Friday 31 May 2013

கோயிலுக்குச் செல்வது ஏன்?

கோயிலுக்குச் செல்வது ஏன்?
Temple images
கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பார்கள். ஆத்திகமோ, நாத்திகமோ அவரவர் இஷ்டம். ஆனால், யாராயிருந்தாலும் கோயிலுக்குப் போனால் பலனுண்டு என்பதற்கு அறிவியல் காரணம் உண்டு. ஆகமவிதிப்படி கட்டிய கோயில்களில் ஓம் என்ற பிரணவ மந்திரம் காற்று மண்டலத்தில் அதிர்வுறும் விதத்தில் அமைந்திருக்கும். ஒவ்வொரு அணுவிலும் அந்த மந்திர ஒலி பெரிய அளவில் கலந்திருக்கும். கருவறையில் இருக்கும் விக்ரஹத்திற்கு ஆறுகால பூஜையும், அபிஷேகமும் நடத்தும் போது, காற்று மண்டலத்தில் எதிர்மின்னோட்டம் அதிகரிப்பதோடு, காற்றுமண்டலம் ஈரப்பதம் அடைகிறது.
இந்த மின்னோட்டம் பிராணவாயுவுடன் கலக்கிறது. அதை சுவாசிக்கும் போது இதயத்துடிப்பு, சீராகி ஆரோக்கியம் மேம்படுகிறது. இயற்கை வளம் மிக்க ஆறு, மலை, கடல், அருவி, வனம், சோலை ஆகிய பகுதிகளில் எதிர் மின்னோட்டம் அதிகமாக இருப்பதால் தான், அங்கு செல்லும்போது நமக்கு புத்துணர்வு உண்டாகிறது. அங்கு தரப்படும் பிரசாதம் மூலம், உடலுக்கு சக்தி கிடைக்கிறது. இதை அனுசரித்துதான் அவ்வைப்பாட்டி ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று அழகாக சொல்லி வைத்தாள்

No comments:

Post a Comment