கோவை விரிவான கதை
கோவை நகரம் என்பதற்கு 100 ஆண்டுக்கு முந்தைய அடையாளம் கோனியம்மன் கோயிலும், அதை சுற்றி அமைந்த ராஜ வீதி, கோட்டைமேடு, கெம்பட்டி காலனி, வெரைட்டிஹால் ரோடு, காட்டூர் ஆகிய பகுதி மட்டுமே. கோவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அப்போது பிளேக் நோய் பரவி ஏராளமான பேர் மடிந்தனர். பிளேக் நோய் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கென தனித்தனி குடியிருப்பு உருவாக்கப்பட்டது. கைத்தறி நெசவாளர்கள் அதிகமாக குடியேறிய பகுதி தேவாங்கர்பேட்டையானது. தற்போதைய ராம்நகர் பகுதியில் பிராமணர்கள் அதிகளவில் குடியேறியுள்ளனர். முன்பு அக்ராஹரம் என அழைக்கப்பட்டது. பின்னர் ராம்நகர் என மாற்றப்பட்டது.
வீடு இழந்த மக்களை குடியேற்றுவதற்காக மேட்டுப்பாளையம் ரோடு, தடாகம் ரோடு ஆகியவற்றுக்கு இடையே இருந்த 350 ஏக்கர் தோட்ட நிலத்தை நகரசபை நிர்வாகமே வாங்கி விசாலமான மனையிடங்களாக பிரித்து கொடுத்தது. அந்தப் பகுதி பின்னாளில் கோவை நகரசபை தலைவராக இருந்த ரத்தினனசபாபதி முதலியார் முயற்சியில் வாழ்வதற்கு ஏற்ற கட்டமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே அந்த பகுதிக்கு அவரது பெயரும் சூட்டப்பட்டது. அதேபோல் அப்போது நகரின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்களின் பெயரால் சாலைகளும் அமைக்கப்பட்டது. அப்போது ராமநாதபுரம், புலியகுளம், பாப்பநாயக்கன்பாளையம் போன்ற கிராமங்கள் தனித்தனியாக தான் இருந்தன. நாளடைவில் கோவை நகர வளர்ச்சியில் இந்த பகுதிகளும் இணைக்கப்பட்டன.
No comments:
Post a Comment