Monday, 18 February 2013

ஏழாம் பாவகம்


ஏழாம் பாவகம்

ஐங்கரன் ஜோதிட பயிற்சி கல்வி மையம் நாமக்கல்

இந்த வாரம் பாவகத்தில் நாம் காண போவது ஏழாவது பாவகமாகும்
ஜாதகத்தில் பெரும்பாலானோர் தெரிந்து கொள்ள கூடிய பாவகம் இதுவாகும்,

அன்பு மாணவர்களே ,நம் வாழ்க்கை மிகுவும் விசித்திரமாகும், நாம் நினைப்பது ஒன்று கடவுள் நினைப்பது ஒன்று,
அதில் இந்த மனைவி விசயத்தில் நிறைய மாறுபடும்.
அழகே இல்லாத ஒருவனுக்கு அழகு நிறைந்த அதுவும் செக்க சிவந்த மனைவி அமைவாள்,
நமக்கு பொறாமையாக இருக்கும், ஆச்சரியமாக கூட இருக்கும்.
அழகே இல்லாத ஒருவளுக்கு, அழகான கணவன் அமைந்து விடுவான்
ஆனால் உண்மை என்ன? குடும்ப வாழ்க்கைக்கு அழகை விட நல்ல பண்பு,பொறுமை, கனிவான பேச்சு, நிறைந்த மரியாதை,  ஒத்துபோதல் இது இருந்தால் போதும் அழகு என்பது இரண்டாம் பட்சமாகி விடும்.
சரி ஏழாம் பாவகத்தை அலசுவோமா 
ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக்கல்யாணம்


என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்.

4.

அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது

நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை

பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக்

கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும்.

மகிழ்வுடையதாக இருக்கும்!

5.

ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால்

திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.

6.

குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள்

ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. கெட்டுப் போவது என்பது

- ஆம்பல் பூத்துத் தின்பண்டங்கள் கெட்டுப்போகுமே அது போலக்

கெட்டுப் போவது என்று பொருள் இல்லை. அவைகள் ஜாதகத்தில்

நீசம் அடையாமல் இருக்க வேண்டும்

7.

அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம்

அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந்தாள்

திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது.

8.

அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்கள் ப்ளஸ் லக்கின அதிபதி,

ப்ளஸ் ஏழாம் அதிபதி ஆகியவர்கள், மறைவிடங்களில் (Hidden Houses)

- அதாவது 6,8,12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது.

9.

இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும். அதாவது அஷ்டக

வர்கத்தில் 28 அல்லது மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும்.

திருமணத்திற்குப் பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த வேண்டாமா?

அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை

இங்கே விட்டு விட்டு வேலையின் பொருட்டு துபாய் போன்ற தேசங்களில்

போய் உட்கார்ந்து கொள்வது எப்படி நல்ல குடும்ப வாழ்க்கையாகும்?

கைபிடித்த மனனவியைவிட பொருள் ஈட்டல் முக்கியமா?

10

செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தோஷம் அல்லது

சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.

11.

ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும்,

ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து

கொள்கிறவன் பாக்கியசாலி!.

12.

1,4,7,10ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்ற பெண்

அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள்.

13.

7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய

பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை

மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.

14.

கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில்

புதன் இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.

15.

மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று

பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு

கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள்

யோகமான பெண்தான்.

16.

கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து,

அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின்

மனைவியாவாள். அதாவது அரசனின் மனைவியாவாள்.

இப்போது சொல்வதென்றால் நாடறிந்த பெரிய தலவரின் மனைவியாவாள்.

அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான்.

17.

எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும்.

லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள்

யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால்,

அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள்.

18.

திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு,

லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய

மூவரும் பலமாக இருக்க வேண்டும்.

19.

பெண்களுக்குப் பாகியஸ்தானமும், ஆண்களுக்கு லக்கினமும்

சிறப்பாக இருப்பது முக்கியம்

20.

இங்கே கூறப்படும் விதிகள் அனைத்தும் ஆண்களுக்கும்,

பெண்களுக்கும் பொதுவானதுதான்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

திருமண யோகத்திற்கு எதிரான சில அமைப்புக்கள்:

1.

லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து

இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று

இருப்பதும் கூடாது.

2.

ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத்

திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர்

உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்

3.

சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய

கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது.

4.

சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது.

5.

குரு பலவீனமாகி ஆறாம் வீட்டில் குடியிருப்பது கூடாது. உடன்

பாபக் கிரகங்கள் அந்த இடத்தில் அவருடன் சேர்ந்து இருப்பதும் கூடாது.

6.

சுபக்கிரகங்கள் மூன்றும் நீசம் பெற்றிருத்தல் கூடாது

7.

ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் நீசம் பெற்றிருப்பதும் நல்லதல்ல!

8

ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் அமர்வது நல்லதல்ல!

9.

எட்டாம் வீட்டுக்காரன் ஏழில் குடியிருப்பது நல்லதல்ல!

10.

ஏழில் சந்திரனுடன் சனி கூட்டணி போட்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல!

11.

ஜாதகத்தில் சுக்கிரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும், சந்திரனுக்கு எதிர் வீட்டில்

செவ்வாயும் இருப்பது நல்லதல்ல!

12

எழில் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர்கள் நல்ல நிலைமையில்

அமர்ந்திருப்பது நல்லது. செவ்வாயும், சனியும் எந்த நிலையில்

அமர்ந்திருந்தாலும் நல்லதல்ல!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இங்கே நான் எழுதிவருவது அனைத்தும் பொது விதிகள். ஒருவருடைய

ஜாதகத்தில் உள்ள பலவிதமான அமைப்புக்களை வைத்துப் பலன்கள் மாறுபடும்.



எப்போது திருமணம் - தெரிந்து கொள்ள ஒரு சூத்திரம்!

"சார், ரெம்ப நாளா, வீட்டில் வரன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள், ஒன்றும்

முடிந்த பாடாக இல்லை! எப்போது திருமணம் நடைபெறும்? அதைத் தெரிந்து

கொள்ள வழி இருக்கிறதா?"
குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம்


என்பார்கள். குரு பகவான் லக்கினத்தையோ அல்லது லக்கினத்திற்கு அடுத்துள்ள

இரண்டாம் வீட்டையோ அல்லது சந்திர ராசியையோ அல்லது சந்திர ராசிக்கு

அடுத்துள்ள இரண்டாம் வீட்டையோ கோச்சாரத்தில் சுற்றிவரும் போது, 5, 7, 9

ஆம் பார்வையாகப் பார்க்கும் நிலையை வியாழ நோக்கம் என்பார்கள்.



சுக்கிரனின் தசா புத்தி நடைபெறும் பொழுதும் திருமண யோகம் உண்டு. அதுபோல

தனிப்பட்ட சில ஜாதகங்களில் ஏழாம் வீட்டதிபரின் தசா புத்தி நடைபெறும்போதும்

திருமண யோகம் உண்டு.



அம்மாடியோவ், இத்தனை விஷயங்களைப் பார்க்க வேண்டுமா? குறுக்குவழி கிடையாதா?



ஏன் இல்லை? நமக்கு எப்போதும் குறுக்கு வழிதானே (short route) பிடிக்கும்!



ஒரு குறுக்கு வழியைச் சொல்லிக் கொடுக்கவுள்ளேன்.



திருமணமாகாதவர்களுக்கு அது பயன்படும். அதோடு திருமணமாகியவர்களுக்கு,

அவர்களுடைய வீட்டிலுள்ள மற்றவர்களுக்குப் பார்க்கப் பயன்படும்.



ஆகவே அதைக் கீழே கொடுத்துள்ளேன்.



விவரமாகவே கொடுத்துள்ளேன். தேவையானவர்கள், அவரவர்களாகவே பார்த்துக்

கொள்ள வேண்டுகிறேன்.பார்த்துச் சொல்லுங்கள் என்று யாரும் தங்களுடைய

ஜாதகத்தை அனுப்ப வேண்டாம். எனக்கு நேரமில்லை. நேரம்தான் என்னுடைய

முதல் பிரச்சினை. நாளொன்றுக்கு 48 மணி நேரமாக இருந்தால் நன்றாக இருக்கும் ???

---------------------------------------------------------------------------------

லக்கினத்தின் பாகைகள் கூட்டல் ஏழாம் வீட்டு அதிபதியின் பாகைகள்
வகுத்தல்  30 பாகைகள் = என்ன ராசி வருகிறதோ, அந்த ராசியில் கோச்சார குரு வரும்போது

திருமணம் நடைபெறும் (இது பொது விதி!)

---------------------------------------------------------------------------------

லக்கினாதிபதி, ஏழாம் அதிபதி, சுக்கிரன் ஆகியோர்கள் தங்கள் சுயவர்க்கத்தில்

ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால் உரிய காலத்தில்

திருமணம். அதாவது 21 வயது முதல் 25 வயதிற்குள் திருமணம்.

அவர்களில் இருவர் 3 அல்லது 4 பரல்களைக் கொண்டிருந்தால் சற்று வயதான  காலத்தில் திருமணம். அதாவது 30 அல்லது 32 வயதில் திருமணம்.   மூவருமே, 1 அல்லது 2 பரல்களை மட்டும் கொண்டிருந்தால் திருமண வாழ்க்கை  அமையாமலே போகலாம்!

--------------------------------------------------------------------------------
மனைவியின் நட்சத்திரம்:

லக்கினாதிபதியின் அட்ச ரேகை கூட்டல் சுக்கிரனின் அட்சரேகை வகுத்தல்

13.33 பாகைகள் = மனைவியின் நட்சத்திரம்.

சுக்கிரனை விட ஏழாம் வீட்டதிபன் வலுவாக இருந்தால்:
லக்கினாதிபதியின் அட்ச ரேகை கூட்டல் ஏழாம் வீட்டதிபனின் அட்சரேகை
வகுத்தல் 13.33 பாகைகள் = மனைவியின் நட்சத்திரம்.

எதற்காக வகுத்தல் 13.33 ?
360 பாகைகள் வகுத்தல் 27 நட்சத்திரங்கள் = 13.33 பாகைகள் (ஒரு நட்சத்திரத்தின் அளவு)
Example:
ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினதிபதி நிற்கும் அட்சரேகை: 298.01 கூட்டல்
ஏழாம் வீட்டதிபதி நிற்கும் அட்சரேகை 117.27 = 415.28
கழித்தல் ஒரு முழுச்சுற்று 360.00 = மீதி 55.28
இந்த 55.28 என்பது 5வது நட்சத்திரம் அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி
என்று எண்ணிக் கொண்டு வரும் போது ஐந்தாவது நட்சத்திரம். அதுதான் அந்த
ஜாதகரின் மனைவியின் நட்சத்திரம்.
---------------------------------------------------------------------------
திருமணம் ஆனவர்கள் வகுத்துப் பாருங்கள். சரியாக வந்தால் சந்தோஷப் படுங்கள்
வராவிட்டால் ஏன் வரவில்லை என்று மண்டையை உடைத்துக் கொள்ளாதீர்கள்.

இது ஒரு பொது சூத்திரம்தான். லக்கினாதிபன், அல்லது ஏழாம் வீட்டுக்காரன் அல்லது


சுக்கிரன் ஆகியோர்கள், ஜாதகத்தில் மறைந்திருந்தாலும் அல்லது வேறு கிரகத்தோடு

மோதி அஸ்தனமாகியிருந்தாலும், அல்லது வேறு அவயோகத்தில் அல்லது தோஷத்தில்

சிக்கியிருந்தாலும் அல்லது லக்கினத்திலோ அல்லது ஏழாம் வீட்டிலோ ஒன்றிற்கு

மேற்பட்ட கிரகம் இருந்தாலும்  இந்த Formula

வின்படி சரியான நட்சத்திரம் கிடைக்காது. அதனால்தான் அதை வலியுறுத்திச் சொல்கிறேன்.

பெற்றோர்களுக்குக் கட்டுப்பட்டு ஒரு இளைஞனோ அல்லது ஒரு யுவதியோ செய்து


கொள்ளும் திருமணத்தை பெற்றொர்களுக்குக் கட்டுப்பட்ட திருமணம் என்று

சொல்லலாம் இல்லையா?

"சார், நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். என் காதல் நிறைவேறுமா? என்னுடைய ஜாதகப்படி அதற்கு வாய்ப்புண்டா?

சரி "அந்தப் பெண்ணும் உங்களைக் காதலிக்கிறாரா?"

ஆம் அவளும் என்னைக் காதலிக்கிறாள்!"


அவளும் உங்களைக் காதலிக்கும்போது எதற்காக ஜாதகத்தைப் பார்க்கிறீர்கள்?


ஒரு பெண் தன்னுடைய இதயத்தை உங்களிடம் தந்து விட்டாள் அல்லது தன்னுடைய

இதயத்தில் உங்களுக்கு இடம் தந்து விட்டாள் என்னும் நிலை எவ்வளவு

உன்னதமானது? எவ்வளவு உயர்ந்தது? அதைவிட ஜாதகம் ஒன்றும் பெரிதல்ல.

அவளைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்.அதற்கான முயற்சியைச் செய்யுங்கள்"

விழிகள் படபடக்க, ஒரு இளம் பெண், ஒரு ஆடவனுடன் பேசுவதே பெரிய காரியம்.

அதற்கு அடுத்து அவனுடன் பழகுவது. அதற்கு அடுத்து நெருங்கிப் பழகுவது.

மனம் விட்டுப்பேசுவது. விரும்புவது. இப்படிப் பலநிலைகளைத்தாண்டித்தான்

காதல் உண்டாகும். முதல் நிலையிலேயே பல இளைஞர்களின் தாவு தீர்ந்து விடும்.

இதில் அந்தப் பெண்ணிடம், ஜாதகம் மற்றும் இதர புண்ணாக்குகளைக் கேட்டு வாங்கிப்
பார்த்துக் காதலிப்பது என்பது நடக்கிற காரியமா?



சரி வாங்கிப் பார்த்து, ஒத்து வராத ஜாதகம் என்றால் அல்லது உங்கள் ஜாதகப்படி
கட்டுப்பட்ட திருமணம்தான் என்றால் என்ன செய்வீர்கள்? காதலைப் பாதியில் முறித்துக் கொண்டு விடுவீர்களா? நடக்குமா அது?

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு" என்றார் வள்ளுவர்.

ஆகவே காதலிக்கத் துவங்கிவிட்டால் மற்றதை எல்லாம் கடாசி விடுங்கள்!
"காதலி கடைக்கண் கட்டிவிட்டால், கள்வனுக்கு மாமலையும் ஓர் கடுகாம்'     என்பதுதான் காதலின் இலக்கணம்!

மாமலையே கடுகாகி விடும் போது ஜாதகம் எதற்கு?

இரு மனங்கள் இணைவது மட்டுமே காதல்!

அவளோடு ஒரு நாள் வாழ்ந்தாலும் வாழ்க்கைதான்.
அல்லது அவளுக்காக ஒரு தாஜ்மகாலைக் கட்டும் அளவிற்கு வாழ்ந்தாலும் அது வாழ்க்கைதான்.

காதலில் கட்டுண்ட பிறகு எதற்கு அவநம்பிக்கை? ஏன் ஜாதகம் பார்க்க நினைக்கிறீர்கள்?

காதலில் அகப்பட்டுக் கொண்டால், ஜாதகத்தை மறந்து விடுங்கள்l!

ஜாதகத்தில் நம்பிக்கை இருக்கிறது என்றால், காதலில் ஈடு படாதீர்கள்!

தலை எழுத்துப்படிதான் - விதித்தபடிதான் எல்லாம் நடக்கும். ஒவ்வொருவருக்கும்

அவர்களின் தலை எழுத்துப்படிதான் திருமண வாழ்வு!

காதல் திருமணம் என்றால் காதல் திருமணம்தான்.
கட்டுப்பட்ட திருமணம் என்றால்அதுதான் நடக்கும். வருவதை ஏற்றுக்கொள்ள வேண்டும்!.

யாரும் எதையும் மாற்ற முடியாது. அதை உணர வேண்டும்.

எதையும் மாற்ற முடியாது என்றால் எதற்காக ஜாதகம்? எதற்காக ஜோதிடம்?

தனிப்பட்ட ஒருவனுக்காக ஏற்பட்டதல்ல ஜோதிடக்கலை! உன்னைக் காதல் தேடி   வந்து விட்டதா? காதல் செய்! அவ்வளவுதான்!

மெல்லியலாள் சாய்ந்தாள் தாங்கிக் கொள்: மீறி நெஞ்சில் அடி விழுந்தால் வாங்கிக் கொள்!

துன்பம், பிரச்சினை என்பது, காதல் திருமணத்திலும் உண்டு! கட்டுப்பட்ட  திருமணத்திலும் உண்டு. ஏமாற்றம் இரண்டிலும் உண்டு.எது நல்லது?  எதுகெட்டது? என்று விவாதம் செய்து, பிரித்து அலசவெல்லாம் முடியாது.
ஒரு ஆணிற்கு இரண்டு முகங்கள் உண்டு. காதலிக்கும்போது ஒரு முகம்தான்
பெண்ணின் கண்ணில்படும். இரண்டாவது முகம் திருமணத்திற்குப் பிறகுதான்

தெரியும். அதுபோல அவனுடைய குடும்பப் பின்னணியைப் பற்றிப் பெண்

நினைப்பது ஒன்றாக இருக்கும், திருமணத்திற்குப் பிறகு வேறொன்றாக இருக்கும். இதே விதிமுறைகள் பெண்ணிற்கும் சேர்த்துத்தான்.

பெற்றோர்கள் அக்கு வேறாக ஆணி வேறாக எல்லாவற்றையும் தீர விசாரித்துவிட்டுத்

தங்கள் பெண்ணிற்கோ அல்லது பையனுக்கோ மணம் முடிப்பதால். காதல் திருமணங் களைவிட கட்டுப்பட்ட திருமணங்கள் பாதுகாப்பானது.
காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும்.

அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும்.
சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில்  வெற்றி உண்டாகும்! சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ
அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் அரும்பும்.

அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை!
காதல் என்பது அவச்சொல் அல்ல!


இனக்கவர்ச்சியின் அடிப்படையில் ஆண் பெண் இருவருக்குமிடையே ஏற்படும் அன்பு; நேசம். அதேபோல ஒன்றின் மேல் ஏற்பட்டும் ஆழ்ந்த பற்று, பிடிப்பு, விருப்பம் ஆகியவற்றிற்கும் காதல் என்றுதான்


பெயர். strong liking, love என்று சொல்லலாம். உதாரணம்: இசையின் மேல் கொண்ட காதல்; புத்தகங்களின் மேல் கொண்ட காதல்

--------------------------------------------------------------

ஆண், பெண் இருவருக்குமிடையே ஏற்படும் காதலைப் பற்றித்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு,  படித்த காலத்தில் எல்லாம், காதலுக்குச் சான்சே கிடையாது. அப்போதெல்லாம், இருபாலாரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளும் இல்லை. கல்லூரிகளும் இல்லை. அத்துடன் திருமணத்திற்கு முன் பெண்களை வேலைக்கு அனுப்பும் பழக்கமும் கிடையாது. பொது இடங்களில் ஒரு பெண்ணைத தனியாகப் பார்ப்பதே அரிது.



பெண்களும், முன்பின் பழக்கம் இல்லாதவர்களிடம் அறவே பேசமாட்டார்கள்.



கிராமங்களிலும், சிறு நகரங்களிலும், (அப்போதெல்லாம்) பெண் வயதிற்கு வந்தாலே போதும். படிப்பை நிறுத்திவிடுவார்கள்.

இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பக்கம் பக்கமாக  எழுதலாம். எழுதினால் கட்டுரையின் நோக்கம் திசை மாறிவிடும்.

ஓட்டலில் காதலனும் ,காதலியும் ஒன்றாக பீர் சாப்பிட்டு கொண்டே பேசுகிறார்கள் .

என்ன கன்றாவி இது, பெற்றோர்கள் இவர்களை பார்த்தால் அவர்கள் மனம் என்ன பதைபதைக்கும்

மெட்ரோ சிட்டிகளில் இது நடக்கிறது இது உண்மை , சத்தியம்
அதுபோல பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணம்

சிறந்ததா அல்லது காதல் திருமணம் சிறந்ததா? என்று ஒட்டியும்,

வெட்டியும் பக்கம் பக்கமாக எழுதலாம். அப்படி எழுதினாலும்

கட்டுரையின் நோக்கம் திசை மாறிவிடும்
அன்பு ஜோதிட மாணவர்களே இப்படி எத்தனையோ விஷயம் நாம் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது
சரி மேலும் சில விளக்கம் பார்கலாம்.



௧. ஏழில் சூரியன் இருந்தால் மனைவி நிர்வாகம் திறமை,அதிகாரம்,கோபம்,குணம் கொண்டவள், புகழ் உடையவள்,இரக்ககுணம் கொண்டவள், தியாக மனப்பான்மை உள்ளவள், ஆனால் மன முறிவு, மறுமணம், வியாபார முடக்கம் ஆகலாம்,
  1. ஏலில்  சந்திரன் இருந்தால் மனைவி அழகான முகம் கொண்டவள், சஞ்சல மனம் உடையவள், தாய்மை குணம் கொண்டவள். ஜாதகருக்கு தூர வணிகம் ஏற்படலாம், நீர்வழி லாபம் கிட்டலாம், கொஞ்சம் காமத்தை, சபலத்தை சந்திரன் கொடுப்பார்

  1. ஏழில் செவ்வாய் இருந்தால் மனைவி கலகம் செய்பவள், முன்கோபம் இருக்கும், ஆணவம்,நல்ல உடல், அகங்காரம் குணம் இருக்கும்,மனபினக்கு ஏற்படலாம், மனைவி உடலில் வசியம் இருக்காது

  1. ஏழில் புதன் இருந்தால் மனைவி புத்திசாலி, தந்திரசாலி, இளமையான தோற்றம், கலகலப்பானவள், நகைசுவை குணம் கொண்டவள், வியாபார விருத்தி, எழுத்துத்துறை மூலம் செல்வ சுகம் ஏற்படலாம்
  2. ஏழில் குரு இருந்தால் மனைவி நல்ல குணம் கொண்டவள், தெய்வ நம்பிக்க உள்ளவள், பொறுப்புடன் நடப்பாள், போதனை குணம் இருக்கும்,மனைவியிடம் நிதி நிர்வாகம் இருக்கும்
  3. ஏழில் சுக்கிரன் இருந்தால் மனைவி அழகானவள், கவர்சிகுனம் இருக்கும், ஆடை அலங்கார விருப்பம் உள்ளவள், கலை ஆர்வம் இருக்கும், இன்பத்தை அதிகம் விரும்புவாள்,ஜாதகனுக்கு கட்டிடம், வாகனம் மூலம் பணம் கிட்டும், ஆடம்பர தொழில் மூலம் செல்வம் koodum
  4. ஏழில் சனி இருந்தால் மனைவி மந்த குணம் கொண்டவள்,சோம்பல் தன்மை இருக்கும், வயதான தோற்றம் இருக்கும், தாமத திருமணம் வரலாம், மணமுறிவு ஏற்படலாம், பெண்ணிடத்தில் வசியம் இருக்காது
  5. ஏழில் ராகு இருந்தால் மனைவி பொய்  பேசுவாள், வஞ்சக குணம் இருக்கும், ரகசிய நடவடிக்கை  இருக்கும், புதிரான திருமணமாக நடக்கும், வினோத காமம் ஜாதகருக்கு varalaam
  6. ஏழில் கேது இருந்தால் மனைவி விரக்தி உடையவள், ஆன்மீக ஈடுபாடு உள்ளவள், வயதான தோற்றம் இருக்கும், செயலில் ஈடுபாடு இருக்காது, சில சமயம் மணமுறிவு, மனமின்மையை aerpaduththividuvaar
சரி பாவக அதிபதிகள் ஏழில் இருந்தால் என்ன பலன் என்று பாப்போம்
  1. லக்னாதிபதி ஏழில் இருந்தால் ஜாதகர் மனைவியை விரும்புவார், மனைவியை கேட்டு aethuvum செய்வார்,மனைவி சொல்லே மந்திரம்  என்பார் .
  2. இரண்டாம் அதிபதி ஏழில் இருந்தால் மனைவி மூலம் வருமானம் உண்டு, விபத்து, அவமானம் வரலாம்
  3. மூணாம் அதிபதி ஏழில்  இருந்தால் மனைவி ஆன்மீக விஷயம் உள்ளவள்,மத நம்பிக்கை உள்ளவள், நீண்ட தூரம் பயணம் விரும்பவள்
  4. நாலாம் அதிபதி ஏழில் நின்றாள் மனைவி வேலைக்கு போவாள் ,மனைவியால் யோகம் உண்டு ,மனைவி கெளரவமானவள். மனைவி மூலம் வீடு, வாகனம் ஜாதகருக்கு கிடைக்கும்
  5. ஐந்தாம் அதிபதி இருந்தால் ஜாதகன் காதலித்து கல்யாணம் பண்ணுவான் ,மனைவி லட்சிய குணம் கொண்டவள், ஜாதகனுக்கு புத்திர விருத்தி உண்டு , செல்வாக்கு வளரும்,
  6. ஆறாம் அதிபதி இருந்தால் மனைவி செலவு செய்பவள், மனைவியுடன் கருத்து வேறுபாடு இருக்கும், நோய் உடல் கொண்டவள்,சண்டை செய்பவள்
  7. ஏழாம் அதிபதி இருந்தால், மனைவி லட்சியம் குணம் கொண்டவள், அதிகாரம் செய்பவள், அத்தை மகளாக மனைவி அமைவாள் ,மனைவி சொந்தக்காலில் நிற்பாள் .
  8. எட்டாம் அதிபதி இருந்தால் மனைவி மூலம் வருமானம் உண்டு, வாக்கு வன்மை மனைவிக்கு இருக்கும் ,பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும்
  9. ஒன்பதாம் அதிபதி இருந்தால் மனைவிக்கு அவளின் சகோதிர ஆதரவு உண்டு ,தைரியமானவள், அலைச்சல் குணம் இருக்கும்
  10. பத்தாம் அதிபதி இருந்தால் மனைவி சுகவாசி, வீடு மனைவிகளுடன் வருவாள், செல்வந்தர் வீட்டு பெண்ணாக அமைவாள், வாகன சுகம் மனைவிக்கு வரும்
  11. லட்சியம் குணம் இருக்கும்,குழந்தைகள் மேல் பாசம் இருக்கும்,பொழுது போக்கு விசயங்களில் நாட்டம் இருக்கும்
  12. பன்னிரண்டாம் அதிபதி இருந்தால் மனைவியால் சண்டை வரும், எதிரி பயம் உண்டு மனைவி நோய் குணம் கொண்டவள்
  13. ஏழாம் அதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்று இருந்தால் மனைவி மூலம் பெரும் மகிழ்ச்சி ஏற்படும்
  14. ஏழுக்கு உடையவர் 6 ,8 ,12  இல் இருந்தால் நோயான மனைவி அமைவாள்
  15. சுக்கிரன் ஏழில் இருந்தால் காமம் அதிகம் இருக்கும்
  16. ஏளுக்குடையவர்  சனி ,மற்றும் சுக்கிரன் ராசிகளில் இருந்து நற்கோளால்  பார்கபட்டால் பல மனைவி உள்ளவர்
  17. சந்திரன் ஏழில் இருந்தால் மலட்டு தன்மைகொண்ட பெண்கள் மீது ஆசைவரும், செவ்வாய் ஏழில் இருந்தால் பருவம் அடைந்த பெண்ணின் தொடர்பை ஏற்படுத்தும் , புதன் ஏழில் இருந்தால் விபசார பெண், அற்ப பெண்ணின் தொடர்பை ஏற்படுத்தும், குறு ஏழில் இருந்தால் அந்தன பெண்ணின் மீதோ அல்லது கருத்தரித்த பெண்ணின் மீது தொடர்பை ஏற்படுத்தும்
  18. ஒரு ஆணின் ஜாதகத்தில் செவ்வாய் ஏழில் இருந்தால் வரும் மனைவிக்கு கவர்சிகரமான மார்பு இருக்கும், குரு எடுப்பான மார்பை கொடுக்கும், சுக்கிரன் பெரிதான மார்பை கொடுக்கும் ,சனி நலிவடைந்த மார்பை கொடுக்கும், மற்ற கிரகங்களுக்கு வகுப்பில் சந்தேகம் கேட்காதீர்கள் .நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.
  19. செவ்வாய் ,சனி ஏழில் இருந்தால் ,மனைவி பிற ஆடவரை விருப்பம் கொள்வாள், நற்கோள் பார்த்தல் அது நடக்காது .
  20. சுக்கிரன், நவாம்சத்தில் செவ்வாய் வீட்டில் இருந்தால்  மனைவி கூடுதல் காமம் கொண்டவர் .
  21. ஏழுக்கு உடையவர் வலிமை இழந்து 6812  இல் இருந்தால் விரைவில் மனைவியை இழப்பார்
  22. ஏழில் சந்திரன் இருந்து ஏளுக்குடையவர் 12  இல் இருந்தால் திருமண வாழ்வு இன்பம் இருக்காது  
  23. செவ்வாய் ,சுக்கிரன் ஏழில் இருந்தால் ஜாதகருக்கு பலமனைவி அமைய வாய்ப்புண்டு
  24. இரண்டில் ராகு இருந்தாலும் இந்த நிலை வரலாம் .
  25. ஆணின்  ஜாதகத்தில் சுக்கிரனோடு எத்தனை கிரகம் searnthullatho  அத்தனை பெண்களின் தொடர்பை ஏற்படுத்தும்
  26. பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் உடன் எத்தனை கிரகம் உள்ளதோ அத்தனை பெண்களின் தொடர்பை கணவனுக்கு கொடுக்கும்
  27. ஏளுக்குடையவரை சுக்கிரன் பார்த்தல் திருமணம் தாமதமாகும்.
  28. ஏளுக்குடையவர் ஆறில் சென்றால் மனைவி சண்டைகாரி , அடிகடி நோய்வாய் படுவாள் .
  29. இரண்டில் ராகு இருந்து ஏழில் செவ்வாய் இருந்தால் மனைவிக்கு பாம்பு கடி உண்டு
  30. ஏழாம் அதிபதி வளர்ச்சி ஸ்தானமான பத்து மற்றும் பதினொன்றில் இருந்தால் விரைவில் திருமணமாகும்
  31. ஏழாம் அதிபதி, அல்லது சுக்கிரனை புதன் அல்லது சந்திரன் பார்த்தாலோ அல்லது சேர்ந்தாலோ தாய் வழி மாமன் வகையில் பெண் அமையும்
  32. ஏழாம் அதிபதி அல்லது சுக்கிரனை ராகு ,கேது., அந்நிய பெண் பார்த்தாலோ அல்லது சேர்ந்தாலோ அந்நிய வழி பெண் அமையும்
  33. ஏழாம் அதிபதி அல்லது சுக்கிரனை சனி பார்த்தாலோ அல்லது சேர்ந்தாலோ தாழ்ந்த வகை பெண் அமைவாள்

No comments:

Post a Comment