Friday, 2 August 2013

கணவன் பேச்சை கேட்கும்...பெண்

திருமண பொருத்தம் பார்க்கும்போது,குரு எந்த ராசியில் இருக்கோ அதே ராசியில் பெண்ணுக்கும் குரு இருந்தால் இணை பிரியாத தம்பதிங்க..அவ்ளோ காதல் இருவருக்கும் இருக்கும்..அல்லது குரு இருக்கும் ராசியில் பொண்ணுக்கு சந்திரன் இருக்கணும்...உதாரணமா பையனுக்கு கடகத்துல குரு இருக்குன்னு வெச்சிக்குவோம்..பொண்ணுக்கு கடக ராசியா இருக்கனும்..அதே போல,.ராகு எந்த ராசியில் இருக்கோ அதே ராசியில் பெண்ணுக்கும் ராகு இருந்தா கல்யாணத்துக்கு பிறகு,அவ்ளோ அடிதடி..பூரிக்கட்டை அடி..மண்ட காயம் உண்டாகும்...கணவன் ராசிக்கட்டத்தில் குரு எங்கோ இருக்காரோ அதில் இருந்து மனைவி ஜாதகத்தில் சந்திரன் 1,5,7,9ல் இருந்தா கணவன் பேச்சை கேட்கும்...இல்லைன்னா போடா வேலையை பார்த்துக்கிட்டுன்னு சொல்லிரும்!!குரு ராகு சேர்க்கை ஜாதகத்தில் எந்த ராசியில் இருக்கோ அந்த ராசிக்குறிய பலன்கள் பாதிக்கப்படும் காலையில் ஒரு பெண் ஜாதகம் பார்க்க நேர்ந்தது அவருக்கு 4ல் குரு ராகு...குரு குழந்தை பாக்யம் பற்றி சொல்லக்கூடிய முக்கிய கிரகம் அவர் தான் நாகரீகம்,ஆன்மீகம்,ஒழுக்கம் பற்றியும் சொல்லக்கூடியவர்...பணபலத்தையும்,செல்வாக்கையும் குறிப்பவர்...அவருடன் ராகு சேர்ந்து இருக்கும்போது மேற்க்கண்ட பலன்கள் பாதித்தது...அப்பெண் 4 முறை அபார்சன் செய்துகொண்டார்...ஒரு ஆண் குழந்தை அதன் பின் பிறந்தது...பின் கர்ப்பப்பை பாதிப்பால் ஆப்ரேசன் செய்து அதை அகற்றும் சூழல் உண்டானது...அவர் கணவன் வங்கியில் நல்ல பணியில் இருந்தாலும் இவர் பணத்தையெல்லாம் தன் உறவினர்களுக்கு தானம் வழங்கியதால் கடன் உண்டானது...இப்போ பண நெருக்கடி..குழந்தை இவர் சொல் கேட்பது இல்லை மிக அதிக பிடிவாதம்..குரு ராகு இணைந்ததால் குழந்தை சார்ந்த பிரச்சினைகள்,பண நெருக்கடி,அடிக்கடி மருத்துவ செலவு காரணம் சுக ஸ்தானம் 4ல் இவர்கள் கூடி இருந்ததுதான்....!!

No comments:

Post a Comment