Thursday, 3 January 2013

கீதாசாரமும் ஜோதிடமும்


கீதாசாரமும் ஜோதிடமும்

எது நடந்ததோஅது நன்றாகவேநடந்தது

எது நடக்கிறதோஅது நன்றாகவேநடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்

உன்னுடையதை எதை நீ இழந்தாய்எதற்காக நீ அழுகிறாய்?எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைத்திருந்தாய்அது வீணாவதற்கு ?எதை நீ எடுத்து கொண்டாயோஅது இங்கிருந்தேஎடுக்கப்பட்டது.எதை கொடுத்தாயோஅது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ அது நாளைமற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள்அது வேறொருவருடையதாகும்





ஜோதிடம் பொதுவானது. யாருக்கும் சொந்தமானதில்லை
. ஒவ்வொருவரும் ஜோதிட நூல்களைப் படித்து, எழுதினால் தவறில்லை.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவானது இந்த ஜோதிடக்கலை. இன்று அண்ணாமலை பல்கலைகழகம்,மதுரை காமராஜர் பலகலைகழகம் போன்றவையும் ஜோதிடத்துக்கு என்று பட்டயம் வழங்கி பாடம் சொல்லி தருகின்றன.இவர்கள் நடத்தும் பாடங்கள் மிக நுணுக்கமாகவும் ,பழம்பெருமையும் ,கிரக கணக்கீடுகள் துல்லியமாகவும் இருக்கின்றன.ஜோதிடம் என்பதே கணக்குதான்.அறிவுகிரகம் புதன் வலுத்தவர்களும்,ஆன்மீக உணர்வை தருகிற ,பிறருக்கு நல்ல வழிகாட்டியாக திகழ வைக்கும் குருவும் ,வலுத்தவர்களும் தான் இக்கலையில் பிரகாசிக்க முடியும்.அதே போல மன திடம் தருகிற சந்திரனும்,ஜோதிட கிரகம் என சொல்லப்படும் செவ்வாயும் நன்கு அமைய வேண்டும்.இவை லக்னத்தில் இருந்து வாக்கு ஸ்தானம்,பத்தாமிடம் எனும் தொழில் ஸ்தானம் போன்றவற்றில் சிறப்பாக அமைய வேண்டும்.அவர்கள்தான் இதை படிக்க முடியும்.தொழிலாக செய்ய முடியும்

அடிப்படை ஜோதிட நூல்கள் 

தமிழில் ஜோதிட நூல்களை பொறுத்தவரை மொத்தம் 66 உள்ளன,அவற்றில் சாதக அலங்காரம் முக்கியமானது.இதை கீரனூர்நடராஜன் எழுதினார்.மங்களேஸ்வரியம், வீமகவி ஜோதிடம்,சாதகசூடாமணி, சினேந்திரமாலை, தாண்டவமாலை,சாதக சிந்தாமணி,சந்திர காவியம்,ஆனந்த களிப்பு , புலிப்பாணி ஜோதிடம்,அவசியம் படிக்க வேண்டிய நூல்கள்.

தனிப்பட்ட முறையில்  யாரும் ஜோதிடத்தை உரிமை கோரக் கூடாது என்பது தான் கீதையின் உபதேசம் 

No comments:

Post a Comment