Monday, 18 February 2013

ஐந்தாம் பாவகம்


ஐந்தாம் பாவகம்

பஞ்சமுஹன் ஜோதிட கல்வி மையம் 
நாள் 8 -5 -2011  பயிற்சி குறிப்பு 3 
அன்பு மாணவர்களுக்கு வணக்கம், இது வரை நான்கு PAAVANKALAI  படித்து விட்டீர்கள் நல்லது, 
பல பாவகத்தை ஆராயும் போது தான் நமக்கு பல விசயங்கள் கிடைக்கும் 
ஆனால் மெதுவாக தான் கிடைக்கும் , அவசரபடாதீர்கள், நிதானமாக செயல்படும் போது தான் நமக்கு பல விசயங்கள் பிடிபடும்.
இந்த வாரம் நாம் ஐந்தாம் பாவகம் மற்றும் ஆறாம் பாவகம் ஆய்வு செய்வோம்.


ஐந்தாம் பாவகத்தில் குழந்தைகளின் முன்னேற்றங்கள், பூர்வீக சொத்துக்கள், முற்பிறப்பில் செய்த நல்வினைகள், மந்திர சாஸ்திரங்களும், அதிர்ஷ்டம் , மற்றும் சாதகனின் பொழுது போக்கு விசயங்களை அறியலாம் .
மேலும் சாதகனின் அறிவை குறிக்கும் ஸ்தானமும் இதுதான், 
சாதகனின் காதலை குறிக்கும் ஸ்தானமும் இதுதான் 
  1. இந்த பாவகத்தில் எந்த கிரகம் நிற்கிறதோ அதன் காரகம் சம்ம்நதபட்ட அறிவு ஜாதகனுக்கு கிடைக்கும்
  2. இந்த பாவக அதிபதி கெட்டுவிட்டால் பூர்வீக சொத்து கிடைக்காது
  3. இந்த பாவகதில் ராகு, கேது நின்றாலும் புத்திர ஸ்தானம் பாதிக்கும்.
  4. சாதகனின் காதல் ஸ்தானாதிபதி இவர் தான் இந்தி அதிபதி ஆறில் போனால் காதல் பிரச்சனை ஆகும் ,எட்டில் போனால் காதலால் அவமானபடுவான்
  5. வளர்ச்சி ஸ்தானமான பத்து, பதினொன்றில் போனால் காதல் வெற்றி அடையும்
  6. ஐந்தாம் அதிபதி ஆருக்கு போனால் பூர்வீக சொதினில் ,சண்டை, சச்சரவு வரலாம்,
  7. ஐந்தாம் பாவ அதிபதி நாலுக்கு போனாலும் ஜாதகனுக்கு பூர்வீக சொத்து கிடைக்காது
  8. ஐந்தாம் பாவ அதிபதி ஆறாமிடம் போனாலோ அல்லது எட்டாம்மிடம் போனாலோ நாலாம் மிடம் போனாலோ குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும்
  9. தனித்த குரு ஐந்தில் நின்றாலும் புத்திர பாக்கியம் தடைபடும்
  10. ஐந்தில் சனி செவ்வாய் நின்றாலும் பிரச்சனை தான்
சரி மாணவர்களே இனி ஐந்தாம் பாவகத்தில் மற்ற கிரகங்கள் நின்றாள் என்ன பலன் என்பதை கொஞ்சம் பாப்போம்
  1. ஐந்தாம் மிடம் சூரியன் நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் சூரியனாக இருந்தாலோ ஜாதகனுக்கு அரசியல் ஞானம் உடையவனாக இருப்பான் சிறந்த அறிவு படைத்தவனாக இருப்பான்
  2.  ஐந்தாம் மிடம் சந்திரன்  நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் சந்திரனாக  இருந்தாலோ ஜாதகனுக்கு நல்ல கற்பனை வளம், கலை இலக்கியத்தில் ஆர்வம், சிறந்த ஓவிய திறமை, காதல்  ஆர்வம் இருக்கும்,
  3. ஐந்தாம் மிடம் செவ்வாய்  நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் செவ்வையாக  இருந்தாலோ ஜாதகனுக்கு மந்திர வித்தை, விளையாட்டு தந்திரங்கள், மல்யுத்த ஆர்வம், சிலம்பாட்ட ஆர்வம், அணைத்து விளையாட்டில் யுக்க்தியுடன் செயல்படுவார் . குழந்தைகள் கொஞ்சம் முரட்டுத்தனமாக வளரலாம்,
  4. ஐந்தாம் மிடம் புதன்  நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் புதனாக இருந்தாலோ ஜாதகனுக்கு மிகுந்த அறிவுடன் செயல்படுவார், கவி பாடும் திறமை இருக்கும், இளமைகளந்த காதல் இருக்கும், தத்துபுத்திர  யோகம் ஜாதகனுக்கு உண்டு (புதன் அலி கிரகம் என்பதால் )
  5. ஐந்தாம் மிடம் சுக்கிரன்  நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் சுக்கிரனாக  இருந்தாலோ ஜாதகனுக்கு பணம் சம்பாதிக்கும் திறமை இருக்கும், நிதி நிர்வாகம் சிறப்புடன் இருக்கும் ,காதல் எண்ணம் அதிகம் இருக்கும் , ஆடல், பாடல், பொழுதுபோக்கு விசயங்களில் ஜாதகனுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும் , கவர்ச்சியின் வழிகளில் ஜாதகன் செயல்படுவார்
  6. ஐந்தாம் மிடம் குரு  நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன்  குருவாக  இருந்தாலோ ஜாதகனுக்கு ஒழுக்கம் அதிகம் இருக்கும், வேத சாஸ்திரத்தில் ஈடுபாடு இருக்கும் ,ஆன்மீக விசயங்களில் கவனம் இருக்கும், ஆனால் குழந்தை தாமதமாக பிறக்கும் ( குரு புத்திர காரகன் ,காரகனே புத்திர ஸ்தானத்தில் இடம் பெறகூடாது )
  7. ஐந்தாம் மிடம் சனி  நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் சனியாக  இருந்தாலோ ஜாதகனுக்கு சிறந்த தொழில் நுணுக்கம் ஏற்படும், அறிவு மந்தமாக செயல்படும், விளையாட்டு விசயத்தில் ஆர்வம் இருக்காது,
  8. ஐந்தாம் மிடம்  ராகு  பார்த்தாலோ  அல்லது இருந்தாலோ ஜாதகனுக்கு சூதாட்டத்தில் கவனம் ஏற்படும், பூர்வீக சொத்தில் பிரச்சனை வரலாம் , குழந்த பிறப்பதில் சிக்கல் ஏற்படலாம்
  9. ஐந்தாம் மிடம்  கேது  பார்த்தாலோ  அல்லது இருந்தாலோ ஜாதகனுக்கு ஆழ்ந்த சிந்தனை, ஆன்மீக  நாட்டம் வரலாம்,  தெளிவான வார்த்தைகளுடன் பேசுவார், சித்தர்களை போல இருக்க ஆசைபடுவார் ,குழந்த பிறப்பதில்  thaamatham  உருவாகும்  .
  10. ஐந்தாம் பாவாதிபதி லக்னத்தில் நின்றாலோ அல்லது லக்னாதிபதி ஐந்தில் நின்றாலோ ஜாதகருக்கு ,புத்திரம், பூர்வீகம், அறிவு உண்டு
  11. ஐந்துகுடையவன் லக்னதிலோ அல்லது லக்னாதிபதி ஐந்தில் நின்றாலோ ஜாதகருக்கு காதலில் அதிக ஈடுபாடு இருக்கும்
  12. ஐந்துகுடையவன் ஏழில் நின்றாலோ அல்லது ஏழுக்கு உடையவன் ஐந்தில் நின்றாலோ ஜாதகருக்கு காதல் திருமணம் உண்டு
  13. ஐந்தாம் பாவகதில் பாவகிரகம் நிற்கக்கூடாது
  14. ஐந்தாம்  பாவகதிர்க்கு இருபுறமும் பாவாகிரகம்  நிற்ககூடாது
  15. விரயாதிபதி, அட்டமாதிபதி இந்த பாவகத்தில் நின்றாள் குழந்தை, அறிவு,காதல் தடைபடும்
  16. ஐந்தாம் பாவகதில் சனி ,செவ்வாய் சேர்கை இந்த பாவக சிதிலமடைய வாய்ப்பு உண்டாகும்
  17. ஐந்தாம் பாவகம் பெண் ராசியாகி ஐந்தாம் அதிபதி பெண் ராசிகளில் நின்று பெண் கிரகங்கள் இந்த பாவகத்தில் இருந்தால் பிறக்கும் குழந்தை பெண்ணாக பிறக்கும்
  18. ஐந்தாம் பாவகம் ஆண் ராசியாகி ஐந்தாம் பாவ அதிபதி ஆண் ராசியில் நின்று ஆண் கிரகங்கள் இந்த பாவகதில் நின்றாள் பிறக்கும் குழந்தை ஆண்குளந்தையாகும்
  19. ஐந்தாம் அதிபதி நீசம், அச்தன்கதம் அடைந்து இருந்தால் ஜாதகருக்கு குல தெய்வ வழிபாடு குறை இருக்கும்
  20. ஐந்தாம் அதிபதி ஆட்சி, உச்சம், வர்கோத்தமம் பெற்று இருந்தால் இவரின் குல தெய்வம் இவரை நன்கு காக்கும் .
  21. ஐந்தாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் குழந்தையின் அன்பும் ஆதரவும் ஜாதகருக்கு உண்டு, 
  22. ஐந்தாம் அதிபதி நாளில்,ஆறில்,எட்டில் இருந்தால் குழந்தையின் அன்பு, ஆதரவு ஜாதகருக்கு கிடைக்காது 
  23. ஐந்தாம் பாவகம் தொழில் ஸ்தானத்திற்கு துன்ப பாவகமாகும்
  24. ஐந்தாம் பாவகம் மனைவிக்கு லாப பாவகமாகும்
  25. ஐந்தாம் பாவகம் தாய்க்கு வாக்கு, தான பாவகமாகும்
  26. ஐந்தாம் பாவகம் தந்தைக்கு சௌரிய பாவகமாகும்
  27. இளைய சகொதிரனுக்கு தைரிய ,வெற்றி பாவகம், 
  28. ஐந்தாம் பாவகம் மூத்த சகொதிரனுக்கு களத்திற பாவகமாகும்  

No comments:

Post a Comment