Thursday, 13 June 2013

வாழ்க்கை

ஒரு மனிதனின் நடப்பு வாழ்க்கையை, மூன்று பாகமாக பிரித்து பார்ப்போமேயானால், முதல் பாகம் அவரது ஜாதக அடிப்படையில் அமையும். இரண்டாவது பாகம் அவரது வாழும் வீட்டை பொறுத்த அடிப்படையில் அமையும். மூன்றாம் பாகம் அவரது சுய எண்ணங்கள், செயல்கள் பொறுத்து அமையும்.

இதை இன்னும் விரிவாக ஆராய்ந்து பார்த்தால், நமது ஜாதகம் நாம் பிறக்கும்போதே எழுதப்பட்ட ஒன்று. நாம் சென்ற பிறவியில், செய்த , பாவ, புண்ணியங்கள் இந்த பிறவியில், பன்னிரண்டு வீடுகளாகவும், ஒன்பது கிரகங்களாகவும்  , அமையும். நல்ல ஒரு ஜோதிடர் உங்கள் ஜாதகத்தை பார்த்து, ஆராய்ந்தால் , உங்கள் வாழ்வில், நடந்த, நடக்க விருக்கிற விஷயங்களை, தெள்ள தெளிவாக கூறி விட இயலும். சரி, நாம் சென்ற பிறவியில் சரியில்லை என்று, வைத்துக் கொள்வோம். நம் ஜாதகம் சரியாக அமையாது. லக்கினத்தில் இருந்து, ஐந்தாம் வீட்டை வைத்து, இதை தெரிந்து கொள்ளலாம். ஐந்தாம் வீடும், ஐந்துக்கு உரிய கிரகமும் பலம் கெட்டுப்போகாமல் , இருந்தாலே அவர் சென்ற பிறவியில் நல்ல செயல்கள் செய்து இருப்பவராகவே இருந்து இருப்பார். ஐந்தாம் வீட்டுக்கு உரிய கிரகம் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தால் , அவர் நிறைய புண்ணியங்கள் செய்து இருக்க வேண்டும்.
நாம் இந்த பிறவியில் செய்யும், நல்ல காரியங்கள் , புண்ணியங்கள் அனைத்தும் , நமது அடுத்த பிறவியின் ஐந்தாம் வீட்டை தீர்மானிக்கும்.

சரி, ஜாதகம் சுமார் தான். மீதி இருக்கும் இரண்டு விஷயங்கள் நல்ல விதமாக அமைந்தாலே, அவர் வாழ்க்கையில், மிக உயர்ந்த நிலையை அடைய இயலும். வாஸ்து சாஸ்திரப்படி , சரியாய் அமைந்த வீடு, ஒரு மனிதனின் எண்ணங்களையும், செயல்களையும் மிக நல்ல வழிக்கு கொண்டு சென்று, அவரை வெற்றி வீரனாக அடையாளம் காட்டும்.

எத்தனை இன்னல்கள் , துயரங்கள் வந்தாலும், அநியாய , அதர்ம வழிகளில், செல்லாமல், நல்ல எண்ணங்களும் , செயல்களும், செய்பவர்களும் , வாழ்க்கையில், நல்ல நிலைகளை அடைவர்.

மூன்றில், இரண்டு சரியாக அமைந்தாலே, அவர் ஜெயிப்பது சர்வ நிச்சயம். மூன்றுமே அமைந்தால், உலகமே அவரை போற்றி புகழும்.
இப்போது, சொல்லுங்கள். நம் வாழ்க்கை நம் கையில் தானே. நல்ல வீடும், நல்ல எண்ணங்களும், நாம் நினைத்தால் நம் விருப்பப்படி மாற்றி கொள்ளலாமே.

சரி. முதல் ஒரு பாகமான, ஜாதகம் - இதை என்ன செய்வது? நமது, ஜாதகத்தை நன்றாக அலசி, ஆராய்ந்து தக்க பரிகாரங்கள் செய்து , அந்த பாதிப்பையும் ஓரளவுக்கு குறைத்து கொள்ளலாம். ஒரு நல்ல ஜோதிடர் அவ்வளவு எளிதில் பரிகாரங்கள் சொல்ல மாட்டார். ஏன் எனில், அதனால் அவருக்கும் ஓரளவுக்கு அதனால் பாதிப்பு ஏற்படும்.

No comments:

Post a Comment