Monday, 25 February 2013

தங்கமான மருமகன் (அ) மருமகள்


தங்கமான மருமகன் () மருமகள்


பெற்றோரின் ஜாதகத்தில் 11-ல் குரு, புதன், சுக்கிரன், சந்திரன் இருந்தாலும், அவர்களை குரு பார்த்தாலும் அவர்களுக்கு அமைகிற மருமகன்-மருமகள் சொக்கதங்கமாக இருப்பார்கள். நாம் சொல்வதற்கு முன் செய்து முடிப்பார்கள். இப்படி அமைவது போன ஜென்ம புண்ணியம் என்றும் சொல்லலாம்.
சரி, 11-ல் சூரியன், சனி, ராகு, கேது செவ்வாய் போன்ற கிரகங்கள் அமைந்து, மருமகளோ-மருமகனோ தங்கள் மாமனார்-மாமியாரின் மனம் நோகும் படி நடந்து கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அவர்களுக்கு அதாவது அந்த மருமகளுக்கோ-மருமகனுக்கோ குழந்தை பிறந்து, அந்த குழந்தையின் (பேரன்()பேத்திஜாதகத்தில் லக்கினத்திற்கு 5-ம் இடத்தில் சுப கிரகம் இருந்தால், அதாவது புதன், சுக்கிரன், சந்திரன், குரு போன்ற சுப கிரகங்கள் அந்த குழந்தையின் ஜாதகத்தில் இருந்தால், மருமகளோ, மருமகனோ காலபோக்கில் தங்கள் மாமனார்-மாமியாரிடம் மரியாதையாக நடந்துக்கொள்ளும் தன்மை பெற்று விடுவார்கள். இதுதான் ஜாதக ரகசியம்.

No comments:

Post a Comment