Sunday, 26 May 2013

மன சிதைவும் ஜாதக அமைப்பும்

மன சிதைவும் ஜாதக அமைப்பும்
எந்த ஒரு ஜாதகரும் தனது எண்ணங்களை செயல் வடிவமாக காணும் பொழுது அவர் அடையும் சந்தோசம் மன நிம்மதிக்கு அளவே கிடையாது , இப்படி ஜாதகர் அனைவரும் என்னும் எண்ணங்கள் எல்லோருக்கும் நிறைவேறுவது இல்லை , 100  சதவிகித மக்களில் 22  சதவிகித மக்கள் நினைக்கும் எண்ணங்களை செயல் வடிவமாக பெறுகிறார்கள்.

 மற்றவர்கள் கனவு மட்டுமே காண்கின்றனர் 22  சதவிகிதினரை கண்டு ஏக்க பெரு மூச்சுமட்டுமே விட முடிகிறது . இந்த 22  சதவிகித மக்கள் மட்டும் எப்படி நினைத்ததை சாதிக்க முடிகிறது ?

சுய ஜாதக அமைப்பில் ஒருவருக்கு லக்கினம் , மூன்றாம் வீடு , சந்திரன் 
இம் மூன்றும்  நல்ல நிலையில் ஜாதகத்தில் இருக்குமே ஆனால் , நிச்சயம் ஜாதகரின் எண்ணங்கள் 100  சதவிகிதம் செயல் வடிவம் காண மூடியும் . மேலும்  ஜாதகர் நினைக்கும் காரியங்கள் அனைத்தையும் சாதிக்கும் வல்லமை படைத்தவராக இருப்பார், மேலும் ஜாதகரின் எண்ணங்கள் வழிமை உடையதாக இருக்கும் .

மன நிலையை குறிக்கும் மூன்றாம் வீடு ஜாதகர் எடுக்கும் முயற்ச்சி , மற்றும் மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் திறமை , இனிமையாக பேசி தமது கருத்தை சபையில் எடுத்து வைக்கும் திறன் ஆகியவை இந்த மூன்றாம் விடுகளின் வழியே செயல் படும் . சக மனிதரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறனும் இந்த மூன்றாம் வீட்டில் இருந்து தெளிவாக தெரிந்து கொள்ள  இயலும் .

லக்கினம் , மூன்றாம் வீடு , சந்திரன் இம் மூன்றும்  நல்ல நிலையில் ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே ஜாதகரால் மனதை ஒரு நிலை படுத்த   இயலும், மேலும் மன ஆற்றல் மிகுதியாக ஜாதகரிடம் காணப்படும்

புலன்கள் வழியே ஜாதகர் தனது ஜீவ சக்தியை செலவு மற்றும் விரையம் செய்யாமல் , பாதுகாக்க நிச்சயம்  லக்கினம் , மூன்றாம் வீடு , சந்திரன் இம் மூன்றும்  நல்ல நிலையில் ஜாதகத்தில்இருக்க வேண்டும் . மேலும் புலன் அடக்கம் ஜாதகருக்கு இயற்கையாகவே அமைந்து விடும் .

மற்றவர்களின் உள் மனதில் நினைப்பதை ஜாதகரால் எளிதில் தெரிந்துகொள்ள, மற்றவர்களுக்கு ஏற்றார் போல் தமது எண்ணங்களை சீர்படுத்தி கொள்ள இந்த அமைப்பு தேவை

இந்த அமைப்புகள் ஜாதகருக்கு பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்களுக்கு ஒரு அளவே கிடையாது மிக விரைவாக போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிடும் நபர்கள் அனைவரும் இந்த அமைப்பு பாதிக்க பட்டவர்களே , மேலும் பேய் , பிசாசு , பில்லிசூன்யம் என்று தனது மனதை தானே கெடுத்துக்கொண்டு மற்றவர்களையும் படாத பாடு படுத்தி விடுவார்கள்


மொத்தத்தில் குடும்பத்தில் இருக்கும் ஆணாக இருந்தால் குடி பழக்கம் , தவறான தொடர்புகளால் மன நிம்மதி இழப்பு , பொருள் இழப்பு போன்ற நிலைக்கு தள்ளி விடுகிறதுபெண்களாக இருந்தால் மன நோய் , மன சிதைவு , பேய் , பிசாசு என்று சொல்லிக்கொண்டு தனது மனதை தானே கெடுத்துக்கொண்டு , குடும்ப நிம்மதியையும் சீர்குலைத்து விடும் தன்மை ஏற்ப்படும் .

இந்த நிலையில் உள்ள ஆண் பெண் அனைவருக்கும் தேவையானதுகுடும்பத்தாரின் அன்பான வார்த்தைகளும் , ஆதரவும் இருந்தால் நிச்சயம் அவர்கள் இந்த நிலையில் இருந்து வெகு விரைவில் மீண்டு விடும் வாய்ப்பு அதிகம்

இதில் அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டியது  லக்கினம் , மூன்றாம் வீடு , இந்த இரு வீடுகளிலும் வக்கராக கிரகங்கள் இருந்தால், எவ்வளவு சீக்கிரம் அந்த கிரகங்களுக்கு வக்கராக நிவர்த்தி செய்கிறாரோ அவ்வளவு நன்மை தரும்.  

ஜாதகர் வக்கராக நிவர்த்தி பெற உலகத்திலேயே ஒரே இடம் தான் உண்டு.  

அது  தாய் வக்கிரக காளி அம்மன் குடிகொண்டு வரும்  பக்தர்களுக்கு அனைவருக்கும் சகல நலன்களையும் வாரி வழங்கி கொண்டு இருக்கும் 
திரு வக்கரை  எனும் திரு தளம் ஒன்றுதான்இங்கு வந்து வக்கராக நிவர்த்தி பெறுவது  ஜாதகருக்கு சகல யோகங்களையும் மன நிம்மதியையும், நினைக்கும் காரியங்களை  மனம் போல் நடக்கும் அதிசயத்தையும் காண முடியும், ஒரு முறை வந்தவர்கள்  தொடர்ந்து வருவது  ஆச்சரியமான விஷயம் .



No comments:

Post a Comment