Monday, 18 February 2013

ஆறாம் பாவகம்


ஆறாம் பாவகம்


அன்பு மாணவர்களே இது வரை ஐந்தாம் பாவகம் பார்த்தீர்கள் இனி பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஆறாம் பாவகம் பார்க்கலாம் .
இந்த பாவகத்தின் மூலம் நோய்கள், பகைவர்களால் உண்டாகும் துன்பங்கள், ஆயுதங்களினால் ஏற்படும் வெட்டுக்காயங்கள், சண்டைகள், உடல் உபாதைகள், பணம் நஷ்டங்கள், வம்புகள், வழக்குகள், நீதிமன்றம் போகுதல், காவல் நிலையம் செல்லுதல் , சிறைசாலை செல்லுதல், பாலுனுர்வு நோய்கள், பிறமாதர் தொடர்புகள், கடன்கள்  இவை அனைத்தும் அறியலாம் .

எப்படி பட்ட பாவகம் பாருங்கள் மாணவர்களே , இந்த பாவகம் சிக்கலானது
  1. இந்த பாவக அதிபதி வலு பெறலாமா?
  2. இந்த பாவக அதிபதியை  நாம் பிரட்சனைகளை செய்பவன் என்று நாம் எடுத்துகொள்ளவேண்டும்.
  3. இந்த பாவக அதிபதி எங்கு இருந்தாலும் அந்த பாவகதிர்க்கு பிரச்சனை ஏற்படும்
  4. உறவு சம்மந்தப்பட்ட பாவக அதிபதிகள் இந்த பாவகதில் இருந்தால் அந்த உறவு ஜாதகனுக்கு பிரச்சனை ஏற்படுத்தும், அவர்கள் சண்டைக்கு வருவார்கள், கடன் கேட்பார்கள், ஜாதனுக்கு முடிந்த வரை தொல்லைகளை கொடுப்பார்கள், ஜாதகன் அவர்களால் கஷ்டம் ,நஷ்டம் படுவான், அவர்களுக்குள் தகராறு வந்து கொண்டே இருக்கும்
  5. மூன்றுக்கு உடையவன் ஆறில் இருந்தால் சகொதிரனால் ஜாதகனுக்கு பிரச்சனை தான் ,அவனே எதிரியாக மாறுவான், கடன் கேட்ப்பான், சொத்து பங்கு கேட்ப்பான், சண்டைக்கு வருவான் , இவர்கள் இருவரும் ஒருவேளை மது அறிந்துவிட்டால் ,அவ்வளதுதான் பொது இடத்தில் சூப்பராக திட்டிகொல்வார்கள், சண்டை போட்டு கொள்வார்கள், கட்டி பிடித்து உருளுவார்கள் .
  6. நாளுக்கு உடையவன் ஆறில் இருந்தால் தாயாரே பிரச்சனை செய்வார் ,சதா ஜாதகனை திட்டிக்கொண்டே இருப்பார், தாய்க்கும் ஜாதகனுக்கும் அவ்வளவு ஒத்துவராது
  7. ஒன்பதுக்கு உடையவர் ஆறில் இருந்தாலும் தந்தைக்கும் ,மகனுக்கும் அவ்வளவு பந்தம் இருக்காது , தந்தையார் சதா ஜாதகனை திட்டிகொனே இருப்பார்.
  8. ஆறில் ஐந்துக்கு உடையவர் இருந்தால் சாதகனின் குழந்தையால் ஜாதகருக்கு பிரச்சனை தான் , குழந்தை நோயால் அவதிப்படும், குழந்தைக்காக ஜாதகர் கடன் பட நேரிடும்
  9. ஏளுக்குடையவர் ஆறில் இருந்தால் மனைவிக்கும் ,ஜாதகனுக்கும் அடிக்கடி சண்டை வரும், ஒருவருக்கொருவர் ஒத்துபோகமாட்டார்கள், மனைவி வியாதியால் பீடிக்க படுவார்,  பொண்டாட்டிக்காக ஜாதகம் நிறைய கடன் வாங்குவான்,  போலிஸ் ஸ்டேசன் போகும் வரை இருவரும் சண்டையிட்டுகொல்வார்கள்,
  10. பதினொன்றுக்கு உடையவர் ஆறில் இருந்தாலும் மூத்த சகொதிரனால் பிரச்சனைதான், அவனால் ஜாதகருக்கு துன்பம் ஏற்படலாம்
அன்பு மாணவர்களே ,புரிகிறதா, நன்றாக யோசியுங்கள், உங்கள் மூளையை நன்கு கசுக்குங்கள், புதிர் நிச்சயம் கிடைக்கும் , அதற்காக ஒன்றும் கவலை படாதீர்கள் , பாவக ஆராய்ச்சி பன்ன பன்ன பலன் எளிதாக கிடைத்துவிடும் 

சரி மாணவர்களே இனி ஆறாம் பாவகத்தில் நவ கிரகமும் நின்ற பலனை கொஞ்சம் பாப்போம்
  1. ஆறாம் பாவகதில் சூரியன் இருந்தால் தந்தையே பிரச்சனை ஜாதகருக்கு செய்வார். ஜாதகருக்கு எதிரான செயல்களை தந்தை செய்வார், சந்திரன் இருந்தால் ஜாதகனுக்கு இதே நிலைதான் ,இந்த பாவகதில் செவ்வாய் நின்றாள் இளைய சகொதிரன் வம்புக்கு வந்துவிடுவான் ,புதன் இங்கு இருக்க கூடாது தாய் மாமன் உறவு அவ்வளவு இருக்காது அவர் கடன் கேட்பார், ஜாதகர் கொடுக்காவிட்டால் அவ்வளது தான் மாமன் சண்டைக்கு வருவார் , மாமன் உறவு சுடுகாடு வரை இருக்க வேண்டும் ,ஜாதகன் மாமனிடம் சரண்டர் ஆகி கொள்ளவேண்டும்
  2. ஆறில் குரு இருந்தால் குழந்தையால் பிரச்சனை ஏற்படும் , குழந்தை அடிகடி வெளிவட்டாரத்தில் சண்டை போட்டு வந்துவிடும் ,ஜாதகன் குழந்தையை அடிப்பான், குழந்தைக்கு தந்தை மேல் பகை வரும் .பெரியோர்களும், ஆசிரியர்களும் ஜாதகனுக்கு சப்போர்ட் பன்ன மாட்டார்கள்
  3. ஆறில் சுக்கிரன் இருந்தால் பொண்டாடியிடம் அடி வாங்க ஜாதகன் தயாராக இருக்க வேண்டும், அதுவும் வாய் உள்ள மனைவியாக இருந்தால் ஜாதகன் பெட்டி பாம்பாக இருந்து பழகி கொள்ளவேண்டும், எதிர்த்தால் சமையல் கட்டில் சாமான் உருளும், தக்காளி பறக்கும், ஜாதகனுக்கு ஒழுங்காக சாப்பாடு கிடைக்காது, பழைய சாதம் சாப்பிட பழகி கொள்ளவேண்டும் ,கொஞ்சம் பேசினாலே சண்டைக்கு அவள் வந்துவிடுவாள் ,சாதகன் பாடு திண்ட்டாடம் தான் ,சாதகன் தைரியசாலியாக இருந்தால் இந்த நிலையிலிருந்து கொஞ்சம் தப்பிக்கலாம்,
  4. ஆறில் சனி நிற்க கூடாது மூத்த சகொதிரனால் பிரச்சனை வரலாம், வேலை காரர்கள் எதிர்ப்பு காட்டுவார்கள்,ஆரி ராகு இருந்தால் சாதகனின் தந்தையின் பாட்டி யினால் கொஞ்சம் பிரச்சனை வரும் , விதவை பெண்களினால் பிரச்சனை வரும், ஆறில் கேது இருந்தால் ஜாதகரின் பாடி தகராறு செய்வார்
  5. நோய்க்கு அதிபதியான ஆருக்குடையவன் லக்னத்தில் இருந்தால் ஜாதகர் நித்ய நோயாளியாக மாறிவிடுவார்
  6. இரண்டாம் பாவக அதிபதி ஆறில் நின்றாள் ஜாதகரின் குடும்பமே எதிராக செயல்படும்
  7. ஆருக்குடயவன் எந்த பாவகத்தில் இருக்கிறாரோ அந்த பாவகம் குறிக்கும் அவயதில் நோய் ஏற்படலாம்
  8. ஆருக்குடையவன் லக்னத்தில் நின்றாள் ஜாதகரிடம் எதிரி தோல்வி அடைவான்
  9. லக்னாதிபதி ஆறாம் பாவகம் சென்றால் ஜாதகன் எதிரியிடம் ஜாதகன் தோல்வி அடைவான்
  10. ஆறாம் வீட்டில் ராகு ,கேது இருந்தால் எதிரிக்கு பலம் குறைந்துவிடும் ஜாதகன் எதிரியை வெல்லுவான்
  11. ஆறாம் பாவகம் வேலையை குறிக்கும் பாவகம் இவன் பத்தில் ல்நின்றால் ஜாதகன் அடிமை தொழில் செய்வான்
  12. ஆறாம் பாவக அதிபதி நன்றாக இருந்தால் (வலுத்து இருந்தால் ) சாதகனின் உடல் நன்றாக இருக்கும், அவனுக்கு கடன் கிடைக்கும், கடன் கிடைத்தால் ஜாதகன் கடனை அடைக்க மாட்டான் கடன் கொடுத்தவன் சண்டைக்கு வருவான், ஜாதகரின் மேல் கேஸ் போடலாம் இதனால் ஜாதகன் நீதி மன்றத்திற்கு போகுவான் , அங்கு தண்டனை கிடைக்கலாம், ஏன் சிறை சாலை கூட போகலாம், ஜாகனுக்கு அடிகிடைக்கும் அதனால் வெட்டு காயம் வரலாம் ,சாதகனும் சண்டைக்கு போகலாம் (உடல் வலுத்து இருந்தாலே ஜாதகனுக்கு வீரம் வந்துவிடும்)
  13. ஆறாம் அதிபதி கெட்டு இருந்தால் சாதகனின் உடல் வலிமை இருக்காது,  கடன் கிடைக்காது , எதிரிககளின் தொல்லை வராது  இதனால் இந்த அதிபதி ரொம்பவும் கெட்டுபோக கூடாது இதமாக, பதமாக ,சமமாக இருக்க வேண்டும் . அதாவது அளவுடன் இருக்கவேண்டும் .
  14. லக்னாதிபதியும், ஆறாம் அதிபதியும் சேர்ந்து இருந்தால் தாய்மான் ஜாதகனிடம் அன்பாக இருப்பான் ,சாதகனும் மாமனிடம் அன்பாக பழகுவான் ஆனால் ஒரு காலகட்டத்தில் அதுவே பிரச்சனை ஆகலாம்
ஆறாம் வீடு அதிபதி பன்னிரண்டு பாவகத்தில் நின்றாள் என்ன பலன் ஏற்படும் என்பதை கொஞ்சம் பார்க்கலாம்
  1. ஆறாம் அதிபதி லக்னத்தில் நின்றாள் ஜாதகன் பயந்த சுபாவம் கொண்டவன், பகைவர் தொல்லை, கடன் தொல்லை வரும், அடிக்கடி நோய் வாய் படுவார்கள், நல்ல பரிகாரத்தின் மூலம் மட்டும் இதை சரி செய்யலாம்
  2. இரண்டில் நின்றாள் கண்பார்வை மங்கும், கல்வி திறமை குறைபடும், வாக்கு வன்மை பாதிக்கப்படும், கடன் வாங்கி கஷ்டப்பட்டு குடும்பம் நடத்துவார்கள்
  3. மூன்றாவது வீட்டில் இருந்தால் உடன் பிறந்தவர்கள் விரோதிகளாக மாறுவார்கள், கடன் சுமை அதிகமாகும் ,அலைச்சல் அதிகமாகும், சிற்றின்ப பிரச்சனை வரும், காது கோளாறு ஆகும்
  4. நாலாவது வீட்டில் இருந்தால் வீடு பூமி பிரச்சனை அதிகமாகும், கடன்களுக்காக வீட்டை அடமானம் வைக்கும் நிலை வரும், தாயார் உடல் நிலை பாதிக்கும் ,உறவினர்ஜ்கள் சண்டை ஏற்படும் , சுக குறை ஜாதகனுக்கு வரும்
  5. மனதில் கெட்ட என்னம் ஏற்படும் ,பாவ காரியம் செய்வார்கள், இருதய நோய் ஏற்படலாம், குழந்தைகளினால் பிரச்சனை ஏற்படலால்ம் காதல் கசக்கும் , புத்திர தோஷம் வரலாம்  .
  6. ஆறாம் வீட்டில் இருந்தால் இது ஆட்சி வீடாக இருந்தால் நல்லது தீய தன்மை குறையும், பகைவர்களால் நன்மை கிடைக்கும், கடன் தொல்லை இருக்காது , தீய பலத்துடன் இருந்தால் இதற்க்கு எதிர்மாறான நிலை ஏற்படும்
  7. ஏழாம் வீட்டில் இருந்தால் மனம் சஞ்சலம் படும், குடும்ப மகிழ்ச்சி இருக்காது, ஆண்மை கோளாறு  வரலாம் , கணவன் மாணவி இடையே ஒற்றுமை இருக்காது, வெளி வட்டார பழக்கம் நன்மை கொடுக்காது
  8. ஆறாம் அதிபதி எட்டில் இருந்தால் இது நல்ல பலத்துடன் இருந்தால் ஒன்றும் ஆகாது விபரீத ராஜ யோகம் ஏற்படும் ,ஆனால் உடல் வலுஇழந்து காணப்படும், கடன் கிடைக்காது, வேலை கிடைக்காது ஒழுங்க்கா வேலைக்கு போக மாட்டார்கள் .
  9. ஆறாம் அதிபதி ஒன்பதில் இருந்தால் தந்தையார் விரோத போக்கு வரலாம், ஜாதகன் எளிதில் ஏமாறுவான், நீதி நேர்மை இருக்காது, சொத்தை ஜாதகன் விரயமாக்குவான், பெரியோர்களிடம் மதிப்பு இருக்காது, தருமம் செய்யமாட்டான்
  10. ஆறாம் அதிபதி பத்தில் இருந்தால் தொழிலை சரி வர செய்யமாட்டார்கள், உல்லாச வாழ்க்கை நடத்துவார்கள், பிறரை மோசம் செய்வார்கள் , ஏமாற்றும் குணம் ஜாதகனுக்கு வரலாம், , தொழில் ஏதாவது பிரச்சனையாகி கொண்டே இருக்கும் , தொழிலில் நேர்மை இருக்காது
  11. இங்கு நற்பலதுடன் இந்த அதிபதி இருந்தால் பிரச்சனை வராது, ஆனால் மூத்த சகொதிரன் நோயினால் துன்பம் அடையலாம், லாபம் குறைவு ஏற்ட்படலாம், ஆசைகள் நிறைவேறாது, எந்த ஒரு முடிவும் பிரச்சனை வரலாம் ,கடன் வாங்கி லாபம் எட்ட முற்படுவார்கள்
  12. அலைச்சல் அதிகமாகும், சரியான சாப்பாடு கிடைக்காது, நல்ல தூக்கம் வராது, போகத்தில் குறை ஏற்படலாம், படுக்கை அரை சுத்தம் இருக்காது ஆனால், கடன் வராது , உடல் வலிமை இழக்கலாம், வெளிநாட்டு பயணம் சுகபடாது, குறுக்கு வழியில் வேலைக்கு செல்வார்கள், அந்தரங்கமான வேளையில் ஈடுபடுவார்கள்                  

No comments:

Post a Comment