Thursday, 3 January 2013

விதியை வெல்ல


12ம் இடம் - விதியை வெல்ல


விதியை வெல்ல முடியாது. அதற்கு பரிகாரங்களும் கிடையாது. ஜோதிடத்தில் கூறப்பட்டவை கண்டிப்பாக நடந்தே தீரும். மாற்று கிடையாது.
ஆனால் அதை எவ்வாறு நாம் அனுபவிக்கப் போகிறோம் என்பது தான் ஜோதிடம் கூறும் சூட்சுமம். ஜோதிடத்தில் 12 பாவங்கள் ஆனால் அனைவருக்கும் 337 பரல்கள் (மதிப்பெண்கள்) தான். அப்படியிருக்க ஒரு பாவம் பலவீனமானால் கண்டிப்பாக மற்றொரு பாவம் பலமாகத்தான் இருக்கும் அப்படி இருக்கும் பாவ பலத்தை நாம் எப்படி நம் விதிகளுக்கு பயன் படுத்தப் போகிறோம் என்பது தான் இந்த சூட்சுமம். இது ஜோதிடத்தை உணர்பவர்களுக்கு மட்டுமே தெரிய வரும்.
உதாரணமாக
12ம் இடம் சம்பந்தப்பட்ட திசா புத்தி அந்தர சூட்சும காலங்களில் விரயம் நட்டம் செலவுகள் நடக்கும் என்பது ஜோதிட விதி. இந்த விதியை எப்படி மதியால் வெல்லலாம் என்று பார்ப்போம்.
செலவு என்பது என்ன? எதிர்காலத்திற்கு பயன்படாத ஆனால் நிகழ்காலத்தில் பயன்படக்கூடிய ஒன்று. விரயம் என்பது நம்மையறியாமலே நடக்கக்கூடிய செலவு. நட்டம் என்பது எதிர்பார்த்த அளவு பயன் கொடுக்காமல் இருப்பது.
மொத்தத்தில் கையில் உள்ள பணம் வெளியே போய்விடுவது.
  1. நீங்கள் செலவு செய்யாமல் சொத்தாக மாற்றி விடுவதன் மூலம் இந்த செலவு நாளைய சொத்தாக மாறிவிடும்  அதற்கு உங்கள் ஜாதகத்தில் சொத்தது வாங்கும் யோகம் இருப்பின்.
  2. இல்லையென்றால். புண்ணிய காரியத்திற்கு செலவு செய்தால் அந்த புண்ணியம் உங்களுக்கு நல்ல திசா காலங்களில் பயன் படும்.
  3. தொழில் உள்ளவர்கள் விற்காத சரக்கை மிகக் குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் இலாபம் அடையலாம்.
பணம் மட்டுமே விரயம் என்பதில்லை. நோய்கள் விபத்துகள் வீண் அலைச்சலகள் மூலம் கூட நமக்கு 12ம் இடம் பாதிப்பைத் தரலாம். அதற்கு என்ன செய்வது.
1. வாகனங்களை முறையாக பராமரிப்பது. அதுவும் செலவுதான் விபத்தைத் தவிர்க்க உதவும்.
2. ரத்த தானம் செய்வது – ரத்தம் வெளியேறுவதற்குச் சமம் தான்.
3. அடிக்கடி மருத்துவமனைகள் சென்று நோயாளிகளுக்கு உதவுவது. உங்கள் பணம் நோய்க்கு செலவிடப்படுகிறது.
4. அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்வதும் மருத்துவம் எடுத்துக் கொள்வதற்குச் சமம் தான்.
மொத்தத்தில் நீங்கள் உங்களுக்கு விதிக்கப்பட்டதை அனுபவிக்கிறீர்கள் ஆனால் அது உங்கள் விருப்படி அமைகிறது. உங்களின் தேவைகளை நிறைவேற்றுகிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் முடிவு தான் மதி. அந்த மதி உங்களின் விதியை மாற்றுகிறது எனக் கூறலாம். உண்மையில் உங்களுக்கு விதிக்கப்பட்டதை நீங்கள் உணரும் போது அதற்கான விடைகளைத் தேடும் போது அது நடைபெறுகிறது.
இப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு நம்மிடம் உண்டு. ஆனால் நம் ஜாதகத்தில் எந்த பாவம் பலம் எது நல்ல கிரகம் எந்த செயலை எப்பொழுது செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
ஆனால் எல்லாராலும் ஏன் இது சாத்தியப்படவில்லை. ஏன் ? அவர்களுக்கு மனோகாரகன் சரியில்லை அதாவது மதி வேலை செய்யவில்லை. அவர்கள் ஜோதிடத்தை உணரவில்லை என்பது தான்.

No comments:

Post a Comment