Saturday, 25 May 2013

தோஷம் பற்றிய விளக்கம் தேவை?


தோஷம் பற்றிய விளக்கம் தேவை?
பொதுவாக ஜாதக பார்க்கும் ஜோதிடர்கள் இந்த ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம்  உண்டு லக்கனத்தில் ராகு , ஏழாம் வீட்டில் கேது என்று பதில் சொல்வார்கள் .


ஆனால் எபிமெரிஸ் கணிதப்படி ஜாதக நிலையை கணிதம் செய்யும் பொழுது , ராகு, கேது இரு கிரகங்களும் , மிதுனத்தில் உள்ள 12  ம் வீட்டில் ராகுவும் , தனுசுவில் உள்ள 6   ம் வீட்டில் கேதுவும் அமர்ந்து

 ( 
ஜாதகருக்கு லக்கினம் ஆரம்பிப்பது மிதுனத்தில் 89  .05 .46 பாகை முதல் ரிஷபத்தில் 115 . 42 . 12 வரை )

ராகு இருப்பது மிதுனத்தில் உள்ள 12  ம் வீடு 78  . 46  . 48 பாகையில் )   


அந்த வீடுகளின் பலனை முழுவதுமாக தான் ஏற்று கொண்டு பலனை தந்து கொண்டு இருக்கின்றனர் , இவர்கள் இருவரும் சம்பந்த பட்ட வீடுகளுக்கு நன்மை செய்கின்றணர  அல்லது தீமை செய்கின்றணர என்று கணிதம் செய்வதே ஜோதிடத்தில் திறமை .

 
இதில் மிதுனத்தில் உள்ள ராகு 12  ம் வீட்டுக்கு  100  சதவிகித நன்மையை மட்டுமே ( 12  ம் பாவத்திற்கு உண்டான பலனை தானே  ஏற்றுக்கொண்டு ) சுய ஜாதகத்தில் செய்து கொண்டு இருக்கின்றார் ஆனால் தனுசும் வீட்டில் அமர்ந்த கேது 6 ம் வீட்டுக்கு  100  சதவிகித தீமையை மட்டுமே 
( 6   
ம் பாவத்திற்கு உண்டான பலனை தானே  ஏற்றுக்கொண்டு ) செய்துகொண்டு  இருக்கிறார் , இதில் மற்ற கிரகங்களை பற்றி நாம் கவனத்தில் கொள்ள தேவை இல்லை .

ஒரு ஜாதகர் எந்த லக்கினம் ஆனாலும் லக்கினத்தில் ராகுவோ , கேதுவோ  அமர்வது அந்த லக்கினத்திற்கு 100  சதவிகிதம் நன்மையே செய்யும், அல்லது அமரும் பாவகத்தின் பலனை முழுவதையும் தானே ஏற்றுக்கொண்டு நன்மையோ தீமையோ சரியாக செய்யும்.

மேலும் ஒரு ஜாதகத்தில் பலனை தெரிந்து கொள்வதற்கு ஜாதகங்களில்  உள்ள பாவகங்களின் நிலை எப்படி உள்ளது என்றும் , தற்பொழுது நடக்கும் திசை , புத்தி , அந்தரம், சூட்சமம் , ஆகியன எந்த பாவக பலனை நடத்துகிறது என்று தெரிந்தாலே போதும் , மேலும் அந்த பவகங்களுடன் தற்பொழுது உள்ள கோட்சார கிரகங்கள் எவ்வித பலனை தருகின்றது என்பதை கவனித்தால் மட்டுமே போதும் ஜாதக பலனை துல்லியமாக சொல்லிவிட முடியும் .

எடுத்து காட்டாக மேலே காணப்படும்  ஜாதகத்தில் தற்பொழுது நடக்கும் செவ்வாய் திசைம் வீட்டு பலனை நடத்துகிறதுநாம் ஜாதக பலனை சொல்லும் பொழுது இந்த 7  ம் வீட்டுடன்  தற்பொழுது கோட்சார ரீதியாக சமபந்தம் பெரும் கிரகம் நன்மையை செய்கிறதா அல்லது தீமையை செய்கிறதா என்று கணிதம் செய்தால் மட்டும் போதும் , ஏனெனில் ஜாதகருக்கு 2014  ஆண்டு வரை நடக்கும் செவ்வாய் திசைம் வீட்டு பலனை மட்டுமே நடத்தும் . மற்ற வீடுகளின் பலன் நடக்காது .

ஆனால் மற்ற ஜோதிடர்கள் சந்திர ராசி ரீதியாக சனி பெயர்ச்சி என்றும்குரு பெயர்ச்சி என்றும் சொல்லிதானும் குழம்பி , ஜாதகரையும் குழப்பிவிடுவார்கள் . மேலும்  ஜோதிடருக்கு நடக்கும் செவ்வாய் திசை  என்ன பலனை செய்கிறது என்று தெரியாமல்பழைய புத்தகங்களில் எழுதி உள்ள பொது பலனை சொல்லி தப்பித்துகொள்ளும் தன்மை ஏற்ப்படும் .

இந்த ஜாதக ரீதியாக தற்பொழுது நடக்கும் செவ்வாய் திசை களத்திர வழியில் இருந்து 200  சதவிகதம் கெடுதலான பலனையே ஜாதகருக்கு வழங்கி கொண்டு  இருக்கிறதுமேலும் உபய லக்கினத்திற்கும் வீடு பாதக ஸ்தானம் ஆகவே 200  சதவிகதம் கெடுதலான பலனையேதரும்சம்பந்த பட்ட ராசி நெருப்பு தத்துவமாக இருப்பதால் , ஜாதகர் முன் பின் யோசிக்காமல் தானே தனக்கு கெடுதலை செய்து கொள்வார் , சுய கட்டுப்பாடு இருக்காது , சுய சிந்தனை வேலை செய்யாது .

No comments:

Post a Comment