Friday, 7 June 2013

பிதுர்தோஷம் போக்குபவர்!

பிதுர்தோஷம் போக்குபவர்!

சீதையை இலங்கைக்குத் தூக்கிச் சென்றபோது ஜடாயு என்னும் பறவை ராவணனைத் தடுத்தது. ராவணன் கோபத்துடன் அதன் இறகை வெட்டி வீழ்த்தினான். இந்த தகவலை ராமனிடம் தெரிவித்த ஜடாயு இறந்து விட்டது. ராமன், ஜடாயுவைத் தன் தந்தையாக கருதி ஈமக்கிரியைகளைச் செய்தார். பெற்ற தந்தை தசரதருக்கு கூட, இந்த பாக்கியம் ராமன் மூலம் கிடைக்கவில்லை.  ஜடாயுவிற்கு அந்திமக்கிரியை செய்யவேண்டிய பொறுப்பில் இருந்தவர் சம்பாதி என்னும் கழுகு முனிவர். இவர், தன் கடமையைச் செய்யாததற்கு மனம் வருந்தி, ராமனிடம் மன்னிப்பு வேண்டினார். அந்தப் பாவம் தீர, முருகனை வணங்கும்படி ராமர் அவருக்கு வழிகாட்டினர்.  சம்பாதி முனிவர் வழிபட்ட தலம் கழுகுமலை. இத்தலம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ளது. இக்கோயில் தூண்களில் ராம, ஆஞ்சநேயர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மூலவர் முருகன் ஆறுகரங்களுடன் மயில் வாகனத்தில் வீற்றிருக்கிறார். பொதுவாக வலப்பக்கம் இருக்கின்ற மயில், இங்கு இடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. கழுகுமலை முருகனை வழிபட்டால் முன்னோர் பாவம், பிதுர்தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்

1 comment:

  1. நவகோள் வசிய யந்திரம்


    ஜாதகத்தில் கோள்கள் எப்படி இருந்தாலும் அவைகள் வசபடுத்தி இது நன்மைகளை பெற்றுத்தரும் .
    இவை அனைத்தும் நம் பீடத்தில் கிடைக்கும்
    வாருங்கள் நன்மையை மட்டும் பெற்று செல்லவும்

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
    தனிப்பெரும் கருணை ஜோதி அருட்பெரும் ஜோதி

    நன்றி
    சாரம் அடிகள்
    94430 87944
    http://saramadikal.blogspot.in/2013/06/blog-post_1491.html

    ReplyDelete