Thursday, 13 June 2013

கேது அல்லது ராகு இவர்களுடன் சந்திரன்

ஒருவரது ஜாதகத்தில் கேது அல்லது ராகு இவர்களுடன் சந்திரன் ஒரே இடத்தில் சேர்ந்து இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே இதுதான் இதன் பலன் என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் மற்ற கிரக சேர்க்கையை விட மன காரகன் சந்திரனோடு கேது அல்லது ராகு சேர்ந்திருக்கும் அமைப்பு சற்று விசித்திரமானது என்றுதான் சொல்ல வேண்டும்.

காரணம் பல ஞானிகள் ஜாதகத்திலும் இந்த அமைப்பு காணப்படுகிறது. பல குற்றவாளிகள் ஜாதகத்திலும் இந்த அமைப்பு காணப்படுகிறது. மன நிலை பிறழ்ந்தவர்கள் பலருடைய ஜாதகத்திலும் இந்த அமைப்பு காணப்படுகிறது.

இது எதனால் என்றால், கேது ஞானகாரகன் என்ற அடிப்படையில் ஞானத்தைக் கொடுக்கவும் செய்வார். பாபக் கிரகம் என்ற அடிப்படையில் குணத்தைக் கெடுக்கவும் செய்வார். மனகாரகனாகிய சந்திரனுக்கு கொடிய பகைவர் அடிப்படையில் மனநிலைப் பாதிப்பையும் உண்டாக்குவார். ஆக சந்திரன் கேது அல்லது ராகு சேர்க்கை என்பதை ஜாதகத்தில் உள்ள இதர அமைப்புகளை வைத்துதான் தீர்மானிக்க வேண்டும்.

No comments:

Post a Comment