Sunday, 13 January 2013

சோதிடர்களுக்கு அடிப்படை தகுதி என்ன ?


சோதிடர்களுக்கு அடிப்படை தகுதி என்ன ?



வணக்கம் நண்பர்களே! ஒரு நண்பர் எனக்கு கருத்து அனுப்பிருந்தார் உங்களுக்கு மரணபயம் வந்துவிட்டது அதனால் மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம் செய்யுங்கள் என்று எனக்கு சொல்லியுள்ளார் அவருக்கு நன்றி. அவர் மூலம் கடவுள் பலபேருக்கு ஒரு நல்ல தகவலை என் மூலம் கொடுப்பதற்க்கு அனுப்பியுள்ளார் மீண்டும் அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒருவன் சோதிடத்தை கையில் எடுத்துவிட்டால் அவனுக்கு மரணபயம் என்பது துளியும் இருக்ககூடாது. மரணத்தை மகிழ்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். சோதிடம் என்பதின் அடிப்படை சாராம்சம் என்ன என்றால் இதுவரை எத்தனை பிறவி எடுத்து வந்திருக்கிறோம் இனிமேல் எத்தனை பிறவி எடுப்போம் என்பதை காட்டும் ஒரு கருவி தான் சோதிடம்.

இந்த பிறவியில் இந்த ஆத்மா தங்கியிருக்கும் உடல் எப்படி இருக்கபோகிறது இந்த உடலின் நிலை என்ன என்று அனைத்தையும் உங்கள் ஜாதகத்தை வைத்து பார்த்துவிடலாம்.

இந்த உடல் எப்பொழுது அழியபோகிறது. எப்படி உயிர் போகும் இந்த உடல் எரிப்பார்களா அல்லது புதைப்பார்களா அல்லது ஏதாவது பறவைக்கு தானமாக கொடுப்பார்களா என்று சோதிடம் மூலம் காணமுடியும். உங்கள் இறுதிஊர்வலம் எப்படி இருக்கும் அதில் எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என்று சோதிடத்தில் ஒரு நிகழ்வையும் விட்டுவிடாமல் எழுதிவைத்திருக்கிறார்கள். இதனை எல்லாம் எழுதினால் ஒருவரும் இந்த பதிவு பக்கம் தலைவைத்து படுக்கமாட்டார்கள்.

ஏன் மரணத்தைப்பற்றி இப்பொழுது சொன்னேன் என்றால் நாம் பார்த்துக்கொண்டு இருப்பது ஏழாவது வீட்டு தசாவைப்பற்றி பார்த்துவருகிறோம் உங்களை கொல்லுவதில் முதல் ஆளாக வருபவர் ஏழாம் வீட்டு அதிபதி மரணத்தை கொடுப்பதில் முதல் நிலை தட்டிக்கொண்டு செல்லுபவர் இந்த ஏழாம் வீட்டு அதிபதி.

நான் ஏழாம் வீட்டு அதிபதி தசாப்பற்றி எழுதபோகிறேன் என்று சொன்னவுடன் நண்பர்கள் என்னிடம் முதலில் தெரிவித்த கருத்து என்ன என்றால் மரணத்தைப்பற்றி சொல்லாதீர்கள் என்று தான் சொன்னார்கள் அதனால் மரணத்தை தவிர்த்து பலன்களை மட்டும் சொன்னேன்.

ஜாதகத்தை கையில் எடுத்தவுடன் முதலில் ஆயுளை தேடி ஆஸ்தியை தேடு என்பார்கள். ஒருவனுக்கு ஆயுள் நன்றாக இருக்குமா என்று தான் முதலில் பார்க்க வேண்டும் அதன் பிறகு தான் ஆஸ்தியை தேடவேண்டும். 

நாம் எல்லாம் இன்று ஒரு புத்தகத்தையும் விடாமல் அப்படி காப்பி அடித்து இந்த கிரகம் இங்கு இருக்கிறது இந்த நட்சத்திரத்தில் செல்லுகிறது அஷ்டவர்கத்தில் இத்தனை பரல்கள் உள்ளது அதனால் இப்படி நடக்கும் என்று ஆயிரம் கணக்கு போட்டு பார்த்துவிட்டு தவறாக பலன்களை சொல்லுவோம் ஆனால் சில சோதிடர்களிடம் ஒரு இறந்தவரின் ஜாதகத்தை கொண்டு நீட்டினால் அவர் கையில் வாங்கிபார்த்துவிட்டு எந்த கணக்கையும் போடாமல் அவர் இவன் இறந்து இத்தனை நாட்கள் ஆகிவிட்டது நீ போயிகிட்டே இரு என்று சொல்லி அனுப்பிவிடுவார்.

சோதிடம் என்பது புத்தகத்தில் 25 சதவீதம் மட்டுமே படிக்கமுடியும் 75 சதவீதம் அது சோதிடம் மற்றவர்களுக்கு பார்க்கும்போது அது நமக்கு கற்றுதருகிறது. நீங்கள் சோதிடராக இருந்தால் மரணத்தைப்பற்றி கவலைபடமாட்டீர்கள். உண்மையான தேடுதலோடு சோதிடம் படிக்கவந்தால் அவனுக்கு மரணம் என்பது சந்தோஷமாகதான் இருக்க முடியும் இது தான் சோதிடர்களுக்கு அடிப்படை தகுதி.

No comments:

Post a Comment