Wednesday, 12 June 2013

மாதவிடாய் மறையும் காலம்

மாதவிடாய் மறையும் காலம்



மங்கையராக பிறப்பதற்கே, நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றார் பாரதியார்.
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை, அறிவறிந்த மக்கட் பேறு அல்ல பிற என்றார் திருவள்ளுவர்.
இல்வாழ்வான் பெறும் பேறுகளில் அறிய வேண்டுவற்றை அறியவல்ல நன்மக்களை பெறுவது அல்லாமல் வேறு எந்த பேற்றினையும் யாம் மதித்துப் போற்றுவதில்லை என்பது இந்த குறளின் உரை.
பெண்களின் பெரும் பொறுப்பு குழந்தைப் பேறு, உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெண்கள் சமாளிக்க வேண்டிய பெரும் பொறுப்பு இது தான். இதனால், பெண்கள் ஆண்களைவிட அதிக காலம் வாழ்ந்தாலும், பல பிரச்சனைகள், வேதனை, சங்கடங்களை சந்திக்க நேரிடுகிறது. இதனால் தான் மென்மையான பெண்களுக்கு மன உறுதியையும், பொறுமையையும், தாங்கும் சக்தியையும் இறைவன் அளித்திருக்கிறார் போலும்.
பூப்பு
பூப்பு என்பது சிறுமிகள் பெண்களாகும் காலகட்டம். இது பொதுவாக 10-16 வயதுக்குள் ஏற்படும். எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பெண்ணுக்கு பெண் மாறுபடும். எனவே, பூப்பு காலம் தொடங்கும் வயதைப் பற்றி கவலை வேண்டாம். பெண்ணின் உடல் வாகு, ஆரோக்கியம் இதை முடிவு செய்யும்.
பூப்பு காலத்தின் உடல்நிலை மாற்றங்கள்
பூப்பு ஏற்படுவது பிட்யூடரி சுரப்பி, சுரக்கும் இரண்டு ஹார்மோன்களால் தான். ஹார்மோன் சினை முட்டை உற்பத்தியை ஊக்குவிக்கும் ஹார்மோன் மற்றொன்று ஃபாலிக்கில் சிட்டிஇம்யூலேடிங் ஹார்மோன் ஓவரியின் ஃபாலிக்கில் களை ஊக்குவிக்கும் ஹார்மோன்கள் இவற்றால் மார்பகம், ஓவரியில், யோனி, கர்பப்பை இவைகள் பெரிதாகி வளர்ச்சி அடைகின்றன. முதலில் மார்பக வளர்ச்சி ஆரம்பமாகும். மார்பக வளர்ச்சிக்கும், மாதவிடாய் ஏற்படும் காலத்துக்கும் நடுவில் சாதாரணமாக 21/2 வருடங்கள் ஆகலாம். பெண்கள் உடல் எடை கூடும்.
மாதவிடாய்
மாதவிடாய் என்பது உடலானது கொஞ்சம் திரவத்தை ரத்தம் உட்பட யோனியின் மூலம் வெளியேற்றுவது. ஒவ்வொரு மாதமும் ஒரு மென்மையான படலம் பெண்ணின் கருப்பைக்குள் தடிமனாகும். கர்ப்பமடைந்தால் வளரும் கருப்பைக்கு ஊட்டமளித்து பாதுகாக்க இது தேவைப்படும். கர்ப்பமடையாவிட்டால் தேவையில்லை. எல்லாம் யோனி வழியாக வெளியேறிவிடும்.
இது தான் மாதவிடாய் என்பது. இது குறைவில்லாத, ஆரோக்கியமான உடலுக்கு அடையாளம். மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் இயற்கையாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஒன்று. அதில் கவலைப்படவோ இல்லை கூச்சப்படவோ ஒன்றுமில்லை.
பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்
முதல் மாதவிடாய் எல்லா பெண்களுக்கு 10 லிருந்து 16 வயதுக்குள் வரும். இந்த வயதில் தான் வரவேண்டும் என்று எந்த நியதியும் கிடையாது. உடல் எப்போது தயாராகிறதோ அப்போது தான் வரும்.
பெரும்பாலான பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் வரும்.
சராசரி 28 நாட்களுக்கு ஒரு முறை – இது சிலருக்கு கூடவோ, குறையவோ செய்யலாம். எப்படியிருந்தாலும் 20-30 நாட்கள் சாதாரணம்.
பொதுவாக உதிரப்போக்கு 3 முதல் 7 நாட்கள் வரை இருக்கும். நீங்கள் கர்ப்பமடைந்தால் மட்டுமே இந்த சுழற்சி மாறும். இல்லையெனில் மாதவிடாய் வற்றும் வரை ஒவ்வொரு மாதமும் இது நடைபெறும்.

மாதவிடாயின் சுழற்சி, பிட்யூடரி சுரப்பி சுரக்கும் இரு ஹார்மோன்களாலும், ஓவரி சுரக்கும் பெண் பாலுணர்வு ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் இவைகளால் நடத்தப்படுகிறது.
உடல் மாற்றங்கள்
தசை பிடிப்பு, ஒப்புசம், மிருதுவான மார்புகள், தலைவலி, முதுகுவலி, தலைமரத்துப் போதல் போன்றவை.
மனோரீதியான பாதிப்புகள்
படபடப்பு, மனநிலையில் மாற்றங்கள் மனச்சோர்வு இவைகள் ஏற்படலாம். இந்த மாதவிடாய் கால விளைவுகள் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களாலும் உண்டாகும். தவிர கொழுப்பு சத்து உணவுகள், சர்க்கரை இவைகளாலும் உண்டாகிறது. அதுவும் உங்கள் உடல் பருமனாக இருந்தால் இந்த உணவு வகைகளை தவிர்க்கவும். நிறைய பழங்கள், காய்கறிகள், தானியங்கள், சத்துள்ள பயறு வகைகள் சாப்பிடவும். தினசரி 6-8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். உடற்பயிற்சி இந்த சமயத்தில் செய்யக்கூடாது என்று நினைக்கலாம். ஆனால் உடற்பயிற்சி தேவை. உடற்பயிற்சி ஆக்ஸிஜன், ரத்த ஓட்டங்களுக்கு உதவும். இதனால் தசைபிடிப்பு குறையும்.
பெண்களுக்கே உரிய பிரச்சனைகள்
அமினோரோஹியா
இந்த நோய், மாதவிடாயே வராமல் போவது, பெண்கள் பூப்படையாமல் இருப்பது அப்படி வந்தாலும் சரிவர உதிரப்போக்கு இல்லாதது இவற்றை குறிக்கும்.
காரணங்கள்
பிறவிக்கோளாறு – கர்பப்பை, ஃபாலோபியன் டியூப் எனப்படும் உறுப்புகளின் வளர்ச்சியின்மை, குரோமோசான் குறைபாடுகள்.
சோகை
ஷயரோகம், நாட்பட்ட மலேரியா போன்ற ஜுரங்கள்.
மூளையின் ஒரு பாகமான ஹைபோதாலமஸ் குறைபாடுகள்.
பிட்யூடரி, தைராய்டு, ஓவரியன் ஹார்மோன்கள் சரியான அளவில் சுரக்காதது.
மனநோய்கள், மனச்சோர்வு
ஒல்லியான உடல்வாகு கொண்ட பெண்கள் ஆரோக்கியம், உடல் சக்தி, குறைபாடுகள் அனோரெக்ஷியா நர்வோசா பசியின்மை – ஒரு வித மனக்கோளாறால் உணவு உண்ணாமை, குறைவாக உண்ணுதல்.
அதிக ஸ்ட்ரெஸ், அதிகமான, தவறான உடற்பயிற்சிகள்.
இந்த வியாதியின் முதல் கட்டம், பூப்படைவது தடைப்பட்டு,
மாதவிடாய் தோன்றாது. இரண்டாம் கட்டத்தில், மாதவிடாய் தொடங்கி உடனே நின்றுவிடுவது.
பெண் நோய்களுக்கு வீட்டு வைத்தியம்
இஞ்சித் துண்டை பொடித்து, தண்ணீரில் சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, சர்க்கரை சேர்த்து தினமும் உணவுக்கு பின் 3 வேளை குடித்து வரவும்.
வாழைப் பூ- தொன்று தொட்டு, வாழைப் பூ அதிக உதிரப்போக்கு கட்டுப்படுத்த பயன்படுத்தி வரப்பட்டிருக்கிறது. வாழைப்பூவை சமைத்து, தயிருடன் சாப்பிட புரோஜெஸ்டிரோன் அதிகரித்து ரத்தப்போக்கை குறைக்கும்.
எள் விதைகளை அரை டீஸ்பூன் அளவு எடுத்து, வெந்நீருடன் தினம் 2 வேளை குடித்தால் அடிவயிறு வலி குறையும். சுடு தண்ணீரில் எள்ளை சேர்த்து, அதில் இடுப்பு வரை உட்கார்ந்து இந்த எள் தண்ணீரை குடித்தால் நல்லது.
கொத்தமல்லி விதைகளும் மாதவிடாய் கோளாறுகளுக்கு ஏற்றவை. 6 கிராம் கொத்தமல்லி விதைகளை அரைலிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பாதி தண்ணீர் ஆவியானதும், கற்கண்டு கலந்து, சூடாக குடிக்கவும். இதனால் அதிக உதிரப்போக்கு கட்டுப்படும்.
இளசான மாதுளம் இலைகள் 7 இலைகள் எடுத்து, ஏழு அரிசியுடன் தானியத்துடன் சேர்த்து அரைத்து, தினமும் 2 வேளை ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால் அதிக உதிரப்போக்கு ஏறுமாறான மாதவிடாய் இவற்றுக்கு நல்லது.
பூப்படைதல் – வீட்டு வைத்தியம்
மெல்லிய, இளைத்த பலவீனமான பெண்களுக்கு, வெல்லம் கலந்து செய்யப்பட்ட எள் உருண்டைகள் தினமும் மதிய உணவுடன் கொடுக்கவும். இது பூப்படைவதை உண்டாக்கும். மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும். எள் டிகாக்ஷன் குடிப்பதும் பூப்படைய உதவும். இந்த எள்ளுருண்டைகள் இளம் பெண்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுக்கவே கூடாது.
ஒரு மேஜைக்கரண்டி பாலில் குங்குமப்பூ கரைத்து குடித்து வருவது பலவீனமான, வளர்ச்சியில்லா பெண்களுக்கு உதவும்.
கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, வெந்தய இலைகள் இவற்றால் செய்த ‘சட்னி’ சாப்பிட, இளம்பெண்கள் முழு வளர்ச்சியடைய உதவும். புதினா கர்பப்பைக்கு ஒரு டானிக். கீரைகள் சோகைக்கும் நல்லது.
வலியுடன் கூடிய மாதப்போக்கு
வெண்டைக்காய் 100 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் 20 நிமிடம் கொதிக்க வைத்து, வடிகட்டி வைக்கவும். இதில் சர்க்கரை சேர்த்து 60-90 மி.லி. அடிக்கடி குடித்து வருவது நல்லது.
யோனியை சுத்தப்படுத்தும் முறையில், வெந்தயம், கொய்யா இலைகள் இவற்றை கலந்து உபயோகித்தால் வெள்ளை போதலை குறைக்கும். சுடு தண்ணீரால் சுத்திகரித்தாலே நல்லது.
இந்த முறையை மருத்துவரின் அறிவுரைப்படி செய்யவேண்டும்.
சில ஆயுர்வேத மூலிகைகள்
அசோகம், லோத்ரா, நிலத்துத்தி, நெரிஞ்சி, சீமை சடவாரி, கொட்பிணி, முகராட்டை கீரை, விபூர்ணம் நெல்லி, ஆடுதின்னாபாலை, கற்றாழை, கருஞ்சீரகம், பிரண்டை, எள், கருவேலம், ஹரீத்ரா, ஆமணக்கு, நன்னாரி.
சில குறிப்புகள்
பிஎம்எஸ் எனும் மாதவிடாய் கால விளைவுகளால், பாதிக்கப்படும் பெண்களுக்கு, அவர்களுக்கு உள்ள இதர வியாதிகளின் தாக்கம் அதிகமாகும்.
பிஎம்எஸ் உள்ள இளவயது பெண்களுக்கு, வலியுடன் கூடிய மாதப்போக்கு ஏற்படும்.
கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ள உணவுகள் பிஎம்எஸ் பிரச்சனையை கட்டுப்படுத்தும். கால்சியம் நிறைந்த உணவு – பால், சீஸ் – கால்சியத்தை உடல் கிரகிக்க, கூட விட்டமின் டி யும் தேவை. மெக்னீசியம் கீரைகளில் கிடைக்கும்.
பிஎம்எஸ் கிசிச்சையாக அதிக அளவு விட்டமின் பி 6 எடுத்துக் கொண்டால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும்.
பெண்களில் பருவமடையும் முன் ஏற்படும் உதிரப்போக்கு மற்றும் மெனோபாஸீக்கு பிறகு ஏற்படும் உதிரப்போக்கு அபாயமானது. உடனே டாக்டரிடம் செல்லவும்.
ஹார்மோன் கோளாறுகள் பெண்களின் அதிக உதிரப்போக்குக்கு காரணம்.
பாலூட்டும் தாய்மார்களுக்கு கால்சியம் அதிகமாக தேவைப்படும்.
பிரசவத்திற்கு பின் ஒரு பெண்மணி 1/2 லிட்டர் ரத்தத்தை இழக்கிறாள்.

1 comment: