Monday, 22 July 2013

சனி

சனி  மற்றும் சந்திரன் நீர் ராசிகளில்
(கடகம், விருச்சிகம், மீனம்) இருந்தால்
குறட்டை அல்லது பெருமூச்சு
விடுவார்கள்.

சனியும் செவ்வாயும் பரஸ்பர
பார்வை பெற்று
இருந்தால் அந்த ஜாதகர்
என்றும் மன நிம்மதி இல்லாது
தவிப்பார். எந்த பரிகாரமும்
பயன் தராது. 

சனி ஒன்று/ஐந்து/ஒன்பது
ஆகிய இடங்களில் இருந்து
அவரை குரு பார்த்தால்
அந்த ஜாதகர் மத சின்னம்
அணிந்து இருப்பார்.

சனி லக்னத்தில்
இருந்தால்
அவர்கள் சின்ன சின்ன
விஷயங்கட்கு
ஆசைப்பட மாட்டார்கள்

இளமையில் சனி  திசை
நடக்கும் ஜாதகர்
பிற்காலத்தில்
நீதிமானாக மாறுவார்.

லக்னத்தில் சனி இருந்து
மற்ற கெட்ட கிரகங்களின்
தொடர்பு இருப்பின்
உடலில் குறை இருப்பினும்
மன வலிமை அதிகமுண்டு.

சனி பார்வையில் சுக்ரன் இருந்தால்
தாம்பத்ய சுகம் சிறிது குறைவாகவே
இருக்கும். மனசை தேத்திக்குங்க.
வாங்கி வந்த வரம் அவ்வளவுதான்.


சனி தனுசு ராசியில்
இடம் பெற்ற ஜாதகர்கள்
மத நம்பிக்கை உள்ளவர்களாகவும்
ஞானம் உள்ளவர்களாகவும்
இருப்பர்.



சனி ஏழில் இருந்தால் ஜாதகருக்கு 
ஜாதகரைவிட 
வசதி குறைவான / 
அழகு குறைவான /
படிப்பு குறைவான 
மனைவி அமைவாள்.

சனி ஐந்தில் இருப்பின் சுகம் பாராமல் காரியம்
செய்வார்  - சுய சிந்தனையாளர் பிற்கால ஞானி.

சனி இரண்டில் கெட்டு இருந்தால் சனி தசை
சனி புக்தியில் புத்தி மாறி வீட்டை விட்டு
போவார்கள்.

பத்தில் கேது இருந்து லக்ன சனி
பார்த்தால் இளவயது சாமியார்

செவ்வாய் - சனி ஒன்று அல்லது ஏழில் சம சதாப்ம
பார்வை பெற்றால் காதல் திருமணம், இவர்களை
குரு பார்த்தால் பெற்றோர் சம்மதம் தெரிவிப்பர்

சனி சந்திரன் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால்
அல்லது சனி சாரம் பெற்றால் திருமணம் தாமதம்
ஆகும்.

சனி, கேது சேர்ந்து இருந்தால் முடியாத
வேலையையும் முடிப்பவர், வேலையில்
ஆர்வம் காட்டுபவர். (Workmanship)

லக்னத்திற்கு இரண்டில் சனி இருந்தால் வறுமை
இந்த சனியுடன் கேது கூடினால் வெறுமை

No comments:

Post a Comment