Friday, 2 August 2013

சனியும் ராகுவும் நெருங்க நெருங்க

9.9.2013 வரை சனி ராகு கிரகங்கள் மிக குறுகிய பாகையில் நெருங்கிபோகின்றன..இவை மோசமானது ..பெரிய அழிவையும்,கொடூரமான விபத்தையும்,மோசமான தீவிரவாத செயலையும்,இயற்கை சீற்றத்தையும்,பெண்களுக்கு எதிரான பெரிய கொடுமையும் சொல்கிறது...அன்றைய கிரக நிலையை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் சனி,ராகு,சுக்கிரன் சேர்ந்தது மட்டுமில்லாமல் செவ்வாயும் பாவை செய்கிறார்...

சனியும் ராகுவும் நெருங்க நெருங்க மிக மோசமான செயல்கள் உலகில் வழக்கத்தை விட அதிகம் நெருங்கும் செவ்வாய் நெருங்க தீவிபத்துகள் நடக்கும்...சுக்கிரன் சேர பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் இப்போ சனியும் ராகுவும் துலாம் வீடான சுக்கிரன் வீட்ல இருப்பதுதான் பெண்களுக்கு எதிரான குற்ரச்செயல்கள் நடக்குது...சனிப்பெயர்ச்சி அல்லது ராகுபெயர்ச்சி வரை இதுதான் நிலை..அதாவது குற்றவாளிகள் கை ஓங்குகிறது..சனி கீழ்தரமானவர் என்றால் ராகு அதிக துணிச்சல் நிறைந்த எதை பத்தியும் கவலைப்படாத திருட்டுத்தனமானவர்...இவங்க பெண்ணுடன் சேர்ந்தா அப்படித்தான்...இவங்க ஒருவரை ஒருவர் நெருங்க நெருங்க உல்கைல் கலவரம்,பெரும் சோதனை தொடரும்...செப்டம்பர் மாதத்தில் ரொம்ப நெருங்குறாங்க..அதுதான் கவலை தரும் செய்தி.

1 comment: