Monday, 18 February 2013

இரண்டாம் பாவகம் மூன்றாம் பாவகம் ஆய்வு


இரண்டாம் பாவகம் மூன்றாம் பாவகம் ஆய்வு

ஐங்கரன் ஜோதிட பயிற்சி மையம் நாமக்கல்
இரண்டாம் பாவகம் , மூணாம் பாவகம் ஆய்வு

இரண்டாம் வீட்டின் பலன்
அன்பு மாணவர்களே நாம் ஒரு பாவகத்தை ஆய்வு செய்வதற்கு முன் சில கதைகளை படித்து பாவகத்தை ஆய்வு செய்வோம்.


விதிப்படிதான் நடக்குமா?

இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டால் பல
பதில்கள் உள்ளன. ஆனால் கேள்வியைச் சுருக்கி -
முதல் பெருமை எது? என்று கேட்டால்
ஒரே ஒரு பதில்தான்.

அது என்ன? இந்த இடத்திலேயே சொன்னால்
கட்டுரையின் வீச்சு அல்லது வேகம் குறைந்து
போய்விடும். ஆகவே இறுதிப் பகுதியில் சொல்கிறேன்

என்னுடன் - என் மனதிற்குள் உடன் இருக்கும் - ஆசான்கள்
- என்னுடைய ஆசிரியர்கள் மூன்று பேர்கள்.

ஒருவர் திருவள்ளுவர், இன்னொருவர் பாரதியார்
மூன்றாமவர் கண்ணதாசன்

"இரவும்வரும் பகலும்வரும் உலகம் ஒன்றுதான்
உறவும்வரும் பகையும்வரும் இதயம் ஒன்றுதான்
வறுமைவரும் செழுமைவரும் வாழ்க்கை ஒன்றுதான்
பெருமைவரும் சிறுமைவரும் பிறவி ஒன்றுதான்"

அடடா கண்ணதாசன் அவர்கள் எப்படிப் பட்டியல்
இட்டுச் சொல்லியிருக்கிறார் பாருங்கள். அதோடு
விட்டாரா? தொடர்ந்து சொல்கிறார்:

"துணையும்வரும் தனிமைவரும் பயணம் ஒன்றுதான்
வழிபடவும் வரம்தரவும் தெய்வம் ஒன்றுதான்"

உனக்கு துணை கிடைத்தாலும் சரி அல்லது தனியாக
இருக்க நேரிட்டாலும் சரி (வாழ்க்கைப்) பயணம் ஒன்று
தான்னு நெற்றியடியாக எப்படி அடித்தார் பாருங்கள்?

அதுதான் கண்ணதாசன்!

சரி, நாம் கட்டுரைக்குள் வருவோம்

பெருமை என்றால் என்ன? சிறுமை என்றால் என்ன?

பெருமை = 1.தான் அல்லது தன்னைச் சார்ந்தோர்
அடைந்த உயர்நிலை, வெற்றி முதலியவை காரணமாக
மதிப்பில் உயர்ந்துவிட்டதாகக் கொள்ளும் உணர்வு.
pride; sense of Pride. 2. ஒன்றின் உயர்ந்த நிலை
அல்லது தகுதி standing reputation.

சிறுமை = 1.மதிப்பிழ்ந்து வெட்கப்பட வேண்டிய நிலை.
கீழ்நிலை meanness: degradation;smallnesss
2. முக்கியம் அற்ற சிறிய தன்மை, குறையுடைய
நிலைமை. insignificance

உங்களுக்கு பெருமையாகத் தோன்றுவது எது என்று
கேட்டால் 'சந்தேகமென்ன, மீனாட்சி அம்மன் கோவில்
தான்' என்று மதுரைக்காரர்கள் சொல்வார்கள்.
தருமமிகும் சென்னை வாசிகளைக் கேட்டால்,
'உலகின் இரண்டாவது பெரியதும், அழகியதுமான
மெரீனா கடற்கரையைக் காட்டுவார்கள்.
கோவை வாசிகளைக் கேட்டால் சிறுவாணித் தண்ணீருக்கு
ஈடு ஏது -அதுதான் எங்களூருக்குப் பெருமை சேர்ப்பது
என்பார்கள்

இப்படி ஊருக்கு ஊர், மனிதருக்கு மனிதர் பதில் மாறுபடும்.

சரி இந்த உலகிற்கே பெருமை சேர்ப்பது எது?

யாரைக்கேட்டால் சரியான பதில் கிடைக்கும்?

உலகிலேயே மனிதனுக்கு மனிதனால் எழுதப்பட்டதில்
மிகச் சிறந்ததும், ஒப்புவமையற்றதுமான திருக்குறளை
எழுதிய வள்ளுவரையே கேட்போம்.

வள்ளுவர் பெருந்தகை என்ன சொல்கின்றார் பாருங்கள்!

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு."

நேற்று இருந்தவன் இன்றில்லை அதுதான் இந்த
உலகத்தின் பெருமை என்று அடித்துச் சொல்கின்றார்
வள்ளூவர் பெருமகனார். நிலையாமை (Instability)
அதிகாரத்தில் வரும் குறள் இது

வேறு ஒரு சிந்தனையாளன் இதே கருத்தை ஒரே
வரியில் இப்படிச் சுருக்கமாகச் சொன்னான்

"நிலையாமைதான் நிலையானது"
(Uncertainity is certain)

ரத்தினச்சுருக்கமாக எப்படிச் சொன்னான் பாருங்கள்.
எல்லாம் நிலையில்லாததுதான். நம்மை விட்டுப்
போகக்கூடியதுதான். ஏன் எல்லாவற்றையும் போட்டது
போட்டபடி போட்டு விட்டு நாமும் ஒருநாள்
போகப் போகிறோம்.

அதைத்தான் பகவான்- அந்தக் கார்மேக வண்ணன்,
நம் மனம் கவர்ந்த கண்ணபிரான் இப்படிச் சொன்னார்

"எது இன்று உன்னுடையதோ, அது நாளை
மற்றொருவனுடையதாகிறது. மற்றொருநாள்
அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதியும்
எனது படைப்பின் சாராம்சமுமாகும்"

எத்தனை பேர் இதையெல்லாம் நினைத்துப் பார்க்கின்றார்கள்?

"மாடு மனை போனால் என்ன
மக்கள் சுற்றம் போனால் என்ன
கோடி செம்பொன் போனால் என்ன - உந்தன்
குறுநகை ஒன்று போதும்!"

என்று கவிஞனொருவன் தன் மனைவியிடம் சொன்னானாம்.
மாடு என்றால் செல்வத்தைக் குறிக்கும். செல்வம், வீடு,
பிள்ளைகள், சுற்றத்தார் என்று எது என்னை
விட்டுப்போனாலும் கவலையில்லையடி - உன் புன் சிரிப்பு
ஒன்றுபோதுமென்றானாம் அந்தக்கவிஞன்.

பட்டினத்தார் சரித்திரதைப் படித்தபோதுதான் எல்லாம் மாயை
(illusion) என்பதை அதே கவிஞன் உணர்ந்தான்

"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே, கைபற்றிய மாந்தரும்
வீதி மட்டே, மெத்த விம்மியழும் பிள்ளைகளும் சுடுகாடு
மட்டே" என்ற பட்டினத்தடிகளின் பாட்டைப் படித்துப்
புரிந்து கொண்ட பிறகு குறுநகையெல்லாம் அந்தக்
கவிஞனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை!

பட்டினத்தாருக்கே அவருடைய வளர்ப்பு மகனாக வந்துதித்த
சிவபெருமான்தான் 'காதறுந்த ஊசியும் வாராது காணும்
கடைவழிக்கே" -என்பதை - அதாவது மனிதன் இறந்து
விட்டால் அவன்கூட எதுவும் வராது - காது ஒடிந்து
பயனற்றுப்போன ஊசி கூட உடன் வராது என்று உணர்த்தினார்

ஒருமுறை இப்படி அடுக்கடுக்காக அடியவன் பேசிக்
கொண்டிருந்தபோது கேட்டுகொண்டிருந்த அன்பர்
குறுக்கிட்டார்.

"அண்ணே நீங்கள் சொல்வதெல்லாம் போகிற காலத்திற்
குத்தான் பொருந்தும்! இருக்கும் போது என்ன செய்ய
வேண்டும்? - எதைப் பெருமையாக நினைக்க வேண்டும்?
அதைச் சொல்லுங்கள்" என்றார்

"இருக்கிறகாலம், போகிறகாலமென்று காலத்தில் எல்லாம்
வேறு பாடு கிடையாது. ஏன் இன்று இரவிற்குள்ளேயே கூட
உங்களுக்கு இறுதிப் பயணச் சீட்டுக் கொடுக்கப்பட்டு
விடலாம். அதைத்தான் நம் வீட்டுப் பெரியவர்கள்
தூங்கையிலே வாங்கிகிற காற்று, சுழி மாறிப் போனாலும்
போச்சு என்பார்கள்" என்று அவருக்குப் பதில் சொன்னேன்

அவர் மெதுவாகத் தொடர்ந்து சொன்னார்."அண்ணே,
ஒன்னாம் தேதியானால் குறைந்த பட்சம் இருபதாயிரம்
ரூபாய் பணம் வேண்டிய திருக்கிறது.வீட்டுக் கடனுக்குத்
தவணைப் பணம், பால் கார்டு,மின் கட்டணம், மளிகைக்
கடை பில், செல்போன் பில், வேலைக்காரி சம்பளம்,
பெட்ரோல் கார்டு, இத்தியாதிகள் என்று வரிசையாக
வந்து பாடாய்ப் படுத்துகின்றன. வாழ்க்கையே
போராட்டமாக இருக்கிறது. இன்றையச் சூழ்நிலையில்
இதையெல்லாம் சமாளித்து ஒருவன் உயிர் வாழ்வதே
பெருமையான விஷயம்தான்"

"நகரங்களில் வாழ்கின்ற ஆடு மாடுகள் கூடத்தான்
மனிதன் மிஞ்சிய உணவோடு கீழே போட்டுவிட்டுப்
போகும் பிளாஸ்டிக் பைகளையும் சேர்த்து விழுங்கி
விட்டு உயிர் வாழ்கின்றன - உயிர் வாழ்வதா
முக்கியம்.அதையே பெருமையாக நினைப்பதா?
யாருக்குத் தான் பிரச்சினைகள் இல்லை ?
தேவைகளைக் குறைத்துக் கொண்டு வருமானத்திற்
குள் வாழ்வதற்குப் பழகினால் எந்தப் பிரச்சினையும்
இல்லை. தஞ்சை மாவட்டத்தில் தினசரி ரூபாய்
நூறுக்கும் குறைவாகச் சம்பாதிக்கும் எண்ணற்ற
தொழிலாளிகள் எல்லாம் சந்தோஷமாக வாழவில்லையா?
வரும் பிரச்சினைகளைச் சமாளித்து வாழ்வதுதான்
வாழ்க்கையின் முதல் நியதி. - அடிப்படை நியதி -
ஆகவே அதைத் தவிர்த்து நீங்கள் பெருமைப்
படுவதைச் சொல்லுங்கள்" என்றேன்

"எனக்குத் தெரியவில்லை நீங்களே சொல்லுங்கள்" என்றார் அவர்

நான் சொன்னேன் " எளிமையான வாழ்க்கை, நேர்வழியில்
பொருளீட்டல், சிக்கனம், இறையுணர்வு, தர்மசிந்தனை,
பெற்றோர்களையும், பெரியோர்களையும் மதித்தல்,
இயற்கைக்கும், அரசிற்கும் எதிராக எதையும்
செய்யாதிருக்கும் மேன்மை என்று அனைத்து
நற்பண்புகளையும் கொண்ட இனம் - இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றையும், கலாச்சாரத்
தையும் கொண்ட இனம் தமிழர் இனம்.ந்ம்மைப் போன்ற
எண்ணற்ற இனத்தவர்கள் ஒற்றுமையாக வாழும் நாடு
நம் நாடு.பல மொழிகளைக் கொண்டது நம்நாடு. பல
மதத்தவர்களைக் கொண்ட்து நம் நாடு. பலவிதமான
இயற்கை நிலைகளைக் கொண்டது நம் நாடு.
திரு.ஜவஹர்லால் அவர்கள் சொன்னதுபோல வேற்றுமையில்
ஒற்றுமை நிறைந்தது நம் நாடு"

"தொன்மையிலும், கலாச்சரத்திலும், பண்பாட்டிலும்
நமக்கு இணையானவர்களைக் கொண்ட நாடு
வேறொன்றுமில்லை! அது நிதர்சனமான உண்மை!
ஆகவே இந்தத் திருநாட்டில் பிறந்திருக்கிறோம்
என்பதுதான் முதல் பெருமை!"

"இந்தியாவில் பிறந்ததற்காக முதலில் பெருமைப்படுங்கள்!"

அவர் மெய்மறந்து சொன்னார்,"ஆமாம், அதுதான் உண்மை!"

அத்துடன் கேள்வி ஒன்றையும் கேட்டார்.

"சரி, எது சிறுமை?"

"நம் தாய்த்திரு நாட்டை இகழ்ந்து பேசுவதுதான் சிறுமை!"

"இதில் உங்களுடைய விதிப்படிதான் நடக்கும் என்பது
எங்கே வரும்?"

"பிறப்பு உன் கையில் இல்லை!இந்தத் தாய்தான் வேண்டுமென்று
நீ விரும்பிப் பிறக்கவில்லை. அதுபோல நாடும் அப்படித்தான்
இரண்டுமே இறைவன் அளித்த கொடை. நீ வாங்கி வந்த வரம்!
இல்லையென்றால் நீ நைஜீரியாவிலோ அல்லது ஜாம்பியாவிலோ
பிறந்திருப்பாய். இல்லையென்றால் அவற்றைவிட மோசமான
நாடு ஒன்றில் பிறந்திருப்பாய்!"

"ஆகவே அதை உணர்ந்து கொள் முதலில்!
நாட்டை நேசி,
நாட்டிற்கு விசுவாசமாக இரு.
நாட்டிற்கு நன்றியுள்ளவனாக இரு.
அந்த உணர்வு ஒன்றுதான் உன்னை மேம்படுத்தும்!"


நாகேஷ் சொன்ன நகைச்சுவை!

முப்பதைந்து ஆண்டுகளுக்கு முன்பு வந்த படம்.படத்தின்
பெயர் நினைவில் இல்லை. ஆனால் காட்சி நினைவில் இருக்கிறது

நாகேஷ் வெளியிலிருந்து வீட்டிற்குள் வருவார். வீட்டில்
இருக்கும் டைப்பிஸ்ட் கோபு நாகேஷைப் பார்த்துக் கேட்பார்.

"ஏண்டா ஜோசியருகிட்டே போனியே,என்ன சொன்னார் அவர்?"

அதற்கு நாகேஷ் அவருக்கே உரிய ஏற்ற இறக்கங்கள் உள்ள
குரலில் பதில் சொல்வார்.

"அதெல்லாம் நல்லாத்தான் சொன்னாருப்பா!"

"அதான் என்ன சொன்னாருங்கிறேன்ல?"

"உனக்கு இந்தக் கஷ்டம், நஷ்டம், துன்பம், துயரம் எல்லாம்
நாற்பது வயசு வரைக்கும்தான்னு சொன்னாரு!"

"அதுக்கப்புறம்?"

"அதுவே பழகிப் போயிடும்னுட்டாரு!"

கொல்' லென்ற சிரிப்பொலியால் தியேட்டர் அதிர்ந்துவிடும்!
-----------------------------------------------------------------------------------
அது அவர் நகைச்சுவைக்காகச் சொல்லியது என்றாலும்
பலருடைய ஜாதகத்தில் அது உண்மையாகவே இருக்கும்

ஏன் அப்படி?

குரு, சந்திரன், சுக்கிரன் மூன்றும் அதிக நன்மைகளைக்
கொடுக்கக்கூடிய கிரகங்கள். அவைகள் மூன்றுமே ஒருவருடைய
அல்லது ஒருத்தியுடைய ஜாதகத்தில் வலுவிழந்து இருந்தால்

அந்த ஜாதகனுடைய அல்லது ஜாதகியுடைய வாழ்க்கை கடைசி
வரை போராட்டங்கள் மிகுந்ததாகவே இருக்கும்.

அந்த மாதிரி ஜாதகங்களுக்கெல்லாம், கருணை மிக்க கடவுள்
நின்று போராடும் சக்தியைக் (Standing Power) கொடுத்திருப்பார்.

ஆனால் 40 வயதுவரை, அதாவது இளமைத் துடிப்புள்ள காலத்தில்
இதெல்லாம் ஏன் இப்படி எனக்கு மட்டும் நடக்கிறது? என்ற
துடிப்பு இருக்கும். 40 வயதிற்குமேல், சரி, இதுதான், நம்முடைய
நிலைமை, என்று பக்குவப்பட்ட மனது உணர்ந்து விடும்.
ஆதலால், வருவதை ஏற்றுக் கொள்ளும் துணிச்சலும்
கிடைத்து விடும். வாழ்க்கைப் பயணத்தை ஒரு சோகம் கலந்த
மகிழ்ச்சியுடன் தொடர்வார்கள் அவர்கள்!

கூலி ஆளாக வேலையைத் துவங்குபவன், கடை வரைக்கும் கூலி
வேலை பார்ப்பதற்கும், சைக்கிளில் செல்பவன் கடைசிவரை
சைக்கிளில் செல்வதையே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதற்கும்,
ஒரு சின்ன கிராம ரயில்வே ஸ்டேசனில், ஸ்டேசன் மாஸ்டராக
வேலைக்குச் செல்பவன், கடைசிவரை ஸ்டேசன் மாஸ்டராகவே
வேலை பார்ப்பதற்கும், ஒரு இசையமைப்பாளரிடம், வயலின்ஸ்ட்டாக
வேலை பார்ப்பவன், அதே சினிமாத்துறையில் கடைசிவரை, ஏதோ
ஒரு இசையமைப்பாளரிடம் வயலின் வாசித்துக் கடைசிவரை
வாழ்க்கையை ஓட்டுவதற்கும், ஒரு ஸ்டுடியோவில் Light Boy
Or Clap Boy வேலைபார்க்கும் ஒருவன் கடைசிவரை அதே
வேலையில் நீடிப்பதற்கும் - அவ்வளவு ஏன் பேருந்துகளில்
ஓட்டுனராகவும், நடத்துனராகவும் வேலைக்குச் சேர்பவர்கள்
கடைசிவரை, அதே வேலையில் மன அமைதியோடு இருப்பதற்கும்,
நான் மேற்சொன்ன ஜாதக அமைப்புதான் காரணம்.

Twist, Up & Down உள்ள ஜாதகங்களில் 4 கிரகங்கள் நன்றாக
இருக்கும், மீதி கிரகங்கங்கள் பாதிக்கப்பட்டிருக்கும். அவர்கள்
வாழ்க்கை ஏற்ற இறக்கம் உள்ளதாக இருக்கும்.

ஒரு நடிகர் ஒரே படத்தில் புகழின் உச்சிக்குபோய் விடுவார்.
அடுத்தடுத்து மேலூம் இரண்டு படங்கள் வெற்றியடைய, முதல்
படத்தில் வெறும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு நடித்தவர், நான்காவது
படத்திற்கு இரண்டு கோடி சம்பளம் என்பார். அதையும்
கொடுத்து அவருடைய கால்சீட்டை வாங்க ஒரு கூட்டம்
அவருடைய வீடு வாசலில் காத்திருக்கும். இரண்டே ஆண்டுகளில்
பத்துக் கோடி பணம் சேர்ந்து விடும். சென்னை தி.நகரில் பங்களா,
பென்ஸ் கார் என்று வாழ்க்கை தடபுடலாகிவிடும்

அதே நிலைமை நீடிக்குமா என்றால் - எப்படித் தெரியும்?

அவருடைய ஜாதகம் நன்றாக இருந்தால் நீடிக்கும்.
இல்லையென்றால் கிரகங்கள் ஊற்றிக் கவிழ்த்து விட்டு
அல்லது அடித்துத் துவைத்து விட்டுப்போய் விடும்!

எப்படி?

இரண்டு வருடங்களுக்குப் பிறகு அடுத்தடுத்து மூன்று அல்லது
நான்கு படங்கள் தோல்வியுறும், மார்கெட் போய் விடும்.
ராசியில்லாத நடிகர் என்ற பெயர் ஏற்பட்டுவிடும். ஃபீல்டில்
நிற்க வேண்டும் என்பதற்காக கையில் இருக்கின்ற காசைப்
போட்டுப் பெரிய பட்ஜெட் படமாக எடுப்பார்.அதுவும்
நேரம் சரியில்லாத காரணத்தால் ஊற்றிக் கொண்டுவிடும்
விட்ட பணத்தைப் பிடிப்பதற்காக கடன் வாங்கி மீண்டும்
ஒரு சொந்தப் படம் எடுப்பார். அதுவும் ஓடாமல் அவரைச்
சோதனைக்கும், வேதனைக்கும் உள்ளாக்கிவிடும்.

கடைசியில் கடன்காரர்கள் பிடியில் இருந்து தப்புவதற்காக
சம்பாத்தித்த சொத்துக்களையெல்லாம் விற்றுக் கடனை
அடைப்பார். மீண்டும் லாட்ஜ் வாசம், எடுப்புச் சோறு
என்றாகி விடும்.

இது சினிமாக்காரர்கள் என்று மட்டுமில்லை, பல தொழில்
அதிபர்கள், வியாபாரிகள் வாழ்விலும் நடக்கின்றதுதான்.
சினிமாக்காரரை ஏன் முன்னிலைப் படுத்திச் சொன்னேன்
என்றால், அது உங்களுக்கு சுலபமாக வசப்படும் அல்லது
புரியும் என்பதால்.

இது ஒரு நடிகரின் வாழ்க்கையில் நடந்ததுதான். பெயரைச்
சொல்லவில்லை. முடிந்தால் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்

அந்த நடிகர் - பென்ஸ் காரில் போய்க் கொண்டிருந்தவர்
கஷ்டகாலம் வந்து, அனைத்தையும் இழந்து கோடம்பாக்கத்தில்
பொடி நடையாக ஒருமுறை நடந்து சென்று கொண்டிருந்த
போது, எதிரில் வந்து அவரை வழி மறித்த பத்திரிக்கை
நிருபர் ஒருவர் அவரிடம் இப்படிக்கேட்டார்:

"என்ன அண்ணே, நடந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள்?"

அவர் பதில் சொன்னார்:

"ஆமாம்ப்பா, கடவுள் பென்ஸ் காரில் போகச் சொன்னார்
போனேன்; இப்போது நடந்துபோ என்றார்.நடந்து போய்க்
கொண்டிருக்கிறேன். மீண்டும் என்னை அவர் பென்ஸ் காரில்
போக வைப்பார்.போவேன்.அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது"

அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை. மீண்டும் அவருக்கு
ஒரு அருமையான வாய்ப்புக் கிடைத்தது. கதாநாயகன்
வேடமல்ல; குண சித்திர வேடம். சிறப்பாக நடித்தார்.
மீண்டும் பல வாய்ப்புக்கள் அதே குணசித்திர வேடங்களில்
நடிக்கத் தேடி வந்தது. இன்று மீண்டும் நல்ல நிலைமையில்
இருக்கிறார் அவர்.
---------------------------------------------------------------------------
ஆகவே உங்களுடைய ஜாதகத்தைப் பற்றிய கவலையை
எல்லாம் விட்டு விடுங்கள்.

நல்ல ஜாதகம் என்றால் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்
ஜாதகத்தைப் பற்றி யோசிக்கக்கூட நேரமின்றி வாழ்க்கை
முழு இன்ப மயமானதாக இருக்கும். அதிகாலையில் மும்பை
மத்தியானம் ஃபிராங்க்ஃபர்ட், நடு இரவு நியூயார்க் என்று
பறந்து கொண்டிருப்பீர்கள்.வாழ்க்கையின் அவ்வளவு
செளகரியங்களும் அதுவாகவே உங்கள் காலடிக்கு வந்து
சேரும்.

அதேபோல உங்கள் ஜாதகம் சொல்லும் படியாக இல்லை
யென்றால், நீங்கள் கவலைப் பட்டு ஒன்றும் ஆகப்போவ
தில்லை. உங்களுடைய துன்பங்களையும், அசெளகரியங்களையும்
யாரிடமும் கொடுத்துவிட்டு நீங்கள் தப்பிக்க முடியாது.
உங்கள் துன்பங்களை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும்

ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்.
துன்பப்படுபவனுக்கு மட்டும்தான் கடவுள் தோள் கொடுப்பார்.
ஜாதகத்தில் அதற்குப் பெயர் நிற்கும் சக்தி!
That is standing power confered by The Almighty!
--------------------------------------------------------------------
ஒரு குட்டிக்கதை மூலம் அதை விளக்குகிறேன்.

ஒரு பெரிய பக்தர் இருந்தார். எப்படியும் இறைவனைப்
பார்த்துப் பேசிவிட வேண்டும் என்ற மன ஆதங்கத்துடன்,
ஒரு முறை அவர், தொடர்ந்து பல நாட்கள் கடும் விரதம்
மேற்கொண்டதோடு, கடும் பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்.

இறைவன் காட்சி கொடுத்தார்.அதோடு நில்லாமல் உன்
பக்தியை மெச்சும் விதமாக ஒரு வரம் தருகிறேன்.
என்ன வேண்டுமென்றாலும் கேள் என்றார்.

"நீங்கள் எப்போதும் எனக்குத் துணையாக வரவேண்டும்.
அதுதான் என்னுடைய ஆசை! வேறொன்றும் வேண்டாம்"
என்று பக்தர் சொல்ல, அப்படியே நடக்கும், கவலையை விடு
என்று இறைவன் சொன்னார்.

பக்தர் விடவில்லை,"ஆண்டவரே, நீங்கள் எனக்குத் துணை
யாகத்தான் உள்ளீர்கள் என்பதை நான் எப்படித் தெரிந்து
கொள்வது?" என்றார்

ஆண்டவன் புன்னகைத்து விட்டுப் பதில் சொன்னார்.

"நீ அதை ஒரு பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்
உங்கள் ஊரில் உள்ள ஆற்று மணலில் நீ மட்டும் தனியாக
ஐம்பது அல்லது அறுபது அடி தூரம் நடந்து சென்று, திரும்பிப்
பார்த்தாயென்றால் உன்னுடைய காலடிச் சுவடுகள் இரண்டுடன்
உன்னுடன் நானும் நடந்து வந்ததற்கான காலடிச் சுவடுகளாக
மணலில் பதிந்த மேலும் இரண்டு ஜோடிக் காலடிச் சுவடுகள்
உன் கண்களுக்குத் தெரியும்! அதுதான் அடையாளம்!"
என்று சொல்லிக் கடவுள் மறைந்து விட்டார்.

பக்தரும் மிகவும் மகிழ்ந்து வீட்டிற்குத் திரும்பி விட்டார்
வாழ்க்கை ஆனந்த மயமாக இருந்தது."உன்னைக் கண்டு நான்
ஆட, என்னைக் கண்டு நீ ஆட" என்று தன் மனைவியுடன்
மகிழ்வாக வாழ்ந்தார்.

ஒரு மூன்று வருட காலம் போனதே தெரியவில்லை!

ஒரு நாள் திடீரென்று நினைவிற்கு வர, ஆண்டவர் சொல்லியபடி
கூட இருக்கிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள ஆற்று மணல்
பரிசோதனை செய்து பார்த்தார். என்ன ஆச்சரியம்?
மணிலில் ஆண்டவர் சொல்லியபடியே இரண்டு ஜோடிக் கால்
தடயங்கள் இருந்தன. அவரும் மன நிறைவோடு திரும்பி விட்டார்

காலச் சக்கர ஓட்டத்தில், ஒரு நாள் அவர் தன் மனைவி, மக்களை
யெல்லாம் விபத்தொன்றில் பறிகொடுக்க நேர்ந்தது. அது விதி
என்று மனதைத் தேற்றிக் கொண்டு விட்டார். அடுத்தடுத்துத்
தொடர்ந்து துன்பங்கள் அப்போதும் துணிவுடன் அவற்றை
எதிர் கொண்டார். கடைசியில் துறவியாகி ஊர் ஊராகக்
கோவில் கோவிலாகச் செல்ல ஆரம்பித்தார்.

அப்போதுதான் அவருக்கு அந்த எண்ணம் வந்தது.

"நாம் நமது விதிப் பயனால் இப்படித் துன்பப் படுகிறோம்
அப்போழுதே ஆண்டவரிடம், துன்பமில்லாத வாழ்க்கையைக்
கொடு என்று கேட்டிருக்கலாம். அதைவிடுத்துக் கொழுப்புடன்
ஒன்றும் வேண்டாம், விதித்ததை நான் பார்த்துக் கொள்கிறேன்
நீ துணையாக மட்டும் வந்தால் போதும் என்றோம்.
சரி அப்படியே செய்கிறேன் என்று சொல்லிய ஆண்டவர்
நன்றாக இருந்த காலத்தில் துணையாக வந்தார்.அதைக்
கண்ணாலும் பார்த்தோம். இப்போது எல்லாவற்றையும்
இழந்துவிட்டுத் தனியாக இருக்கிறோம். மூன்று வேளை
உணவும், படுக்கக் கோவில் மண்டபங்களும் கிடைத்தாலும்
வாழ்க்கை வெறுமைதானே - இந்த வெறுமையான நேரத்திலும்
ஆண்டவன் நமக்குத் துணையாக வருகிறாரா - தெரியவில்லையே?"

இப்படி நினைத்தவர், உடனே, ஆண்டவனின் துணையைப்
பரிசோதனை செய்து பார்ப்போம் என்று எண்ணி, கண்ணில்
கண்ட ஒரு ஆற்றின் மணல் பகுதியில் இறங்கி நடக்க
ஆரம்பித்தார்.

ஒரு நூறு அடி தூரம்வரை நடந்தவர், திரும்பிப் பார்த்தார்.

என்ன சோதனை?

இரண்டு ஜோடிக் காலடிச் சுவடுகளுக்குப் பதிலாக ஒரு
ஜோடிக் காலடிச் சுவடு மட்டுமே தெரிந்தது.

மனம் நொருங்கிப் போய்விட்டது அவருக்கு!

சுடு மணல் என்றும் பார்க்காமல், அங்கேயே உட்கார்ந்து
கண்ணீர் மல்க, கதறியவாறு ஆண்டவனைப் பிரார்த்திக்கத்
துவங்கினார்.

அடுத்த ஷணமே ஆண்டவர் காட்சியளித்தார்.

இவர் வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவாறு
கேட்டார்.

"நியாயமா _ கடவுளே? நான் இன்பமாக இருந்த போதெல்லாம்
என் கூடவே துணையாக நடந்து வந்த நீங்கள், எனக்குத்
துன்பம் வந்த நிலையில் என்னைக் கைவிட்டுப் போனதேன்?"

அண்டவன், புன்னகைத்துவிட்டுச் சொன்னார்:

"நான் வாக்குக் கொடுத்தால் - கொடுத்தது கொடுத்ததுதான்.
நீ இப்போது பார்த்த காலடிகள் என்னுடையவை. நீ இன்பமாக
இருக்கும்போது நான் உன் கூட நடந்து வந்தேன்.அதனால்
உன் கண்ணில் அன்று பட்டது இரண்டு ஜோடிக் காலடிகள்'.
ஆனால் நீ துன்புற்ற நிலைக்கு வந்தவுடன், உன்னை நடக்க
விடாமல் நான் தூக்கிக் கொண்டு நடந்தேன். அதனால்தான்
இந்த ஒற்றைக் காலடிப் பதிவுகள். உன் துன்பங்களைத்
தாங்க வைத்ததும் என்னுடைய அந்த அணைப்புதான் -
தெரிந்து கொள்வாய் பக்தனே!"

ராசி பலன்கள் பார்ப்பது எப்படி என்று சுலபமாக பார்க்கலாம் .

தினசரிப் பத்திரிக்கைகள் எல்லாம் போட்டி போட்டுக்
கொண்டு அன்றைய ராசிபலன்களை எழுதிப் பிரசுரிப்
பதைப் பார்த்திருப்பீர்கள். பலர் தலைப்புச் செய்தி
என்ன என்று பார்த்தவுடன் அடுத்து விரைந்து
பார்ப்பது அந்த ராசிபலன் பகுதியைத்தான்.

இளைஞர்கள் எல்லாம் விளையாட்டுச் செய்திகளுக்கு
அல்லது சினிமாச் செய்திகளுக்கு முக்கியத்துவம்
கொடுத்துப் பார்ப்பார்கள். ஆனால் நடுத்தரவயதுக்
காரர்களும், வயதான பெரிசுகளும் ராசிபலன்
பகுதியைத்தான் முதலில் விரும்பிப் பார்ப்பார்கள்
அதற்குப் பிறகுதான் மற்ற பகுதிகள்

சரி, தினமும் ஒரு பத்திரிக்கைக்கு ராசிபலன்களை
எழுதிக் கொடுக்கும் ஜோதிடர் எந்த அடிப்படையில்
அதை எழுதுகின்றார்?

சந்திர, சூரிய சுழற்சியை வைத்து அதை அவர் எழுதுவார்!

சூரியன் மாதம் ஒரு ராசி, சந்திரன் இரண்டேகால்
நாளைக்கு ஒரு ராசி (தினமும் ஒரு நட்சத்திரம்) ஆகவே
ஒவ்வொரு ராசிக்கும் உரிய தினசரிப் பலனை இந்த
இரண்டு கோள்களின் நிலைமையை வைத்து எழுதிக்
கொடுத்து விடுவார்.

அது 100% சரியாக இருக்குமா?

அது பொதுப்பலன்தான். ஆகவே பொதுவில் சரியாக
இருக்கும். உதாரணத்திற்குப் பணச் சிக்கல் என்று ஒரு
ராசிக்குச் சொல்லப்பட்டிருந்தால், பணத்தை வைத்து
எத்தனை விதமான சிக்கல்கள் இருக்கின்றனவோ
அததனை விதமான சிக்கல்களில் ஏதாவது ஒன்று
அவரவர் சொந்த ஜாதகம், நடப்பு திசை, நடப்பு
புக்திகளை வைத்து அன்றைக்கு வரும்!

பணத்தைத் தேடுவதிலும் (சம்பாதிப்பதிலும்) சிக்கல்
இருக்கிறது. கடனாகக் கொடுத்த பணத்தைத் திருப்பி
வாங்குவதிலும் சிக்கல் இருக்கிறது. பணப் பற்றாக்
குறையும் சிக்கல்தான். பணம் அதிகமாக இருந்தால்
அதைப் பாதுகாப்பதில் - முதலீடு செய்வதில்- சிக்கல்
உள்ளது!

செலவிற்குப் பணம் இல்லாமல் இருப்பதும் சிக்கல்
தான், கொடுத்த இடத்தில் வாங்கிக் கொண்டு போனவர்
சொன்னபடி பணத்தைத் திருப்பித்தராமல்
இழுத்தடிப்பதும் சிக்கல்தான்.

காரிய தாமதம் என்றால், Routine Workஐத் தவிர்த்து
நாம் செய்வதற்கு முனைப்படுகின்ற காரியம்
அன்றைக்கு நிறைவேறாமல் போய்விடும்.

சூரியன் 11-3-10-6 ம் இடங்களில் இருக்கும் மாதங்களும்,
சந்திரன் 7-1-6-11-10-3 ம் இடங்களிலும் இருக்கும்
நாட்களும் பொதுவில் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும்.

சந்திரன் உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடத்திலும்,
12ம் இடத்திலும் சஞ்சாரம் செய்யும் நாட்கள் மகிழ்ச்சி
யைத் தராது.

சரி அதை எப்படித் தெரிந்து கொள்வது?

வெரி சிம்ப்பிள். நீங்கள் திருவோண நட்சத்திரம்
என்றால், உங்களுடைய ராசி மகரம். அதிலிருந்து
எட்டாவது ராசி சிம்மம். சிம்மத்திற்குரிய நட்சத்
திரங்கள் -மகம் - பூரம் - உத்திரம் முதல் பாதம்
(First Six Hours of Uththiram Star). அந்த நட்சத்திரம்
உடைய நாட்கள் சிறப்பாக இராது.

அதுபோல அதே திருவோண நட்சத்திரத்திற்குப்
பன்னிரெண்டாம் இடம் என்னும்போது அது தனுசு
ராசி -அதற்குரிய நட்சத்திரங்கள் மூலம் - பூராடம்
- உத்தராடம் முதல் பாதம் (First Six Hours of
Uththiradam Star). அந்த நட்சத்திரம் உடைய நாட்களும்
சிறப்பாக இராது.

இதுபோல ஒவ்வொரு ராசிக்காரரும் தனக்குச்
சாதகமாக அல்லது பாதகமாக உள்ள நட்சத்திரங்களைக்
குறித்து வைத்துக் கொள்ளலாம்.

அந்த நாட்களில் என்ன செய்யலாம்?

கவுந்தடித்து வீட்டில் படுத்துக் கொண்டு விடலாமா?
கூடாது. அன்றாட வேலைகளைச் செய்யுங்கள்.
That is your routine work. அதற்கெல்லாம் ஆபிஸில்
லீவு கிடைக்குமா என்ன?

அன்றாட வேலைகளைச் (routine work) செய்வதற்கு
நாள், நட்சத்திரங்களைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை!

விஷேசமாக அல்லது புதிதாகச் செய்யவுள்ள
வேலைகளை அன்று செய்யாமல் தவிர்க்கலாம்.
திருமணத்திற்குப் பெண் பார்க்கப் போகிறீர்கள்
என்றால அந்த நாட்களைத் தவிர்க்கலாம். புதிதாகக்
கார் வாங்கப் போகிறீர்கள் என்றால அந்த நாட்களைத்
தவிர்க்கலாம். என்ன, நீங்கள் தேடிப்போகும் மாடல்
அல்லது கலர் கிடைக்காது!
(இரண்டிற்கும் தான்:-))))

ஆண்டுப் பலன்களைச் சனி, மற்றும் குருவை வைத்தும்,
மாத பலன்களைச் சூரியனை வைத்தும், நாள் பலன்களைச்
சந்திரனை வைத்தும் பார்க்க வேண்டும்

இரண்டாம் வீட்டிற்கு தனஸ்தானம் (House of Finance), குடும்ப ஸ்தானம்
(House of family life), வாக்கு ஸ்தானம் (House of speech) ஆகிய
வேலைகள் உண்டு. ஜாதகத்தில் இரண்டாம் வீட்டிற்கு அதிபதி, அவர்
அமர்ந்த இடம், அந்த வீட்டில் வந்து அமர்ந்த கிரகம், அந்த வீட்டின்
மேல் விழும் நல்ல மற்றும் தீய கிரகங்களின் பார்வை, அம்சத்தில்
இரண்டாம் வீட்டு அதிபதியின் நிலை ஆகிய காரணங்களால் வெவ்வேறு
விதமான பலன்கள் உண்டாகும்.

இரண்டில் சனி இருந்தால் கையில் காசு தங்காது. உத்தியோக ஸ்தானம்
நன்றாக இருந்து நல்ல ஆறு டிஜிட் சம்பளம் வந்தாலும் கையில் காசு
தங்காது (Expense oriented horosocope)

அதேபோல இரண்டில் சனி இருந்தால், குடும்ப வாழ்க்கை அமையாது.
சில அரசியல் தலைவர்களின் ஜாதகத்தைப் பார்த்தால் அது தெரிய வரும்.
அப்படியே எழாம் வீட்டின் காரணமாக நல்ல மனைவி கிடைத்திருந்தாலும்,
அவளை இங்கே விட்டு விட்டு அவன் பொருள் ஈட்ட துபாய் போன்ற
நாடுகளுக்குப் போய்விடுவான். வருடத்தில் ஐந்து நாட்கள் அல்லது
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பத்து நாட்கள் ஊருக்கு வந்து மனைவியோடு
இருந்து விட்டுப்போவான். அதை எப்படி சிறந்த குடும்ப வாழ்க்கை என்று
சொல்ல முடியும்?

அதேபோல இரண்டில் சனி இருந்தால், வாயைத் திறந்தால் சண்டைதான்.
தர்க்கம்தான். அவன் பேசுவது நியாயமாக இருந்தாலும் எப்போதுமே தர்க்கம்
செய்யும் குணத்தால் மற்றவர்கள் அவனை விரும்ப மாட்டார்கள்.

ராகு அல்லது கேது இருந்தாலும் அதே பலன்தான்.

இரண்டாம் வீட்டில் குரு அல்லது சந்திரன் அல்லது சுக்கிரன் போன்ற சுபக்
கிரகங்கள் இருந்தால் மேற்கூறியவற்றிற்கு எதிரான பலன்கள் நடக்கும். கையில்
காசு தங்கும், நல்ல குடும்ப வாழ்க்கை அமையும், நல்ல சொல்வாக்குக்குப்
பெற்றுத் திகழ்வான்.

எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள்,
பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக சிலருக்கு பலன்கள் வேறுபடலாம்.

1. இரண்டில் சூரியன் அமர்ந்திருந்தால் - பொருள் சேதம்.

2. இரண்டில் சந்திரன் இருந்தால் - இளம் வயதிலேயே திருமணமாகிவிடும்.
பணக்காரனாக இருப்பான், புத்திசாலித்தனம், செல்வாக்கு இருக்கும்.பெண்களு
டனான கேளிக்கைகளில் நாட்டம் உள்லவனாக இருப்பான்

3. இரண்டில் செவ்வாய் இருந்தால் - கோபக்காரன், வாக்குவாதம் செய்பவன்,
வீணாக செலவு செய்பவன். பூமி லாபம் உண்டு. கண் நோய் உண்டாகும்

4. இரண்டில் புதனிருந்தால் - நல்ல படிப்பாளி, எடுத்த காரியத்தை முடிக்கும்
ஆற்றல் இருக்கும். பணம் சம்பாதிக்கக்கூடியவன். சேர்த்துவைக்கக் கூடியவன்
.
5. இரண்டில் குரு இருந்தால் பணம் வந்து கொண்டே இருக்கும். தர்மங்கள்
செய்பவன். சுகமாக வாழக்கூடியவன்.

6. இரண்டில் சுக்கிரன் இருந்தால் சுகமாக வாழ்பவன். அதிகமான உறவுகளைக்
கொண்டவன். நல்ல மனைவி அமைவாள். வித்தைகள் தெரிந்தவன்.
பெண்களிடம் வசப்பட்டுவிடுபவன்.

7. இரண்டில் சனி இருந்தால் - இரண்டு விவாகம் அல்லது இரண்டு குடும்பங்கள்
அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன் தொடர்புடையவன். கையில் காசு
தங்காது. சம்பளத்திற்கு மேல் செலவாகும். எல்லாத் தீமைகளும் இவனுக்குப்
பெண்களாலேயே உண்டாகும்.

8. இரண்டில் ராகு அல்லது கேது இருந்தால் - இரண்டு விவாகம் அல்லது
இரண்டு குடும்பங்கள் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன் தொடர்புடைய
வன். தயவு தாட்சண்யம் பார்க்க மட்டான். சோம்பல் உடனிருக்கும். மன
சஞ்சலம் உடையவன். சிறுவயதில் கஷ்டங்களை அனுபவிப்பான். வயதான
காலத்தில் செளகரியமாக இருப்பான், வாயைத் திறந்தால் சண்டைதான்.

9. இரண்டில் சுபக்கிரகங்கள் சேர்ந்து நின்றால் - பெரும் பணக்காரனாக
இருப்பான். சகல வித்தைகள் தெரிந்தவனாக இருப்பான்.

10. இரண்டில் சுபக்கிரகங்களுடன் - சூரியனும் கூடி நின்றால் - பொருள்
நாசம். கையில் காசு தங்காது.

11. இரண்டில் சுபக்கிரகங்களுடன்- செவ்வாய் கூடி நின்றால் ஞானமும்
(அறிவும்) செல்வமும் உண்டு

12. இரண்டில் சூரியனும், சனியும் கூடி நின்றால், அவன் சம்பதித்தது
மட்டுமல்ல, பரம்பரைச் சொத்தும் சேர்ந்து கரைந்துவிடும்

13. இரண்டில் சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் நல்ல மனைவி, மக்கள்,
செல்வம் எல்லாம் கூடி வரும்

14. இரண்டாம் இடத்தில் குரு இருந்து அந்த வீட்டிற்கு ஏழில் புதன்
அமர்ந்திருந்தால் பொருள் விரையம் அல்லது நாசம் ஆகும்

15. இரண்டில் சந்திரன் நிற்க உடன், சனி அல்லது ராகு அல்லது கேது
சேர்ந்து நின்றால் தரித்திரம். கையில் காசு தங்காது (Everything will be
drained out)

16.

17. இரண்டிற்கதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்தால் அவனுடைய சொத்துக்களைப் பகைவர்கள் -
அவனுடைய எதிரிகள் கைக்கொண்டு விடுவார்கள்.

18. அதற்கு நேர்மாறாக ஆறாம் அதிபதி இரண்டாம் வீட்டில் வந்து
அமர்ந்திருந்தால், எதிரிகளுடைய சொத்துக்கள் இவனுக்கு வந்து சேரும்.

19. கடக லக்கினத்தில் பிறந்தவனுக்கு, சூரியனும், சந்திரனும், சுக்கிரனும்
ஒன்றாகக்கூடி பாவ வீட்டில் இருந்தால் அவன் பிறவிக் குருடனாய்
இருப்பான்.

20. இரண்டாம் வீட்டுக்காரன் சுக்கிரனாகி, அவன் லக்கினாதிபதியுடன்
கூடி மூன்றில் இருந்தால் ஜாதகனுக்குக் கண் நோய் உண்டாகும்

21. இரண்டாம் அதிபனும், புதனும் கூடி ஆறாம் இடத்தில் வலுவாக
அமர்ந்தால் ஜாதகன் ஊமையாக இருப்பான்.

22. இரண்டம் அதிபனும், புதனும் கூடி எட்டிலோ அல்லது பன்னி
ரெண்டிலோ இருந்தாலும் ஜாதகன் ஊமையாகிவிடுவான்

23. இரண்டாம் அதிபதியும், குருவும், சுக்கிரனும் உச்சமடைந்திருந்தால்
ஜாதகன் அதி புத்திசாலியாக இருப்பான்

24. இரண்டிற்குடையவனும், புதனும் உச்சம் பெற்றிருக்க, லக்கினத்தில்
குருவும், எட்டில் சனியும் இருந்தால் ஜாதகன் பெரிய மேதையாக விளங்குவான்.

25. மூன்று, அறு, எட்டு, பதினொன்று ஆகிய வீடுகளில் பாவக் கிரகங்கள்
நின்று அவை லக்கினத்தைப் பார்க்காமல் இருந்தாலே ஜாதகன் பெரிய
செல்வந்தனாக இருப்பான்.
மூணாம் பாவகம் ,நாலாம் பாவகம், இந்துலக்னம்
பஞ்சமுஹன் ஜோதிட பயிற்சி மற்றும் கல்வி மையம்


நாமக்கல்




மூணாம் பாவகத்தில் உள்ள சில பாவக காரகத்துவம்

  1. சிற்றின்பம்
  2. வேலையாள், நமக்கு உதவுபவர், சீடர்கள்
  3. இசை பிரியம்
  4. தைரியம் , ஆண்மை, வீரியம்
  5. இளைய சகோதிரம்
  6. காத்து
  7. ஆபரண நகைகள்
  8. சிறு தேவதை ஆசி
  9. வெற்றி ஸ்தானம்
  10. ஆயுள்
  11. சிறு வாகனங்கள்
  12. குறுகிய பிரயாணம்
இந்த பாவகம் மிக முக்கிய மானது என்பது தெரியவருகிறது .

இந்த பாவகத்தில் ஒவ்வொரு கிரகமும் நின்றாள் என்ன பலன் என்பதை பாப்போம் .

புகழ், அதிகாரம், ஆணவம் ,ஈகை குணம் கொண்ட சூரியன் நின்றாள் நிச்சயம் இளைய சகொதிரன் புகழ் கொண்டவனாக இருப்பான் 
ஜாதகருக்கு அரசு பதவி , நிர்வாக திறன், தொண்டர்கள் பலம் (அரசியல் வாதியாக இருந்தால் ) முதலாளிக்கு பணியால் பலம் , ஆனால் காத்து, கைகள் பாதிப்பு ஏற்படலாம் 

சஞ்சலம், உணவு, கற்பனை கிரகமான சந்திரன் நின்றாள் சகோதிரன் உணவு பிரியனாகவும், சஞ்சல மனம் கொண்டவனாக இருப்பான் . ஆபர சேர்கை, பணியால் பலம், சகோதிர மேன்மை ஏற்படும்,ஜாதகனுக்கு குறுகிய பயணம் அதிகம் வரும் (சந்திரன் குறுகிய பயணத்திற்கு காரகன் என்பதால் )

கோபம் ஆணவம், வலிமை முரட்டு தனம் கொண்ட செவ்வாய் நின்றாள் இளையசகொதிரன் வலிமை ,கோபம் உள்ளவனாக இருப்பான் 
ஜாதகனுக்கு எதிரிகளை அளிக்கும் திறன் உண்டாகும் 

புத்திசாலித்தனம், வாக்கு சாதுரியம் , அறிவு, நகைசுவை கொண்டகிரகமான புதன் நின்றாள் சாதகனின் இளைய சகொதிரனின் குணம் புதனின் கொண்டே இருக்கும் .ஜாதகனுக்கு குருட்டு தைரியம் வரும் ,வீரிய குறைபாடு வரும் (புதன் அலிகிரகம் என்பதால் ) சீடர்கள் மற்றும் வேலையாள் உதவி கிடைக்கும் 

பொறுமை, ஆண்மீககுனம், அமைதி ,பொறுப்பு ,ஒழுக்கம் போன்ற வெற்றிக்கு காரணமான குரு நின்றாள் இளையசகொதிரன் அப்படியே இருக்கும் . ஜாதகனுக்கு மனோதிடம், சந்தேகம், அதிகாரம், நல்ல வசதியான ராஜ வாழ்வு உண்டு( kuru ராஜகிரகம் என்பதால் )


அழகு, கவர்ச்சி, ஆடை அழகு ,கலாரசிகன்,   கவர்ச்சி தன்மை, இசை விருப்பம், பகுத்து பந்தா போன்ற காரகம் கொண்ட சுக்கிரன் நின்றாள் இந்த காரக தன்மை இளைய சகொதிரனுக்கு கிடைக்கும் .ஆனால் அதே சமயன் இந்த செய்கைகளால் சகொதிரனுக்கு தரித்திர நிலைமை வரலாம், ஜாதனுக்கு ஆடம்பர செலவு, உதவி இன்மை, போக குறைவு, தனகுறைவு, மாணவி சுக குறைபாடு வரலாம்

மந்தகுணம் , அறிவுக்குறைவு, முதிர்ந்த தன்மை, ,தாமத குணம், கொண்ட சனி இருந்தால் இந்த காரகுனம் இளைய சகொதிரனுக்கு கொஞ்சம் வரலாம் , ஜாதகனுக்கு ஆயுள் பலம், நிர்வாக தன்மை, அரசின் நிதி, கிடைக்கும், ஜாதகன் வீண் செலவு செய்வான், தந்தைக்கு தோஷம் ,அயன சயன தோஷம் ஏற்படும்

வஞ்சனை சூது கொண்ட ராகு மூனில் இருந்தால் இளைய  சகொதிரனுக்கு தோஷம்தான் ,ஜாதகனுக்கு சில நன்மைகள் ஏற்படும் சனி நின்ற பலன் ராகுவுக்கு வரும் ,ஜாதகனுக்கு மாந்திரீக வல்லமை வரும் ,விஞ்ஞான தன்மை வரும், ஆனால் வீண்பழி ,கேட்ட பெயர் ஏற்படும்

ஆன்மிகம் ,விரக்தி ,முதிர்ந்த தன்மை, மெய்ணன் தன்மைகொண்ட கேது நின்றாள் அந்த குணம் இளைய சகோதிரனுக்கு வரும் , ஜாதகனுக்கு மந்த குணம், சுகபோக வெறுப்பு, தவ சித்தி, பகுத்தறிவு, சர்வ ஞானம், தெய்வ பக்தி தந்துவிடும் .


அன்பு மாணவர்களே கொஞ்சம் புரிகிறதா, பாவகதில் கிரகங்கள் tharum  பலன்களை கொஞ்சம் பார்ப்போம் .

இந்த பாவகதில் லக்னாதிபதி நின்றாள் இளைய சகொதிரனின் அன்பும், ஆதரவு ,பண உதவி ஜாதகனுக்கு கிடைக்கும், சகோதிர நன்மை ஏற்படும் 

முயற்சிகள் வெற்றி உண்டாகும் ,மனம் தைரியமாக செயல்படும் ,ஜாதகனுக்கு அலைச்சல் உண்டாகும்

இரண்டுக்கு உடையவன் நின்றாள் ,இளையசகொதிரனுக்கு செலவுகள் ஏற்படும், ஜாதகனுக்கு வெளிநாடு தொடர்புகள் வரலாம் 
ஜாதகனுக்கு காரிய முடக்கம், தருமா செலவு கூடும் இரண்டாம் அதிபதி பாபி ஆனால் கஷ்டமில்லை, சுப கிரகமாக இருக்க கூடாது 

மூன்றாம் பாவகதில் அந்த பாவக அதிபதியே நின்றாள் ஜாதகன் தைரியமுடயவன் இலசகொதிரன் நல்ல பேர் புகழ் உடையவன் ,பொன் ஆபரண சேர்கை, நல்ல வேலையாள் அமைவு, நண்பர்கள் உதவி, அரசு பணம் கிடைத்தல். போன்றவை ஏற்படும் 

நான்காம் பாவ அதிபதி நின்றாள் இளையசகொதிரன் தனம் உடையவன் ,நல்ல வாக்கு உடையவன் ,நல்ல சகோதிர மேன்மை ஏற்படும் ,ஜாதகனுக்கு தாயார் தோஷம் ஏற்படும், வாகன செலவு, கால்நடைகள் இழப்பு, வீட்டு செலவுகள் ,வீடு இழப்பு, போன்றவை ஏற்படும், ஜாதகனுக்கு சுகம் குறைவு உண்டாகும், கல்வி தடை வரலாம், உறவினர்களால் செலவுகள் வரலாம்.

ஐந்தாம் பாவ அதிபதி நின்றாள் இளையசகொதிரன் மிகுந்த தைரியமுடையவன் ,ஜாதகனுக்கு சிறுது புத்திர தோஷம் வரலாம், சுயமுயற்சி, தன்னம்னிக்கை, சுயதொழில் ஜாதகனுக்கு கிடைக்கும்
தாயாரின் அன்பு இளையசகோதிரனுக்கு கிடைக்கும் .

ஆறாம் பாவக அதிபதி நின்றாள் இளய சகொதிரனுக்கு வீடு,மனை, சுகம் உண்டாகும், வாகன சுகம் இளையசகோதிரனுக்கு  உண்டு .
ஜாதகனுக்கு தைரிய வீரிய குறைபாடு வரலாம். வேலையாள் தகராறு செய்வார்கள்' ஜாதகன் அகால போஜனம் தின்பான், குடும் பகை வரும் ,கடன் கிடைக்காது, வேலை கிடைப்பது கொஞ்சம் கடினமாகும், பகைவர்களால் கொஞ்சம் பயம் இல்லை , 

ஏழாம் பாவக அதிபதி நின்ற பலன் இளையசகோதிரனுக்கு அறிவு உண்டாகும் பொழுபோக்கு விசயங்களில் நாட்டம் வரலாம் 
ஜாதகனுக்கு பல தார பிரச்சனை வரலாம் , ,ஆபரண சேர்க்கை, வியாபார வளர்ச்சி, தைரியமான மனைவி, கல்யாணம் ஆன பிறகு அலைச்சல் வரும். 

எட்டாம் பாவக அதிபதி நின்றாள் இளையசகோதிரனுக்கு நோய்கள் உண்டாகும், கடன்கள் ஏற்படும் ,ஜாதகனுக்கு வேலையாள் பிரச்சனை உருவாகும், ஆபரண இழப்பு, வீரிய ,தைரிய இழப்பு வரலாம், சிற்றின்பதினால் கெடுதல், ,இசை ஆர்வமின்மை ஏற்படலாம்

ஒன்பதாம் paaவ அதிபதி நின்றாள் இளையசகோதிரனுக்கு மனைவியின் அன்பு கிடைக்கும் பொதுநல மக்களால் விரும்புவான், ஜாதகனுக்கு பிதா தோஷம் சிறிது  வரலாம் . இருந்தாலும் பாகியாதிபதி யாக இருப்பதால் தனசெற்கை, ஆபரண சேர்கை, வேலையாள் உதவி, ஆண்மை விருத்தி, துணிவு கூடுதல் போன்றவை வரலாம் 

பத்தாம் பவ அதிபதி நின்றாள்  இளையசகொதிரன் அவமான படுவான், பல துன்பங்களை அனுபவிப்பான் ,ஜாதகனுக்கு தொழில் தேக்கம் வரலாம் ,பண முடை வரலாம், ஆனால் லக்ன சுபர்களாக இருந்தால் செல்வ சேர்கை ஏற்படலாம் 


பதினொன் பாவ அதிபதி நின்றாள் இளையசகோதிரனுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும், பேர் புகழ் உண்டாகும், ஜாதகனுக்கு ,மூத்த சகொதிரன் உதவி, அதிகாரம், புத்திர யோகம் கொஞ்சம் லாப குறைவு வரலாம். .


பன்னிரண்டாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் சகோதிர மேன்மை ஏற்படலாம். பிதுர், புத்திர தோஷம் வரலாம், ஜாதகனுக்கு திடீர் தனம் வரலாம் ,செலவுகள் குறைவாக செய்வார், சேமிக்கும் எண்ணம் ஏற்படும், வெளிநாட்டு யோகம் தடை பெரும், வேலைகாரர்களுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியது வரும், நகைகள் வாங்க அதிகம் செலவு செய்யலாம் சிற்றின்ப செலவுகள் அதிகமாகும், 

என்ன மாணவர்களே குழப்பமாக உள்ளதா, நன்றாக குலம்புங்கள் , குழம்பினாள் தெளிவு கிடைக்கும் ,உங்களுக்கு ஏன் ,aetharkku  என்ற ஆராய்ச்சி மனப்பான்மை varavendum . அன்பு maanavarkale இதை தான் புரிந்து கொள்ளுதல் என்பார்கள்  


அடுத்து நாலாம் பாவகத்தை நன்றாக பாப்போம் 



இந்து லக்னம்
இது ஒருவனின் செல்வ நிலையை அறிய பயன்படும் கணிதமாகும்.
  1. இந்து லக்னத்தில் உள்ள கோள்களின் திசா ,புத்தியில் செல்வ சேர்கை நிச்சயம் ஏற்படும்
  2. அந்த கோள் கெட்ட பாவக அதிபதியாக இருந்தாலும் ஏற்படும்
  3. இந்து லக்னத்தில் தீய கோள் இருந்தால் குறைந்த செல்வத்தை சேர்ப்பார்
  4. நற் கோள் இருந்தால் பெரும் செல்வத்தை சேர்ப்பார்
  5. இந்து லக்னத்தில் தீய கோள் உச்சம் பெற்று இருந்தால் பெரும் கோடீஸ்வரர் ஆவார்
  6. இந்து லக்னத்தில் உள்ள கோள்களின் திசை, புத்தி வராவிட்டால் இந்த பலன் நடக்காது
சரி ,இந்து லக்னத்தை கணிக்கும் முறை இப்போது பார்ப்போமா
அதற்க்கு முன் ஒவ்வொரு கிரகத்திற்குரிய களப்பரிமான எங்களை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
சூரியன் கலபரிமான எண் 30 
சந்திரன் 16 
செவ்வாய் 6 
புதன் 8 
குரு 10 
சுக்கிரன் 12 
சனி 1 
இது  நிலையானது ,நாபகம் வைத்துகொள்ளுங்கள்
  1. ஒருவரின் லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதியின் கலபரிமான எண்னை குறிக்கவேண்டும்
  2. அதே போல் ராசிக்கு ஒன்பதாம் அதிபதியின் கலபரிமான எண்னை குறித்துக்கொள்ளவேண்டும்
  3. இரண்டையும் கூட்டிக்கொள்ளவேண்டும்
  4. கூட்டி வந்த எண்னை 12 ஆல் வகுக்கவேண்டும்
  5. மீதி வரும்  எண்னை வைத்து பிறந்த ராசியில் இருந்து எண்ணி போடவேண்டும்
  6. அப்படி வரும் ராசியே இந்து லக்னமாகும்
  7. இந்த இந்து லக்னத்தில் உள்ள கிரகமே செல்வ யோகத்தை உருவாக்கும்
  8. நமது நடிகர் ரஜினி காந்த் ஜாதகம் சிம்ம லக்னம் ஆகும் ,அவர் ராசி மகரம் இந்து லக்ன கணித்தபடி இவரது இந்து லக்னம் கும்பம் ஆகும் அந்த கும்பத்தில் குரு உள்ளார் ,அந்த குரு திசை காலத்திலயே அவர் சூப்பர் ஸ்டார் ஆனார்

No comments:

Post a Comment