Sunday, 13 January 2013

திருமண தடை பரிகாரம்


திருமண தடை பரிகாரம்



வணக்கம் நண்பர்களே ஏழாம் வீட்டு தசாவைப் பற்றி பார்த்து வருகிறோம். பொதுவாக மக்கள் அதிகமாக ஜாதகத்தை கையில் எடுத்தது திருமணத்திற்க்காக தான் இருக்கும் பல பேர்களின் ஜாதகங்களில் பல தோஷங்கள் ஏற்பட்டு அதனால் திருமணம் நடைபெறாமல் இருக்கின்றது.

பல பேர் திருமணத்திற்க்கு பிறகும் நிம்மதி ஏற்படாமல் பிரச்சினையில் வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். சிலர் பிரச்சினையின் உச்சிக்கே சென்று விவாகாரத்து வரை சென்றுவிடுகிறார்கள்.

திருமண நிகழ்ச்சியில் அதிகமாக பேசப்படும் கருத்து என்ன என்றால் செவ்வாய் தோஷமாகத்தான் இருக்கும். இந்த செவ்வாய் தோஷத்தைப் பற்றி நான் எழுதபோவதில்லை ஏன் என்றால் எந்த புத்தகத்தை எடுத்தாலும் இதை தான் எழுதி ஒரே போர் அடித்துவிட்டது நானும் எழுதினேன் என்றால் நம்ம பதிவு பக்கம் தலைவைத்து படுக்கமாட்டார்கள் அதனால் செவ்வாய்யை விட பெரிய வில்லன்கள் எல்லாவற்றையும் பார்த்துவிடலாம்.

திருமண பேச்சு எடுக்கும் போது பல தடைகள் ஏற்படும் இது கண்டிப்பாக நமது முன்னோர்களுக்கு நாம் ஒழுங்காக தர்பணம் செய்யாததால் ஏற்படும் தடையாக தான் இருக்கும் அல்லது முன் ஜென்மத்தில் செய்த பாவமாகவும் இருக்கும்.  இதில் என்ன பிரச்சினை என்றால் சில பாவங்கள் திருமணத்திற்க்கு பிறகு தான் பிரச்சினையை ஏற்படுத்தும். திருமண வாழ்வில் முதல் சிக்கல் ஏற்படுவதை இந்த முன்னோர்களை திருப்திபடுத்ததால் ஏற்படும் பிரச்சினை தான் இருக்கும்.

இந்த அவசர உலகத்தில் இப்பொழுது வீட்டில் இருக்கும் முதியவர்களை கூட கண்டுக்கொள்வதில்லை பின்பு எப்படி முன்னோர்களுக்கு நாம் திதி கொடுப்பது. கண்டிப்பாக செய்து இருக்க மாட்டோம். அதனால் முன்னோர்களை திருப்திப்படுத்திக்கொண்டு திருமண வாழ்க்கையில் இறங்குங்கள்.

திதி கொடுப்பது உங்கள் ஊரில் உள்ள அந்தணரை கூப்பிட்டு செய்யலாம். உங்களிடம் அதை செய்வதற்க்கு பணம் இல்லை என்றால் அதற்கு நீங்களே பரிகாரம் செய்துகொள்ளலாம்.

முன் ஜென்மம் என்றால் 16 ஜென்மங்களுக்கு சேர்த்து தான் பரிகாரம் செய்ய வேண்டும். அதனால் உங்கள் வீட்டை நன்றாக சுத்தம் செய்து கோமியம் தெளியுங்கள் நீங்கள் நகரத்தில் இருந்தால் கோமியம் கிடைப்பதற்க்கு கஷ்டமாக இருக்கும் அதனால் நகரத்தில் கடல் தண்ணீர் கொண்டு லேசாக தெளியுங்கள் கடல் தண்ணீர் நல்லது இதைப்பற்றி தனிப்பதிவே போடவேண்டும் பிறகு பார்க்கலாம். 

உங்கள் நகரத்தில் கடலும் இல்லை என்றால் மஞ்சள் தண்ணீர் போதுமானது. 16 இலையை போடுங்கள் அதில் அரிசியை நிரப்புங்கள் பச்சை அரிசி நல்லது. அந்த இலையில் வாழைக்காய் வைத்து உங்களால் முடிந்தால் காய்கறிகள் வாங்கி வைக்கலாம் வைத்து பூஜை செய்யுங்கள்.

நீங்கள் மனதால் 16 ஜென்மங்களின் பாவங்களையும் இத்துடன் தீரவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள். மந்திரங்கள் தெரிந்தால் சொல்லலாம். அன்று ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பது நல்லது. அந்த இலையை பசுமாட்டிற்க்கு கொடுக்கலாம்.

அதன் பிறகு உங்கள் திருமணத்தைப் பற்றி பேச்சை தொடங்குங்கள். எந்த பிரச்சினையும் இல்லாமல் உங்கள் திருமணம் விரைவில் நடைபெறும்.

சென்னையாக இருந்தால் உங்கள் திருமண அழைப்பை எனக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் திருமணத்திற்க்கு வந்து நல்ல சாப்பிட்டு விட்டு வருகிறேன். 

No comments:

Post a Comment