தியாவில் சந்நியாசி தான் அதிகமாக இருப்பார்கள்.
என்னை காதலித்தவர் நல்லவர் அவருடன் வாழ்ந்த நாட்கள் இந்த உலகத்தில் நான் பிறந்ததிலேயே அற்புத நாட்கள் என்று மனதில் வைத்துக்கெர்ண்டு வரனை தேடினால் இந்த ஜென்மத்தில் திருமணம் என்பது கேள்விகுறியாக இருக்கும்.
உண்மையில் காதலித்த நேரத்தில் நடந்ததை பார்த்தால் உலகத்தில் அந்த மாதிரி ஒரு ஏமாற்றுதல் சீட்டு கம்பெனி கூட அப்படி மக்களை ஏமாற்றி இருக்கமாட்டார்கள் அந்தளவுக்கு கேவலமாக இருந்து இருக்கும்.அதை நினைத்துக்கொண்டு இருப்பது உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே வைத்துக்கொள்ளும் மிகப்பெரிய கெடுதலாக தான் இருக்கும். அதை மறப்பது நல்லது.
இந்த வயதிலும் உங்களை திருமணம் செய்ய ஒருவனோ ஒருத்தியோ வந்து இருக்கிறார்களே என்று கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு திருமணத்திற்க்கு ஒத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் வயதைவிட ஏழு அல்லது ஐந்து வருட மூத்தவர்களை திருமணம் முடிப்பது கூடுதல் நன்மை ஏன் என்றால் நீங்கள் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டீர்கள் வயது கூடுதலாக இருந்தால் பொறுமையாக இருப்பார் அல்லவா.
உங்களை விட படிப்பில் வசதியில் குறைவு உள்ளவர்களை திருமணம் செய்துகொண்டால் லகான் உங்கள் கையில் இருக்கும் மகிழ்ச்சியாக திருமண வாழ்வு அமையும்.
இளம்வயதில் அனைத்து மனிதர்களும் தவறு செய்வது இயல்பு அதனால் அதை நினைத்துக்கொண்டு இருப்ப தான் மிகப்பெரிய தவறு.
இரண்டாவது வீட்டு அதிபதிக்கு முடிந்தால் அபிஷேகம் செய்யுங்கள் அல்லது அதற்கு செலவு அதிகமாக இருந்தால் ஒரு அர்ச்சனை செய்யுங்கள்.
No comments:
Post a Comment