Sunday, 26 May 2013

நட்சத்திர பொருத்தமும் , ஜாதக பொருத்தமும் திருமண வாழ்க்கையும் !

நட்சத்திர பொருத்தமும் , ஜாதக பொருத்தமும் திருமண வாழ்க்கையும் !
 சகோதரிக்கு வணக்கம் தங்களது ஜாதகரீதியாக இருவருக்கும் நட்சத்திர பொருத்தம் என்னவோ 10 /10 உண்டு , ஆனால் ஜாதக ரீதியான 
பொருத்தம் 20  சதவிகதம் மட்டுமே உள்ளது .

 
மேலும் தங்களது இருவரது ஜாதக ரீதியாகவும் குடும்ப ஸ்தானம் எனும்ம் வீடு 100  சதவிகிதம் பாதிக்க பட்டுள்ளது மேலும் தங்களது கணவர் ஜாதக ரீதியாக களத்திர பாவகம் எனும் ஏழாம் வீடு பாதக ஸ்தானம் எனும் 11  ம் வீட்டுடன் தொடர்பு , எனவே அவரிடம் குடும்பம் நடத்துவது என்பது நிச்சயம் உங்களால் இயலாது , உங்களுக்குள் பிரிவு ஏற்ப்பட காரணம் உங்களது ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் பாதிக்க பட்டதும்அவரது ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம்  மற்றும் களத்திர ஸ்தானம்  எனும் இரு வீடுகளும் பாதிக்க பட்டதுமே காரணம் .


ஆனால் நீங்கள் மறுமணம் செய்துகொண்டால் இல்லற வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக அமையும் பிரிவு என்பதே இல்லை . உங்களது வாழ்வில் சந்தோசம் நிறைய இறை அருள் கருணை செய்யட்டும் . மறுமணம் செய்துகொள்வதற்கு முன் ஒரு சரியான ஜோதிடரிடம் பொருத்தம் பார்த்துகொள் , அல்லது நீ விரும்புபவரை திருமணம் செய்துகொள்.

வாழ்க வளமுடன் .

திருமணம் செய்து கொள்ளும் முன்  ஜாதக ரீதியாக  கவனிக்க  வேண்டியவை  :


திருமணம் செய்துகொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் ஜாதக ரீதியாக நட்சத்திரம் பொருத்தம் , ராகு கேது தோஷம் , செவ்வாய் தோஷம் என்று சொல்லிஅவர்கள் வாழ்க்கையில் பல ஜோதிடர்கள்  மண்ணை அள்ளி போடுவதை தயவு செய்து சம்பந்தபட்ட ஆண் பெண்ணின் பெற்றோர்கள் உணர்ந்து கொள்வது நலம் தரும் .

மேலும்  ஒருவரது ஜாதகத்தில்  குடும்ப ஸ்தானம்  மற்றும் களத்திர ஸ்தானம் எனும் இருவீடுகளும்100  சதவிகிதம்   பாதிக்க பட்ட வதுவையோ , வரனையோ நட்சத்திர பொருத்தம் நன்றாக இருக்கிறது என்று தேர்ந்தெடுத்தால்நிச்சயம் திருமண வாழ்க்கை நிலைக்க வாய்ப்பு இல்லாமல் போகும் எனும் விஷயத்தை புரிந்துகொண்டு தமது குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்து தாருங்கள் .
அதே சமயம் நட்சத்திர பொருத்தம் இல்லை என்றாலும்ரச்சு பொருத்தம் உட்பட ) சுய ஜாதகத்தில்குடும்ப ஸ்தானம்  மற்றும் களத்திர ஸ்தானம் எனும் இருவீடுகளும் 100  சதவிகிதம் நன்றாக இருந்தால் நிச்சயம் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை

No comments:

Post a Comment