Sunday, 26 May 2013

வாழ்வில் கல்வி , தொழில், திருமணம் சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும்

வாழ்வில் கல்வி , தொழில், திருமணம் சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும்
வாழ்வில் கல்வி , தொழில், திருமணம் சிறப்பாக அமைய ஒவ்வொரு ஜாதகரும் செய்ய வேண்டி மிக முக்கியமான கடமைகள் பின்வருமாறு :

ஜாதகர் தமது பெற்றோரிடம் வருடம் ஒரு முறையாவது ஆசிர்வாதம்
( ஜாதகர் எங்கு இருந்தாலும் ) பெறுவதுஜாதகத்தில் உள்ள வீடுகளின் பலன்களை விருத்தி செய்யும். மேலும் அவர்களது மனம் சந்தோசம் பெறுமாறு நடந்து கொள்வது ஜீவன விருத்தி தரும் .

தமது குல தெய்வ வழிபாட்டினை வருடம் தவறாமல் ஆடி , புரட்டாசி , தை அமாவாசைகளில் செய்து வருவது, ஜாதகரின் அறிவுத்திறனையும் , நல்ல திருமண வாழ்க்கையினையும் அமைத்து தரும் , ஜாதகரை பெற்ற தாய்க்கு பிறகு அவரது நல வாழ்க்கையில் அதிக அக்கறை மற்றும் உரிமை உள்ள, ஒருவர்தான் அவரது குல தெய்வம் .

 
எனவே குல தெய்வ வழிபாடு செய்யாமல் ஜாதகர் எந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தாலும்முழு பலன் கிடைப்பதில்லை. எனவே வருடம் ஒரு முறையாவது தமது குல தெய்வ வழிபாடு செய்து, முன்பின் தெரியாத ஒரு இருபது நபருக்காவது அண்ணதானம் செய்வது ஜாதகரின் கல்வி , வாழ்க்கைதுணையை சிறப்பாக தேர்ந்தெடுக்க வழி வகுக்கும்
மேலும் ஜாதகர் தமது முன்னோர்களுக்கு, செய்ய வேண்டிய கடமைகளை
 ( பித்ரு கடமை ) வருடம் தவறாமல் (கடலில் செய்வது நலம் தரும் ) செய்வது  பரிபூரண தொழில் வளர்ச்சியும் , சந்ததி விருத்தியும் வாரி வழங்கும். மேலும் ஜாதகருக்கு ஏற்ப்படும் இழப்புகளையும் , நஷ்டங்களையும் தடுக்கும் தன்மை இதற்க்கு உண்டு , வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது உங்களுக்கு பாதுகாப்பாக வழி நடத்தும் தன்மை பித்ரு கடமை செய்வதால், கிடைக்க பெறலாம் .

மாற்று திறன் வாய்ந்தவர்களுக்கு தம்மால் இயன்ற அளவிற்கு பொருள் தானமோ , அண்ணதானமோ, செய்வது ஜாதகரின் தொழில் வளர்ச்சி மற்றும் கல்வி நிலையில் தடையில்லாத, அமைப்பை உருவாக்கும் , ஜாதகரின் ஆயுளை  விருத்தி செய்யும்

 
ஜாதகர் கல்வி நிலையில் மேன்மை பெற, பிராமண தர்மம் செய்வது கல்வியிலும் சகல கலைகளிலும் தடையில்லாத முன்னேற்றம் பெற உதவும் , பிராமண தர்மம் செய்யும் பொழுது ஜாதகர் பிராமணரை தமது குருவாக, பாவித்து  தர்மம் செய்வது , அதிக பலன்களை வழங்கும்.

குல தெய்வ வழிபாடு , பித்ரு கடமை செய்யும் பொழுது ஜாதகரே செய்வது 100  சதவிகித பலன் தரும்.

பசு போன்ற நான்கு கால் ஜீவன்களுக்கு ஜாதகர் தம்மால் ஆனா உணவுகளையோ  அல்லது பழங்களையோ தருவது ஜாதகருக்கு, ஜீவன மேன்மை மற்றும் இல்லற வாழ்க்கை விரைவாகவும் , சிறப்பாகவும் அமைய வழி கிடைக்கும் .

சூரிய நமஸ்காரம் உத்தம வேளையில்   ஜாதகர் அனுதினமும் செய்துவருவது சகல யோகங்களையும் , அனைத்து அதிர்ஷ்டங்களையும் தரும் என்பது கண்கூடாக கண்ட உண்மை ,   சூரிய நமஸ்காரம் உத்தம வேளையில்  தினமும் செய்து வருபவர்களுக்கு நவகிரகங்களின் அருளாசி எப்பொழுது கிடைத்துக்கொண்டே இருக்கும் என்பது உண்மை .


இந்த அமைப்பை அனைவரும் வாழ்வில் கடைப்பிடித்து சகல யோகங்களையும் பெற்று நீண்ட அதிர்ஷ்டமுடன் வாழ்வாங்கு வாழ்க .


No comments:

Post a Comment