Sunday, 26 May 2013

11 ம் வீடும் அதிர்ஷ்ட வாழ்க்கையும் !

11 ம் வீடும் அதிர்ஷ்ட வாழ்க்கையும் !
நீடித்த அதிர்ஷ்டம் அமைந்த ஜாதகங்கள் பற்றிய ஒரு சிந்தனை :


நீடித்த அதிர்ஷ்ட வாழ்வு ஒவ்வொரு மனிதரும் ஏக்கம் கொள்ள செய்யும் ஒரு வார்த்தை, இந்த அதிர்ஷ்ட வாழ்வினை எந்த ஜாதக அமைப்பை சேர்ந்தவர்கள் அனுபவிக்க இயலும்.


 
மிதுனம் , கன்னி , தனுசு , மீனம் ஆகிய லக்கன அமைப்பை கொண்டவர்களுக்கு நீடித்த அதிர்ஷ்டம் வழங்கும் 11  ம் வீடு சர ராசியில் அமையும்

 
இவ்வாறு அமைந்த ஜாதக அமைப்பை சேர்ந்தவர்கள் சுய  ஜாதகங்களில் 
இந்த 11  ம் வீடு 11  ம் வீட்டுடனோ, இலக்கணம் 11  ம் வீட்டுடனோ தொடர்பு பெறுமாயின் ) , நிச்சயம் நீடித்த அதிர்ஷ்ட வாழ்வினை பெறுவார் என்பதில் சிறிதேனு சந்தேகமே இல்லைஆனால் இந்த வீடுகளின் பலன்களை தற்பொழுது நடக்கும் திசை நடத்தினால் மட்டுமே முழு பலனை அனுபவிக்க இயலும் .


மேலும் ஜாதகர் எந்த வழியில் அதிர்ஷ்டங்களை அடைவார் என்று நிர்ணயம் செய்வதுதான் ஜோதிடனின் திறமை உள்ளது .


பொதுவாகவே  இலக்கணம் 11  ம் வீட்டுடனோ தொடர்பு பெறுமாயின் , ஜாதகர் ஓரளவு அதிர்ஷ்ட வாழ்வினை பெற இயலும் அது எந்த லக்கினம்
ஆனாலும் சரி.


அதிர்ஷ்ட அமைப்பை பற்றி கணிதம் செய்த பொழுது கிடைத்த 
தகவல்கள் :


1 )
மிதுன லக்கினத்திற்கு மேஷம் 11  ம் வீடாக வந்து சர நெருப்பு தத்துவமாக செயல் படும் பொழுது எந்தவகையில் அதிர்ஷ்ட வாழ்வினை பெறுவார் ஜாதகர் செய்யும் தொழில் பொறியியல் சம்பந்தம் பெற்று அதன் வழியில் நீடித்த அதிர்ஷ்டம் பெறுவார் ,

2 ) கன்னி லக்கினத்திற்கு கடகம் 11  ம் வீடாக வந்து சர நீர்த்ததுவமாக செயல்படும் பொழுது ஜாதகர்  தனது மன ஆற்றலை கொண்டு ( யோக நிலை மனோவசியம், மக்கள் வசியம்அதன் வழியில் நீடித்த அதிர்ஷ்டம் பெறுவார்.

3 ) தனுசு  லக்கினத்திற்கு துலாம் 11  ம் வீடாக வந்து சர காற்று தத்துவமாக செயல் படும் பொழுது, ஜாதகர் தனது அறிவை மூலதனமாக கொண்டு ( கமிஷன், போதனை , பேச்சு ) அதன் வழியில் நீடித்த அதிர்ஷ்டம் பெறுவார்.

 4  ) மீன லக்கினத்திற்கு மகரம் 11  ம் வீடாக வந்து சர மண் தத்துவமாக செயல் படும் பொழுது, ஜாதகர் மண் மனை வண்டி, வாகனம் ,சொத்து வழியில் நீடித்த அதிர்ஷ்டம் பெறுவார்.


இதுவெல்லாம் சிறு விளக்கம்  நீங்கள் புரிந்து கொள்வதற்காக மட்டும் . இதில் மேலும் பல விசயங்கள் உண்டு .



No comments:

Post a Comment