Thursday, 11 July 2013

வக்சிங் செய்ய முன்னர் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய விடயங்கள்!

மென்மையான வழுவழுப்பான சருமத்தை யார் தான் விரும்ப மாட்டார்கள்? அனைவரையும் ஈர்க்க கூடியது மிருதுவான சருமம் தான். எவ்வளவு தான் அழகு சாதனங்கள் கொண்டு சருமத்தை அழகுப்படுத்தினாலும், சிறிய அளவில் உள்ள ரோமங்கள் சருமத்தின் மென்மைத் தன்மையை கெடுத்துவிடும். எனவே அனைவரும் அத்தகைய ரோமங்களை நீக்கவே விரும்புவர். அதற்காக உபயோகிக்கும் முறை தான், மெழுகினால் முடி நீக்கம் செய்யபடும் வேக்சிங். வேக்சிங், உடலில் தேவையற்ற முடிகளை தற்காலிகமாக நீக்கும் பிரபலமான ஒரு முறையாகும். இது பெரும்பாலானோர் நினைப்பது போல் நவீன முறை அல்ல.
எகிப்திய பெண்கள் தங்கள் உடலில் சிறு முடிகளை நீக்க பயன்படுத்திய பண்டைய முறையே ஆகும். ஷேவிங் செய்வது போல் அல்லாமல், வேக்சிங் முறையில் முடி மீண்டும் வளர மூன்று முதல் எட்டு வாரங்கள் வரை பிடிக்கும். இது மற்ற முடிகளை நீக்கும் முறைகளில் சாத்தியம் இல்லை.
வேக்சிங் வகைகள்
வெதுவெதுப்பான அல்லது சூடான வேக்சிங்: இது மிகவும் பொதுவான முறையாகும். இந்த முறையில் பயன்படுத்தப்படும் மெழுகில் முடிகளை இலகுவாக நீக்கக்கூடிய சர்க்கரை சேர்ந்து இருக்கும். இது குளிர் வேக்சிங்கை விட மிகவும் ஆற்றல் வாய்ந்த முறையாகும். பெரும்பாலான அழகு நிலையங்களில் செய்யப்படும் வேக்சிங்கும் இது தான். குளிர் வேக்சிங்: இந்த வகையில் பயன்படுத்தப்படும் மெழுகு எல்லா மருந்து கடைகளிலும் எளிதில் கிடைக்கக்கூடியது. இந்த முறை பெரும்பாலான மக்களால் வீட்டிலேயே செய்யப்படுவது.
வேக்சிங் செய்யப்படும் பொதுவான முறை
சருமத்தில் வளரும் தேவையற்ற முடியின் மீது, முடி வளரும் திசையை நோக்கி மெழுகை ஒரு மெல்லிய அடுக்காக பரப்ப வேண்டும். பின்பு ஒரு துணி அல்லது காகித துண்டு கொண்டு மெழுகு மேல் அழுத்தி, முடி வளரும் திசைக்கு எதிரான திசையில் மிக விரைவாக நீக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மெழுகு முடியை பற்றி இழுத்து, முடியை நீக்கி மென்மையான சருமத்தைப் பெற வைக்கிறது.
வேக்சிங் செய்வதில் உள்ள படிநிலைகள்
பின்வரும் படிநிலைகளே கை, கால் மற்றும் வயிற்று பகுதிகளில் செய்யப்படும் வேக்சிங்கிற்கான படிநிலைகள்:
* முதலில் சரும வகைக்கு ஏற்ற மெழுகினை (wax) வாங்க வேண்டும்.
* அவ்வாறு வாங்கும் மெழுகை மெலிதாக சூடேற்ற வேண்டும். அதிக அளவில் சூடுபடுத்தக் கூடாது. ஏனெனில் அது தீக்காயங்களை உண்டாக்கிவிடும்.
* பின்பு கை கால்களை கழுவி, சுத்தப்படுத்தி உலர வைக்க வேண்டும்.
* அடுத்து சூடாக்கிய மெழுகு குளிரும் முன்பு, வெதுவெதுப்பாக நிலையில் கால்களில் முடி வளரும் திசையை நோக்கி, அதை தடவ வேண்டும்.
* இப்போது பருத்தி துணி அல்லது காகிதத் துண்டை எடுத்து, மெழுகு தடவிய பகுதிகளில் வைத்து, மெழுகு சிறிது குளிரும் வரையில் அழுத்த வேண்டும்.
* பின்னர் மெழுகின் மேல் வைத்துள்ள துணி அல்லது காகிதத்தை முடி வளரும் திசைக்கு எதிர் திசையில் நீக்க வேண்டும்.
வேக்சிங் செய்வதில் உள்ள படிநிலைகள்
* இவ்வாறு முடி நீக்கப்பட்ட பின்பு, அந்த இடத்தில் ஒரு ஈர துணியை வைக்க வேண்டும்.
* மேலே கூறப்பட்ட படிநிலைகளை சருமத்தில் உள்ள முடி முழுவதும் நீங்கும் வரை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.
* அவ்வாறு நீக்கிய பின் மாய்ஸ்சுரைசர்களைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக முகம் மற்றும் புருவங்களை நீக்க செய்யப்படும் வேக்சிங்கை, அழகு நிலையங்களில் செய்வதே சிறந்தது. வீட்டில் செய்ய நினைப்பது அவ்வளவு நல்லதல்ல.
எச்சரிக்கை
* நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இரத்த ஓட்டம் சீரான நிலையில் இல்லாதவர்கள் வேக்சிங் செய்யக்கூடாது.
* ரெட்டின் ஏ (Retin A), ரெனோவா (Renova), டிஃப்பரின் (Differin) மற்றும் ஐசோட்ரீட்டினோயின் (Isotretinoin) போன்ற மருந்துகளை உட்கொள்பவராய் இருந்தால், வேக்சிங் செய்யக்கூடாது.
* மரு, முகப்பரு மற்றும் வேனிற்கட்டிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேக்ஸ் செய்யக்கூடாது.
* சீரற்ற சருமம் அல்லது வீங்கமடைந்து வலிக்கும் நிலையில் உள்ள நரம்புகள் மீது மெழுகை தடவ வேண்டாம்.
நன்மைகள்
வேக்சிங் முறையில் முடி மீண்டும் வளர 3-8 வாரங்கள் வரை பிடிக்கும். மேலும் அவ்வாறு வளரும் முடிகளும் மென்மையானதாய் தான் வளரும்.
* ஷேவிங் போன்ற முறைகளுடன் ஒப்பிடும் போது, இம்முறையில் வெட்டு காயங்கள் ஏற்படுவதில்லை.
* இந்த முறையால் தேவையற்ற முடிகளை நீக்குவது மட்டுமல்லாமல், சருமத்தில் உள்ள இறந்த செல்களானது நீங்கி, சருமம் மிருதுவாக இருக்கும்.
* குறிப்பாக சரியான இடைவெளியில் செய்யப்படும் வேக்சிங், முடியின் வளர்ச்சியை மட்டுப்படுத்தும்.
குறைபாடுகள்
* வேக்சிங், சருமத்தில் வளரும் முடியை நீக்குவதற்கான, தற்காலிகமான முறை மட்டுமே தவிர, நிரந்தர முறை அல்ல.
* மெழுகில் இருந்து துணியை அப்புறப்படுத்தும் போது, கடுமையான வலி ஏற்படும்.
* ஷேவிங் போன்ற முறைகளை விட, வேக்சிங் சற்றே விலை உயர்ந்தது.

No comments:

Post a Comment