Monday, 25 February 2013

ஒரு ஜிமெயிலுக்கு வரும் மின்னஞ்சலை மற்றொரு மின்னஞ்சலுக்கு Forward செய்ய

ஒரு ஜிமெயிலுக்கு வரும் மின்னஞ்சலை மற்றொரு மின்னஞ்சலுக்கு Forward செய்ய

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நபரும் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் கணக்குகளை பயன்படுத்துகின்றனர், ஆனால் எல்லா நேரங்களிலும் அனைத்து கணக்குகளையும் கையாள நேரம் இல்லாமல் போகலாம்.
இந்த வேளையில் ஒரு மின்னஞ்சல் கணக்கிற்கு வரும் செய்திகளை மற்றொரு மின்னஞ்சல் கணக்கிற்கு Forward செய்யலாம்.
இதற்கு முதலில் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை திறந்து கொள்ளுங்கள், இதன் வலது பக்க மூலையில் Setting என்பதை கிளிக் செய்யவும்.
இதில் Forwarding and POP/IMAP என்பதை கிளிக் செய்து, அதிலே உள்ள Add a forwarding Address என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
தற்போது இந்த மின்னஞ்சலுக்கு வரும் செய்திகளை எந்த மின்னஞ்சலுக்கு Forward செய்யப் போகின்றீர்களோ அதனை தரப்பட்ட இடத்தில் கொடுத்து Next என்பதை அழுத்தவும்.
அதன்பின் PROCEED என்பதனைக் கொடுத்து அடுத்து OK ஐக் கொடுங்கள்.
தற்போது நீங்கள் எந்த மின்னஞ்சலுக்கு செய்திகள் கிடைக்கப்பெற வேண்டுமோ, அதனை NEW TAP இல் அல்லது வேறு உலாவியில் திறந்து கொள்ளுங்கள்.
இவ் மின்னஞ்சலில் ஓர் இணைப்பு ஒன்று அனுப்பப்பட்டிருக்கும். இதனை கிளிக் செய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
சிலசமயம் இவ் இணைப்பு கிடைக்கப் பெற்றிருக்காவிடில் Re-Send Email என்பதை கிளிக் செய்யவும்.
அவ்வளவு தான், இனிமேல் உங்கள் விருப்பம் போல் மற்ற கணக்குக்கு வரும் செய்திகள் அனைத்தும் நீங்கள் விரும்பிய கணக்கிற்கு வரும்.
இவ் வசதியை மீண்டும் நிறுத்த வேண்டியேற்படின் Remove Address என்பதை கிளிக் செய்யுங்கள். தற்போது OK கொடுத்தால் போதும். இவ்வசதி நிறுத்தப்பட்டு விடும்.

No comments:

Post a Comment